உன்னுடன் ரசித்த முதல் மழை

in கவிதை

எழுதப்படாத புத்தகத்தின் பக்கங்கள்
படபடக்கின்றன ஜன்னல்வழிக் காற்றில்

சருகுகளின் அவசர ஊர்வலத்தை
கலைக்கின்றன நம் கால்கள்

சாலையெங்கும் கரும்பூக்கள்
நிலம் நோக்கி மலர

வானில் ஒளிவிரிசல்
மழைப் பள்ளம்
துளி வெள்ளம்

ஓலின் ஓலம் அடக்கிப்
பறந்து போகின்றன குருவிகள்
அடுத்த பாட்டத்தை அஞ்சி

இன்னமும் காத்திருக்கிறது வெறுமையாய்
நமக்கான பெஞ்சி

Tags: , , , , ,

4 Responses

  1. பேயோன்No Gravatar says:

    “உன்னோடான” – இன்னும் அவ்வளவு மோசமாக எழுதப் பழகவில்லை.

  2. ssrajapriyanNo Gravatar says:

    நல்லாயிருக்கு

  3. சீக்கிரமே “ஓ” கவிதை ஒன்றை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். அதையும் நீங்கள்தான் எழுத வேண்டும்.

  4. பேயோன்No Gravatar says:

    @கட்டியக்காரன்: மன்னிக்கவும், எனது சுய தர கட்டுப்பாடு அதை அனுமதிக்காது.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar