என்கிறாய் கவிதை

in கவிதை

என்னை யாருக்கும் புரியவில்லை என்கிறாய்
கவிதை எல்லோருக்கும் புரிந்துவிடுவதில்லை

என் பேச்சை யாரும் கேட்பதில்லை என்கிறாய்
எனக்கு மட்டும் கேட்கட்டுமே உன் பாடல்

நான் யாருக்கும் அழகல்ல என்கிறாய்
அதைக் காலண்டர் அழகியிடம் சொல்!

என்னால் யாருக்கென்ன பயன் என்கிறாய்
இந்தப் பக்கத்தை நிரப்பப் பயன்பட்டது யாராம்?

Tags: , ,

4 Responses

 1. //என்னை யாருக்கும் புரியவில்லை என்கிறாய்
  கவிதை எல்லோருக்கும் புரிந்துவிடுவதில்லை//

  :)

 2. காலண்டர் அழகி உங்கள் காதலி என்று தெரியாமல் பொய் விட்டதே.. :-)

  மற்றபடி, எளிமையாக அழகாக இருக்குது கவிதை.

 3. ManizNo Gravatar says:

  Hehe…really good.

 4. பேயோன்No Gravatar says:

  நன்றி. நேற்று ஒரு வாசகர் ‘ஓ கவிதை’ கேட்டிருந்தார். அதற்கு பதிலாக இது.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar