நான்கு கவிதைகள்

in கவிதை

1.

தூங்காமல் விழித்திருந்தது ஓரிரவு
தூங்கி விழித்திருந்தது ஓரிரவு
தூங்கியும் தூங்காமலும்
விழித்திருந்தன ஓரோர் இரவுகள்

2.

மரபணுக் கொடி போல்
புரளும் கால்களை
நடத்துகிறது இரவுநிறத்
தார்ச்சாலை

3.

நிசப்த வருடலில்
கவியும் தூக்கத்தைக்
கலைத்துக் கலைத்து
விளையாடுகின்றன
கொசுக்கள்

4.

ஆரன் கீச்சொலி
கேட்டுத் திரும்பினால்
ஸ்கூட்டியில் இளம்பெண்
கடந்து சென்றாள்

தெருமுனையில் ஸ்கூட்டி
பார்வையிலிருந்து மறைந்த பின்னும்
தொடர்ந்து கேட்கிறது கீச்சொலி
அனேகமாய்
வெங்கடாசலம் தெருவிலிருந்து

Tags: , , , ,

3 Responses

  1. ஆரன் கீச்சொலியின் ஆதிக்கத்தில் எத்தனை பேர் இன்னும் நடுத்தெருவில் நின்று கொண்டிருக்கிறார்களோ என்ற கேள்விதான் சட்டென்று தோன்றியது!

    இரவு நிறத்தார்ச்சாலை – நல்லா இருக்கே! :)

  2. பேயோன்No Gravatar says:

    ஆயில்யன் – உங்கள் சமூக பொறுப்பு திணறடிக்கிறது!

  3. ssrajapriyanNo Gravatar says:

    கவிதைகளனைத்தும் கவினுறயிருக்கிறது …….!

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar