ஐந்துக் கவிதைகள்

in கவிதை

1.

கண் மூடிக்
கண் திறப்பதற்குள்
கடந்துவிட்டது இரவு

2.

வாளை விட வலியதாம்
விசைப்பலகை

3.

பெண்ணைக் கொடுத்த கிழவனுக்கு
காது மூக்கிலும் நரை
முதுமை புகாத துவாரங்கள் ஏது

4.

விழித்திருந்த நேரத்தில்
ரீவைண்ட் ஆகியிருக்கும் போல

விட்ட இடத்திலிருந்து தொடராமல்
வந்ததே வருகிறது கனவில்

5.

இத்தனை மரங்களை அழித்து
இத்தனை புத்தகங்களை எழுதியிருக்கிறார்
அவருக்கு விருது அவசியம்தான்

Tags: , ,

6 Responses

 1. பேயோன்No Gravatar says:

  இன்று வெயில் சுமார் 35 டிகிரி.

 2. டோட்டலா மிளிர்கிறது :)

 3. பேயோன்No Gravatar says:

  நன்றி. ‘டெரராக’ இல்லாததில் மகிழ்ச்சி.

 4. HariNo Gravatar says:

  1st one was verygood. Others are nice.

  Keep writing!

  hari
  http://mybuks.blogspot.com

 5. பேயோன்No Gravatar says:

  Hari – ஏன், முதல் கவிதை தவிர மற்றவை புரியவில்லையா?

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar