நூல்கள்

 

— பேயோன் (@ThePayon) November 1, 2013

*

மாப்பிள்ளைக்குக் காராபூந்தி பிடிக்கும்

கவிஞரின் இதற்கு முந்தைய கவிதைத் தொகுப்புகளைவிட அதிகமான கவிதைகள் கொண்ட தொகுப்பு இம்மின்னூல். இந்த 60க்கு மேற்பட்ட கவிதைகளின் நீளம் மட்டுமின்றி வரிகளின் சராசரி அகலமும் அதிகரித்துள்ளது. எனவே உங்களுக்குக் கவித்துவமும் கூடுதல். தரவிறக்க: epub | mobi | kindle pdf | pdf | உலாவியில் படிக்க

japonaise

A small collection of short poems inspired by great Japanese haiku masters and artists. Read here or download. ஜப்பானிய ஹைக்கூ கவிஞர்களின் தூண்டலில் எழுதப்பட்ட குறுங்கவிதைகள். தரவிறக்க: epub | உலாவியில் படிக்க

அதிர்ஷ்டம் உன் காயங்களை ஆற்றும்

மகத்தான துண்டிலக்கியத் தொகுப்பு நூல். அவநம்பிக்கையின் நியாயத்தையும் அருமைபெருமைகளையும் எடுத்துரைக்கும் பொன்மொழிகள், சிந்திக்கும் திறனுள்ளவர்களின் வேதனையை உசுப்பிப் பார்க்கும் கருத்துரைகள், நிறுத்தக்குறிக் கவிதைகள், குறிப்பாக எந்த அர்த்தமும் இல்லாத கூற்றுகள், அன்றாட வாழ்வியல் எழுப்பும் கேள்விகள் ஆகியவை உள்ளிட்ட அம்சங்கள் தோராயமாக ஐம்பது பக்கங்களில் அடங்கிய மின்னூல். தரவிறக்க: epub | mobi | kindle pdf | pdf | பிற கோப்பு வடிவங்கள் | உலாவியில் படிக்க

பெரும்பாலும் குறுங்கவிதைகள்

எண்ணிலடங்கா (தோராயமாக 32) குறுங்கவிதைகள், சாதாரண அளவுக் கவிதைகள், ஒரு நீள்கவிதை ஆகியவை அடங்கிய அரிய கவிதைத் தொகுப்பு. பிரசுரிக்கப்படாத கவிதைகளைக் கொண்ட மின்னூல். தரவிறக்க: epub | mobi | kindle (pdf) | பிற கோப்பு வடிவங்கள் | உலாவியில் படிக்க

பூனைக் கன்றுகள் அழகல்ல

‘ஒரு லோட்டா இரத்தம்’ அச்சுப் பதிப்பில் உள்ள நெடுங்கதையைத் தவிர மற்ற படைப்புகள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்த மின்னூலில் உள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட படைப்புகளில் (சரியான எண்ணிக்கை 51) மூன்று நீண்ட நெடுங்கதைகளும் ஒரு நாடகமும் அடக்கம். கோட்டோவியங்களுடன் கூடியது. தரவிறக்க: epub | mobi | kindle (pdf) | உலாவியில் படிக்க

 

38 கவிதைகள்

இந்த ஆண்டுக்கான கோட்டாவைப் பூர்த்தி செய்வதற்காக அவசரமாக உருவாக்கப்பட்ட கவிதைத் தொகுப்பு. ஆசிரியரின் வலைத்தளத்தில் வெளிவராத கவிதைகள் அடங்கியது. பல குறுங்கவிதைகள் மற்றும் நீள்கவிதைகளுக்கு சொந்தக்காரம். தரவிறக்க: epub | mobi | பிற கோப்பு வடிவங்கள் | உலாவியில் படிக்க

 

சாவின் டைப்பிஸ்ட்

டிசம்பர் 2013 முதல் டிசம்பர் 2014 வரை எழுதப்பட்ட ட்விட்டர் நுண்பதிவுகள் மற்றும் குறும்படைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவையின் தொகுப்பு. தரவிறக்க: epub | mobi | பிற கோப்பு வடிவங்கள் | உலாவியில் படிக்க

வாழ்க்கையின் அர்த்தம்

துப்பறியும் கதைகளை விட்டு வாழ்வியலுக்குள், தத்துவத்திற்குள், மன உலகுக்குள் அடியெடுத்து வைக்கிறது எனது சமீபத்திய நூல். அன்றாட வாழ்க்கையில் அறியவரும் உண்மைகள், கனவுக்கும் புனைவுக்கும் இடையே தத்தளிக்கும் கணங்கள், மொழியின் போதாமைகள், குழந்தைகள் என விரிகிறது இந்நூலின் எழுத்துலகம். 2013ஆம் ஆண்டுக்கான ‘திசைகாட்டிப் பறவை’ விருது பெற்றது. தரவிறக்க: epub | mobi | பிற கோப்பு வடிவங்கள் | உலாவியில் படிக்க

