எல்லோரும் ஊருக்குப் போகிறார்கள்
எல்லோர் கையிலும் மூட்டை முடிச்சுகள்
எல்லோரும் வீடு திரும்புகிறார்கள்
எல்லோரிடமும் பெட்டி படுக்கைகள்
எல்லோர் கண்ணிலும் பிரிவின் வேதனை
எல்லோர் முகத்திலும் பிரிந்த நிம்மதி
எல்லோரும் வழியனுப்ப வந்திருக்கிறார்கள்
பிரிவில் வலுக்கிறது உறவு
எல்லோரும் ரயிலுக்குக் காத்திருக்கிறார்கள்
காத்திருப்பில் முடிகிறது பயணம்
//எல்லோர் முகத்திலும் பிரிந்த நிம்மதி//
பொண்டாட்டிய ஊருக்கு அனுப்பிட்டு திரும்புற நண்பர்களை நிறைய பார்த்திருப்பிங்க போல!
Railway Station
Everyone is going home
Everyone has baggage
Everyone is returning home
Everyone has baggage
The sorrow of parting in everyone’s eyes
The relief of parting in everyone’s eyes
All have come to bid farewell
Separation strengthens relationships
Everyone’s waiting for the train
In waiting ends the journey
@வால்பையன்: பிரிவில் வலுக்கிறது உறவு.
@விஜய்: தமிழில் ‘எல்லோரும்/எல்லோர்’ என்பதே தொடர்ந்து பயன்படுத்தப்பட்டிருப்பதால் ஆங்கிலத்திலும் அப்படியே இருப்பது சிறப்பாக இருக்கும்…. Everyone has come to bid farewell. ஆனால் இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே. கடைசி வரி மிக அழகாக வந்திருக்கிறது.
“Everyone has come to bid farewell.” Agreed. திருத்திக்கொள்ளுங்கள் ஐயா.
Everyone has travelled in train
With Baggage Sorrow or Pain
Relief for some with gain
As the heart is in pain
Relationships are strengthened
While waiting for the train
Separation is the Irony
There ends the journey
–
Vijayashankar
// பிரிவில் வலுக்கிறது உறவு //
உண்மை தான்.
அது.. ஏன் அப்படி?
- ‘சின்ன நெற்குணம்’ அரவிந்தன்.
@CNRA: எல்லாம் நேரம்தான். நன்றி.
@விஜயசங்கர்.இன்: இரண்டிற்கும் சம்பந்தமே இல்லை.
//இரண்டிற்கும் சம்பந்தமே இல்லை.// :-) this is a self styled paraphrasing translation
பேயோன்
Reply:
March 11th, 2010 at 12:57 pm
செல்ப் ஸ்டைல்டு என்றால் முற்றிலும் வேறு பொருளில் எழுதுவதா? தெரியாமல் போய்விட்டதே.
அருமை…….!
விசயின் ஆங்கில மொழிபெயர்ப்பு நன்று. உங்கள் டுவிட்டர் தொகுப்புகளின் ஆங்கிலப் பதிப்பை எதிர்பார்க்கலாமா?
ரவி: சம்பந்தப்பட்டவர்களிடம்தான் கேட்க வேண்டும். யாராவது சம்பந்தப்படுவார்களா என தெரியவில்லை.