மின்னூல் நிரல்

பரிசோதனை முயற்சியாக, ‘சாட்டையடித் தோலுரிப்பில் கிழிந்து தொங்கும் முகமூடிகளும் வாழ்க்கையின் நிதர்சனம் சக்கையாகப் பிழிந்துபோட்ட சுயங்களும்’  என்ற எனது நூலை ஆண்ட்ராய்டு மின்னூலாக ஆக்கியிருக்கிறேன்.

உள்ளடக்கம் நிறைய இருப்பதால் நான்காகப் பிரித்திருக்கிறேன் (படம்). இந்த நிரலைப் பயன்படுத்த இணைய இணைப்பு தேவையில்லை. இணைய இணைப்பு வேண்டும் என்று நிரல் கேட்டால் நிராகரிக்கலாம். நிரல் வேகமாகச் செயல்படுகிறது. ஆனால் cache அளவு தேவையில்லாமல் 2 எம்.பி. இருப்பது சுவராசியம். ஒவ்வொரு பக்கத்திலும் விளம்பரம் இருப்பதைத் தவிர்க்க முடியவில்லை.

Moon+ Reader போன்ற, யூனிகோடு பிரச்சினை இல்லாத ஒரு வாசிப்பு நிரலின் மூலம் epub கோப்பில் படிப்பதுதான் இந்த நூலைப் படிக்க மிகச் சிறந்த வழி. epub, PDF இரண்டையும் விரும்பாதோருக்காக இந்த நிரல்.

இந்த நூலின் அடுத்தடுத்த பதிப்புகளை கூடுதல் துண்டிலக்கியத்துடன் நான்கைந்து மாதங்களுக்கு ஒருமுறை வெளியிட உத்தேசம்.

இந்நிரலும் கூகுள் பிளேயில் காணப்படாது. நிரலின் எடை சுமார் 1.4 எம்.பி. இதை நிறுவும் முறையை இங்கே காணலாம்.

தரவிறக்க

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

கே. தமிழின் ஆகச்சிறந்த எழுத்தாளரின் இந்த ஆண்ட்ராய்டு நிரலைத் தரவிறக்கிப் பயன்படுத்த விலை என்ன?

ப. இது இலவச மென்பொருளாகும். ஆனால் விளம்பரங்களுடன் கூடியது.

கே. சமகாலத் தமிழ் இலக்கிய மேதை ஒருவரின் நிரலாகிய ThePayonஐ கூகுள் பிளேயிலிருந்து அல்லாமல் வேறு எங்கிருந்தோ தரவிறக்குவது பாதுகாப்பானதா?

ப. ஆமாம், அப்படித்தான். ஆண்ட்ராய்டு நிரல்களைத் தரவிறக்க கூகுள் பிளே தவிர அமேஸான், சோனி செலக்ட் போன்ற பல சந்தைக்கடைகள் உள்ளன. இந்த நிரலை உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட Andromo வலைச் சேவையை வழங்கும் Indigo Rose நம்பகமான நிறுவனமாகத் தெரிகிறது.

கே. தமிழ் இலக்கியத்தின் போக்கை அடியோடு மாற்றியவரான உங்கள் ஆண்ட்ராய்டு நிரலில் வரும் விளம்பரங்களில் சம்பாதிக்கிறீர்களா?

ப. இந்த நிரலை உருவாக்கும் சேவையை இலவசமாக அளிக்கும் நிறுவனம்தான் இந்த விளம்பரங்களால் பணம் ஈட்டுகிறதே தவிர நான் அல்ல.

எச்சரிக்கை: இந்த நிரலில் வெளிவரும் விளம்பரங்களின் உள்ளடக்கத்திற்கும் அவற்றில் உள்ள சுட்டிகளுக்கும் நான் பொறுப்பல்ல. விளம்பரங்களை க்ளிக் செய்வது, தரவிறக்குவது ஆகியவற்றை உங்கள் சொந்த அபாயத்தில் செய்ய வேண்டும்.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar