திசை காட்டிப் பறவை – 3

in புனைவு

அத்தியாயம் 3 – குமாரின் அப்பா

குமாரின் இரண்டாவது தங்கைக்கு வந்த வரன்கள் எல்லாம் வந்த வேகத்தில் திரும்பிப் போனது. ஏனென்றால் அவனது அப்பா பாகிஸ்தானியர் என்பதால் யாரும் குமாரின் தங்கையை ஏற்றுக்கொள்ள விரும்பாததே காரணம். குமாரின் அப்பா இந்துவாக இருந்திருந்தால் அவர்கள் அவரது தேசிய அடையாளத்தை மன்னித்திருக்கக் கூடும்.

நானோ இயற்கையிலேயே இரக்க குணதாரி. குமாரினுடைய தங்கையினது திருமணம் அவனது அப்பாவினால் தடைபட்டிடுவது கண்டு என் மனம் வேதனையுற்றது.

நான் உடனடியாக இந்தச் சூழ்நிலையை மாற்றவில்லை என்றால் குமாரோ அல்லது அவனது அல்லக்கைகளோ என்னைத் தவறாக நினைத்துக்கொள்ள வாய்ப்பிருந்தது. தாமதமில்லாமல் குமாரின் அப்பாவை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. திருமணம் ஆக வேண்டிய ஒரு பெண்ணின் அப்பா பாகிஸ்தானியராக இருப்பது பிரச்சினை என்றால் அவர் பாகிஸ்தானியராக இல்லாதிருப்பதே நல்லது.

வெள்ளைக்கார பிரபு ஒருவர் கொடுத்த விருந்து ஒன்றில் குமாருக்கு அவரது அப்பாவை யாரோ அறிமுகப்படுத்தி வைத்தார்கள். குமாரின் அப்பா பிரசித்தி பெற்ற வைத்தியர் வாங் ஃபெய் ஹுங். சீனாவைச் சேர்ந்த மாஸ்டர் வாங் பாரம்பரிய மருத்துவத்திலும் குங்ஃபூவிலும் தேர்ந்தவர். அவருக்குக் குமாரின் தங்கமான குணம் பிடித்துப்போனது. குமாரின் அப்பா சீனாவைச் சேர்ந்த புகழ்பெற்ற மருத்துவர் வாங் ஃபெய் ஹுங்.

Tags: ,

6 Responses

 1. பாளை ராஜாNo Gravatar says:

  வணக்கம் குருவே !..

  ஒன்றும் புரியவில்லை..
  மன்னிக்கவும்..

 2. பேயோன்No Gravatar says:

  மன்னித்தேன்.

 3. kuthuNo Gravatar says:

  அனேகமா, அடுத்த அத்தியாயத்தில் அமெரிக்காவை சேர்ந்தவர்தான் குமாரின் அப்பாவாயிருப்பார்..

 4. பேயோன்No Gravatar says:

  கதாநாயகனின் அப்பாவை மாற்றுவதுதான் எனக்கு வேலையா? கதாநாயகனுக்கு நெருக்கடி என்று கதைசொல்லி உதவுகிறார், அவ்வளவுதான்.

 5. பாளை ராஜாNo Gravatar says:

  @kuthu

  எங்கள் குருவை இப்பூமியை தாண்டி சிந்திக்கவிடுங்கள்..

 6. குமாரின் நிலை எனக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. ஒருவனுக்கு இவ்வளவு பிரச்சனைகள் வரக்கூடாது. சீனாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே போர் வந்தால் யாரை அதாரிப்பார்; ரஷ்யாவைத் தான் போல அடுத்த அத்தியாயப்படி

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar