கவிதை என்பது யாதெனில்

in கவிதை

ஒரு
அல்லது
பல

நீண்ட
அல்லது
சிறிய

பத்தியை
அல்லது
பத்திகளை

சில
அல்லது
பல
வாக்கியங்களாக

விநி
யோகித்
தலே
கவி
தை.

குழாயிலிருந்து
காலி பக்கெட்டினுள்
சொட்டும் மழைத் துளிகளென
படிமப் பிதற்றல்கள்
தேவையற்றும்
ஒலிகேடுகளோடும்
பன்மைகளின் மிகுதிகளோடும்
துளிர்க்கின்றன.

கால் தடுக்கியதில்
தெறித்த தலைகளாய்
முடியாத வாக்கியங்கள்

முன்னிலையை விளித்துப் பேசும்
தன்மையாக நீயும்
தன்மை எழுத்து மாறித் தனிமையாகிய
முன்னிலை நானும்
குழம்பிக் குழப்பும் சொல்லின்
பாம்புச் சட்டை நம் கவிதை.

உணர்ச்சியின் வெளி அமைதி
கடைசி வரிகளில்.

உணர்ச்சிகளின்
வடிவம்
கவிதை.

கவிதையின்
வடிவம்
செங்குத்து.

Tags:

2 Responses

  1. பாளை ராஜாNo Gravatar says:

    ம்…

    வணக்கம் தல..

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar