புதுக் கவிஞன்

கவிதைகள் எழுதத் தொடங்கிய பின்
மனவெளிக்குள் வார்த்தைகள்
ஓயாமல் பொழிகின்றன
தலைக்கு மேல் ஒரு
குப்பைத் தொட்டி சரிவது போல

4 thoughts on “புதுக் கவிஞன்

  1. //ஓயாமல் பொழிகின்றன
    தலைக்கு மேல் ஒரு
    குப்பைத் தொட்டி சரிவது போல//

    பொழிவதை சேகரித்து பொருத்தி பார்த்தால் குப்பையிலிருந்தும் மாணிக்கம் கிடைக்ககூடும் !

    சரிவது சரியட்டும் ! :)

  2. தலைக்கு மேல் ஒரு
    குப்பைத் தொட்டி சரிவது போல

    குப்பை கடலுக்குள் குப்பை நதி சங்கமிப்பது போல என்றால் இன்னும் கவித்வமாக (கவுச்சித்தனமாக அல்ல) இருக்குமே :)

  3. @மாயோன்: அப்படியா? தாராளமாக எழுதிக்கொள்ளுங்களேன்.

  4. ஐயா, பல மாதங்கள் கழிந்து இதை இன்று படித்தேன்.
    எவ்வளவு உண்மை.