காதல் கவிதை

in கவிதை

பார்வை விட்டு
போன பின்னும்
என்னில் சிறகடிக்கும்
உனக்கான எண்ணங்கள்

பெய்த பிற்பாடும்
மழைக்கின்ற
மரம் கணக்காய்.

Tags: , , ,

7 Responses

 1. ManizNo Gravatar says:

  Superb!

 2. பார்வையினை விட்டு போன பின்புதானே சிறகடிக்கிறது மனது :)

  கவிதை எங்கோ படித்த ஞாபகம் வருகிறது !

 3. பேயோன்No Gravatar says:

  Maniz – நன்றி.

  ஆயில்யன் – அதுதான் இந்த கவிதையின் வெற்றி.

 4. dagaltiNo Gravatar says:

  The last stanza reminded me of a lovely poem written by poet/blogger Agnibarathi which goes thus:


  The rain has stopped
  The trees still drip
  One last kiss

 5. பேயோன்No Gravatar says:

  dagalti – என் கவிதையில் கடைசி இருவரிகள்தான் கவிதை. அதற்கு முன் வருவது தொகையறா. இது பலருக்கு புரியவில்லை.

 6. dagaltiNo Gravatar says:

  இருக்கலாம். ஆனா உங்க கவிதைல எந்த இடமெல்லாம் கவிதைன்னு சொல்ற உரிமை உங்களதில்லீங்களே :-)

  முத்தைத்தரு-ல பாட்டு-ல குக்குக்குகு குக்குக்குகுகுகு – வரிக்கு எனக்கு கண்ல தண்ணி வந்துச்சுன்னா அருணகிரியார் அதை வரக்கூடாது-ன்னு சொல்ல முடியுமா ?

 7. பேயோன்No Gravatar says:

  dagalti – ஆர்தர் என்கிற முறையில் எனக்கு நிச்சயம் உண்டு. ஏனென்றால் எப்போதுமே ஆர்தர்தான் ஒரு படைப்பின் முதல் வாசகர். எனவே Death of the arthur என்கிற விமரிசன புரட்டுரிமை கருத்தாக்கம் இங்கு செல்லுபடியாகாது.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar