இயலாமெய்

in கவிதை

இல்லாத ஒருவனாய்
இயலாத ஒருவனாய்

சுயம் தேடிச்
சுயம் தேடி

அலைக்கழித்து
இக்கவிதையென வருத்துகின்றன
நாட்கள்

செய்தாக வேண்டும்
எதையேனும்
திறம்பட.

Tags: , , ,

5 Responses

 1. அருமை வாத்தியாரே!

 2. பாளை ராஜாNo Gravatar says:

  இயலாமெய்

  மிகவும் அருமை …

  செய்தாக வேண்டும்
  எதையேனும்
  திறம்பட

  ஏதாவது செய்யனும் பாஸ்..

 3. ரவிNo Gravatar says:

  அடடா, இன்னிக்குத் தான் இந்தத் தளத்தையும் துண்டிலக்கியப் பிரதியையும் பார்க்கிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறது. கடந்த கால, சம கால, எதிர் கால தமிழ் இணைய இலக்கியத்தின் மிகச் சுவாரசியமான நிகழ்வு… :)

 4. பேயோன்No Gravatar says:

  யுவகிருஷ்ணா: நன்றி.

  பாளை ராஜா: ஆமாம்.

  ரவி: தமிழ்ச்சூழலில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்றே தெரியவில்லை உங்களுக்கு.

 5. ரவிNo Gravatar says:

  //ரவி: தமிழ்ச்சூழலில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்றே தெரியவில்லை உங்களுக்கு.//

  ஆமா.. எப்பவாவது தான் தமிழ் வலைப்பதிவுகள், டுவிட்டர் பக்கம் எட்டிப் பார்க்கிறேன்…

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar