ஒன்பது காதல் கவிதைகள்

1

திருமணம் ஆனபிறகு
உனக்கு என் ஞாபகம் வருமா
எனக் கேட்கிறாய்.
நான் உன்னையே
திருமணம் செய்துகொண்டுவிட்டால்?

2

அழகான பெண்களைப் பார்க்கும்போது
உன் ஞாபகம் வருகிறது.
உன்னைப் பார்க்கும்போது
அழகான பெண்களின் ஞாபகம் வருகிறது.

3

வாழ்க்கையில்
ஒரு புத்தகமாவது
எழுதிவிடவேண்டும்
உன்னைப் பற்றி.

4

தொலைவினால்
ஆனது
நம் பிரிவு.

5

நான்
இல்லாமல்
வாழக் கற்றுக்கொள்.

6

நேற்று நீ என்னுதட்டில் பதித்த காயம்
கண்ணாடியில் தனைக் கண்டு சிவக்கிறது.

7

என்னென்னவோ
சொல்கிறதுன் பார்வை.
அட வேண்டாமடி,
வாயைத் திற
கேட்கிறேன்
உன் குரலையாவது.

8

எங்கோ போகும் வழியில்
திடீரென எதிர்ப்படும் உன்னை
எதிர்பாராமல் திகைக்கிறேன்
ஆறாம் வாய்ப்பாடு மறந்தவனாய்.

9

நான் மட்டும் இல்லையென்றால்
எதைப் பற்றிக் கவிதை எழுதுவாய் என்கிறாய்.
யாரைப் பற்றி என்று கேள்.

8 Comments »

பேயோன் on March 10th 2010 in கவிதை

8 Responses to “ஒன்பது காதல் கவிதைகள்”

  1. ஆயில்யன்No Gravatar responded on 10 Mar 2010 at 3:45 pm #

    வேதனை,கிளுகிளுப்பு,ஆதங்கம்,சோகம்,அறிவுரை,லவ்ஸ்சு,நக்கல் எல்லாம் கலந்த டெரர் கவிதைகள்! :)

  2. பேயோன்No Gravatar responded on 10 Mar 2010 at 3:50 pm #

    மூன்றாவது கவிதையை கவனமாக படித்தீர்களானால் அப்பட்டமான காமம்கூட இருப்பது தெரியும்.

  3. ஆயில்யன்No Gravatar responded on 10 Mar 2010 at 3:57 pm #

    //மூன்றாவது கவிதையை கவனமாக படித்தீர்களானால் அப்பட்டமான காமம்கூட இருப்பது தெரியும்//

    நான்கு சுவர்களுக்கு நடக்கும் விசயத்தை நான்கு வரிகளுக்கு அப்பட்டமாகவா? ஆச்சர்யமே!
    இனி கவனமாக படிக்கிறேன் :)

  4. வெற்றிNo Gravatar responded on 10 Mar 2010 at 9:17 pm #

    அனைத்தும் அருமையான உணர்வுகளின் வெளிப்பாடுகள் !

  5. ssrajapriyanNo Gravatar responded on 11 Mar 2010 at 11:56 am #

    நன்று …….!

  6. CNRANo Gravatar responded on 11 Mar 2010 at 12:00 pm #

    வெகு அருமை!!

  7. salamNo Gravatar responded on 10 Jun 2010 at 12:59 pm #

    “இரண்டாம் வாய்பாடு மறந்தவனாய்… ” என்றால் இன்னும் பொருத்தமாக இருக்கும் ஒரு small அபிப்ராயம்

  8. பேயோன்No Gravatar responded on 10 Jun 2010 at 3:16 pm #

    சலாம்: அப்படியா? அந்த கவிதையை நீங்கள் எழுதியிருந்தால் என்ன ஆகியிருக்கும் என நினைத்தாலே குலைநடுங்குகிறது.

Trackback URI | Comments RSS

Leave a reply

Rss Feed Tweeter button Facebook button Delicious button Stumbleupon button

பேயோன் is using WP-Gravatar