பேயோன்

படித்ததில் பிடித்தவன்

உன்னுடன் ரசித்த முதல் மழை

March 15th, 2010

எழுதப்படாத புத்தகத்தின் பக்கங்கள்
படபடக்கின்றன ஜன்னல்வழிக் காற்றில்

சருகுகளின் அவசர ஊர்வலத்தை
கலைக்கின்றன நம் கால்கள்

சாலையெங்கும் கரும்பூக்கள்
நிலம் நோக்கி மலர

வானில் ஒளிவிரிசல்
மழைப் பள்ளம்
துளி வெள்ளம்

ஓலின் ஓலம் அடக்கிப்
பறந்து போகின்றன குருவிகள்
அடுத்த பாட்டத்தை அஞ்சி

இன்னமும் காத்திருக்கிறது வெறுமையாய்
நமக்கான பெஞ்சி

Comments

4 Comments

RSS
  • பேயோன்No Gravatar says on: March 16, 2010 at 9:06 am

     

    “உன்னோடான” – இன்னும் அவ்வளவு மோசமாக எழுதப் பழகவில்லை.

  • ssrajapriyanNo Gravatar says on: March 16, 2010 at 10:27 am

     

    நல்லாயிருக்கு

  • கட்டியக்காரன்No Gravatar says on: March 18, 2010 at 8:14 pm

     

    சீக்கிரமே “ஓ” கவிதை ஒன்றை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். அதையும் நீங்கள்தான் எழுத வேண்டும்.

  • பேயோன்No Gravatar says on: March 19, 2010 at 10:51 am

     

    @கட்டியக்காரன்: மன்னிக்கவும், எனது சுய தர கட்டுப்பாடு அதை அனுமதிக்காது.

பேயோன்

படித்ததில் பிடித்தவன்

பேயோன் is using WP-Gravatar