 

ஒரு லோட்டா இரத்தம் (நெடுங்கதை)

தமிழின் ஒழுங்கான முதல் இலக்கிய திரில்லர். வான்கா, செக்காவ், தாஸ்தாயெவ்ஸ்கி போன்ற கிளாசிக் ஆளுமைகள் மர்மமான முறையில் குரூரமாகக் கொல்லப்படுகிறார்கள். கொல்வது யார்? ஓர் ஆளா அல்லது ஓர் உலகளாவிய இயக்கமா? இன்டர்போல் துப்பறிகிறது. விறுவிறுப்பானக் கதை என்கிறார்கள். தரவிறக்க: epub | Kindle (mobi) | பிற கோப்பு வடிவங்கள் | உலாவியில் படிக்க

இந்தா பிடி இன்னும் 50

இந்த ஆண்டின் மிக முக்கியமான கவிதைத் தொகுப்பிது. பாரம்பரியத் தமிழ் மண்ணிலிருந்து கலாச்சாரங்களின் குழப்பமான கலவைப் பூமியான நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்ந்த மனங்களை ஆழம் பார்க்கிறார் கவிஞர். மற்றும் உலகமயமாக்க வாழ்நிலைச் சூழல்களில் உறவுகளின் மாறுநிலைகள் தனிநபர் ஊடாட்டங்களில் நீர்மிப்பது பற்றி வார்த்தைகளின் வரம்புகளைக் கறாராக மீறும் மொழியில் பேசும் கவிதைகளும் இல்லாமல் இல்லை. தரவிறக்க: epub | Kindle (mobi) | இங்கும் வாழ்கிறது | உலாவியில் படிக்க

குமார் துப்பறிகிறார்

கொடூரக் கொலைகள். திடுக்கிடும் திருட்டுகள். கருணையற்ற கணவர்கள். சதிகார சகதர்மிணிகள். புல்லுருவிப் புத்திரர்கள். ஆட்கொல்லி ஆயுதங்கள். துணிகரத் துப்புகள். தமிழகத்தின் முன்னணி துப்பறியும் நிபுணரான இன்ஸ்பெக்டர் குமாரின் விசித்திர உலகம் இக்கதைகளில் விரிகிறது. அச்சிலும் இந்த வலைத்தளத்திலும் வெளிவராத ஒரு கதை அடங்கியது. மின்வெளியீடு, பிப்ரவரி 2014. தரவிறக்க: epub | Kindle (mobi) | பிற கோப்பு வடிவங்கள் | உலாவியில் படிக்க

பிரிட்டிஷ் ஏஜெண்ட்

எழுத்தில் வாழ்நாள் சாதனைக்காக யுனெஸ்கோவின் ‘இப்படியெல்லாம்கூடவா எழுதுவார்கள்?’ விருது பெற்ற ஒரே எழுத்தாளரின் புதிய நூல். அச்சில் கிடைக்காமல் இலவச மின்னூலாக மட்டுமே கிடைப்பது இந்நூலின் தனிச் சிறப்புகளில் ஒன்று. ஆசிரியர் 2013இல் எழுதிய படைப்புகளில் பலவற்றின் தொகுப்பான இப்புத்தகத்தைப் படிக்கும்போதே 2013ஆம் ஆண்டு உலக வரலாற்றில் எவ்வளவு முக்கியமானது என்று அறியலாம். எழுதத் தொடங்கியதிலிருந்து ஒவ்வோர் ஆண்டையும் உலக வரலாற்றில் இடம்பெறச் செய்துவிடும் இவரது புதிய படைப்பு இப்போது தமிழில் கிடைக்கிறது. மின்வெளியீடு, ஜனவரி 2014. தரவிறக்க: epub | Kindle (mobi) | பிற கோப்பு வடிவங்கள் | உலாவியில் படிக்க

சாட்டையடித் தோலுரிப்பில் கிழிந்து தொங்கும் முகமூடிகளும் வாழ்க்கையின் நிதர்சனம் சக்கையாகப் பிழிந்துபோட்ட சுயங்களும்

