சிறு கவிதைகள் மூன்று

in கவிதை

1.

இருட்டிலும்
சிரிக்கிறாள்
மோனா லிசா

2.

காமன்வெல்த் மாநாட்டில்
வெனிசுலா பிரதமர்
உலக அமைதி பற்றிப் பேசுகிறார்
மாமனார் பார்ப்பது மியூட்டில்

3.

வரி ஒன்று
வரி இரண்டு
வரி மூன்று. வரி நான்கில் ஒரு ‘ம்’ மட்டு
ம்

Tags: ,

7 Responses

 1. நல்லாவே
  இருக்கு

 2. உலகை உலுக்கிய மூன்று பூகம்பங்களில் ம் இரண்டாவது போல.

 3. பேயோன்No Gravatar says:

  @விஜயசங்கர் @மழையோன்: தலா ஒரு நன்றி.

 4. dagaltiNo Gravatar says:

  கவிதையை தர்க்கத்து உட்படுத்துவது ரசனையின்மையை வெளிப்படுத்திவிடும் என்றாலும் கேட்காமல் இருக்கமுடியவில்லை: காமன்வெல்தில் ஏது வெனிசுலா ?

 5. பேயோன்No Gravatar says:

  @dagalti: ஒரு நல்ல கேள்வியை கேட்டுவிட்டீர்கள். ஒரு நல்ல பதிலை அளிக்க கடமைப்பட்டிருக்கிறேன். வேறு எந்த நாட்டின் பெயரொலியும் ஒத்துவரவில்லை. எக்சாட்டிக் அல்லது ரிமோட் தன்மையை குறிக்கவும் அந்த நாடு பயன்படுகிறது.

 6. dagaltiNo Gravatar says:

  விளக்கத்துக்கு நன்றி.

  காமன்வெல்த் தாய்நாடான இங்கிலாந்துக்கு எதிராக (அர்ஜெண்டினாவுக்கு பக்கபலமாக) வெனிசுலா அதிபர் சாவேஸ் தற்போது போர்க்குரல் கொடுத்திருப்பதால், கவிதையில் நகைமுரண் பல திசைகளிலிருந்து வந்து சேர்கிறது, என்பதை வாசகர்கள் குறித்துக்கொள்ளவேண்டும்.

 7. பேயோன்No Gravatar says:

  dagalti – மீள்நன்றி. விமரிசகர்களின் முக்கியத்துவத்தை மீண்டும் புரிய வைத்துவிட்டீர்கள்.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar