பேயோன் 1000
ட்விட்டர் நுண்பதிவுகளின் தொகுப்பு. பொன்மொழிகள், திரை விமர்சனங்கள், குறும்பத்திகள், சிறுகதைகள், நூல் மதிப்புரைகள், கவிதைகள், மொழியாக்கங்கள், அவதானிப்புகள், டைரிக் குறிப்புகள், அறிவுரைகள், இணைய சுட்டிகள், கோட்டோவியங்கள் ஆகியவை அடங்கிய சுமார் 1000 ட்வீட்கள். வெளியீடு: ஆழி பதிப்பகம், மே 2010.
திசை காட்டிப் பறவை
நெடுங்கதை, அறிவியல் புனைவு, பயண இலக்கியம், உலக இலக்கிய அறிமுகங்கள், பத்திகள், கையேட்டுக் கட்டுரை, நூல் மதிப்புரை, சிறுகதைகள், புனைகட்டுரைகள், டைரிக் குறிப்புகள், ஒரு அகராதி, நெகிழுரைகள், கடிதங்கள், ட்விட்டர் நுண்பதிவுகள் ஆகியவை அடங்கிய உரைநடைத் தொகுப்பு. வெளியீடு: ஆழி பதிப்பகம், ஜனவரி 2011. ஃபேஸ்புக் பக்கம்
பாம்புத் தைலம்
சிறுகதைகள், புனைகட்டுரைகள், திரை விமர்சனங்கள், செய்யுள்கள், செய்யுள் உரைகள், திரைக்கதை, உள்ளூர், உலக சினிமா, இசை பற்றிய கட்டுரைகள், நெகிழுரைகள், ட்விட்டர் நுண்பதிவுகள், டைரிக் குறிப்புகள் ஆகியவை அடங்கிய உரைநடைத் தொகுப்பு. வெளியீடு: ஆழி பதிப்பகம், ஜனவரி2012. ஃபேஸ்புக் பக்கம்
காதல் இரவு
நூற்றுக்கணக்கான கவிதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு. இந்நூலில் சமூக அவலங்களைச் சாடி போலித்தனங்களைத் தோலுரிக்கும் சாட்டையடி கவிதைகளை எழுதியுள்ள கவிஞர், காதல் சார்ந்த உயிர் உருகல்களையும் நினைவுகூறுதல்களையும் வாசக மனோபாவத்திடம் முன்வைக்கிறார் ஆசிரியர். வெளியீடு: ஆழி பதிப்பகம், ஜனவரி 2012. ஃபேஸ்புக் பக்கம்
எனது இந்த நான்கு புத்தகங்களும் புத்தகக் கடைகளில் கிடைக்கும். மற்ற புத்தகங்கள் பல்வேறு இடங்களில் உள்ள வெவ்வேறு புத்தகக் கடைகளில் கிடைக்கும்.