மின்னூல். 2011க்குப் பின்பு எழுதிய பிரசுரிக்கப்படாத ட்விட்டர், டம்ளர் நுண்பதிவுகளின் தொகுப்பு. ஆழமான சிந்தனைகள், தீர்க்கமான பார்வைகள், அழுத்தமான விமர்சனங்கள், கற்பனையான புனைவுகள் முதலியவை அடங்கிய நூலாகும். மின்வெளியீடு, டிசம்பர் 2013. தரவிறக்க: pdf | epub | Kindle (mobi) | ஆண்ட்ராய்டு நிரல் | உலாவியில் படிக்க

பேயோன் 1000

ட்விட்டர் நுண்பதிவுகளின் தொகுப்பு. பொன்மொழிகள், திரை விமர்சனங்கள், குறும்பத்திகள், சிறுகதைகள், நூல் மதிப்புரைகள், கவிதைகள், மொழியாக்கங்கள், அவதானிப்புகள், டைரிக் குறிப்புகள், அறிவுரைகள், இணைய சுட்டிகள், கோட்டோவியங்கள் ஆகியவை அடங்கிய சுமார் 1000 ட்வீட்கள். வெளியீடு: ஆழி பதிப்பகம், மே 2010. தரவிறக்க: pdf | zip| Kindle (mobi)

திசை காட்டிப் பறவை

நெடுங்கதை, அறிவியல் புனைவு, பயண இலக்கியம், உலக இலக்கிய அறிமுகங்கள், பத்திகள், கையேட்டுக் கட்டுரை, நூல் மதிப்புரை, சிறுகதைகள், புனைகட்டுரைகள், டைரிக் குறிப்புகள், ஒரு அகராதி, நெகிழுரைகள், கடிதங்கள், ட்விட்டர் நுண்பதிவுகள் ஆகியவை அடங்கிய உரைநடைத் தொகுப்பு. வெளியீடு: ஆழி பதிப்பகம், ஜனவரி 2011. ஃபேஸ்புக் பக்கம்ePub | PDF | Kindle (mobi) | உலாவியில் படிக்க

பாம்புத் தைலம்

சிறுகதைகள், புனைகட்டுரைகள், திரை விமர்சனங்கள், செய்யுள்கள், செய்யுள் உரைகள், திரைக்கதை, உள்ளூர், உலக சினிமா, இசை பற்றிய கட்டுரைகள், நெகிழுரைகள், ட்விட்டர் நுண்பதிவுகள், டைரிக் குறிப்புகள் ஆகியவை அடங்கிய உரைநடைத் தொகுப்பு. வெளியீடு: ஆழி பதிப்பகம், ஜனவரி 2012.

 

 காதல் இரவு

நூற்றுக்கணக்கான கவிதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு. இந்நூலில் சமூக அவலங்களைச் சாடி போலித்தனங்களைத் தோலுரிக்கும் சாட்டையடி கவிதைகளை எழுதியுள்ள கவிஞர், காதல் சார்ந்த உயிர் உருகல்களையும் நினைவுகூறுதல்களையும் வாசக மனோபாவத்திடம் முன்வைக்கிறார் ஆசிரியர். வெளியீடு: ஆழி பதிப்பகம், ஜனவரி 2012.

ஒரு லோட்டா இரத்தம்

துப்பறியும் கதைகள், ராமாயணக் கதை, குறுங்கட்டுரைகள், பயணக் கட்டுரைகள், கையேடுகள், ஜென் கதைகள், திருக்குறள் மற்றும் கம்பராமாயண உரைகள், மொழியாக்கம், வாசகர் கடிதம், அஞ்சலி, அனுபவப் பகிர்வுகள், தத்துவார்த்தங்கள் எனப் பலதரப்பட்ட படைப்புகள் அடங்கிய உரைநடைத் தொகுப்பு. வெளியீடு: ஆழி பதிப்பகம், ஜனவரி 2013. எனது இந்த ஐந்து புத்தகங்களும் புத்தகக் கடைகளில் கிடைக்கும். மற்ற புத்தகங்கள் பல்வேறு இடங்களில் உள்ள வெவ்வேறு புத்தகக் கடைகளில் கிடைக்கும்.

நள்ளிரவும் கடலும் நானும்

தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு. ‘காதல் இரவு’க்குச் சற்றும் சளைக்காத கவிதைத் தொகுப்பு என்று முன்னணி விமர்சகரான ஆசிரியரால் பரிந்துரைக்கப்பட்டது. மின் வெளியீடு, டிசம்பர் 2012. தரவிறக்க: epub | pdf | Kindle (mobi) | உலாவியில் படிக்க

இந்நூல்களில் பலவற்றை Free Tamil Ebooks வலைத்தளத்திலிருந்தும் தரவிறக்கலாம்.

மின்னூல்களை உலாவியில் படிக்க உதவும் BiB/i நிரலை உருவாக்கியவர் சாட்டோரு மட்ஸுஷிமா. #நன்றி

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar