தேவையானவை

in கவிதை

பெங்களூர் தக்காளி – 2
குடைமிளகாய் – 1
கோஸ் – 1/4 கிலோ
காரட் – 3
வெண்டைக்காய் – 1/4 கிலோ
தேங்காய் – அரை மூடி
வெங்காயம் (சிறியது) – 5
பச்சை மிளகாய் – 4
துவரம் பருப்பு – 1/4 கப்
உளுத்தம் பருப்பு – 1/4 கப்
கொத்துமல்லி – 1 ஈர்க்கு
கறிவேப்பிலை – 2 ஈர்க்கு
பெருங்காயம் – 25 கிராம்
கடுகு – 1 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
நான்கு இன்ச் ஆணி – 8

Tags: , ,

26 Responses

 1. //உப்பு – தேவைக்கேற்ப //

  பிரமிக்கவைக்கிறது ! :)

 2. //உப்பு – தேவைக்கேற்ப //

  பிரமிக்கவைக்கிறது ! /////

  +1

 3. பேயோன்No Gravatar says:

  புரிகிறது.

 4. மானஸ்தன்No Gravatar says:

  //நான்கு இன்ச் ஆணி – 8//
  இரண்டு கேள்விகள். (1) இரும்புச்சத்து தேவைதான். அதுக்காக இம்புட்டா! (2) ஆணி புதுசா, இல்லை துருப்பிடித்ததா?

 5. பேயோன்No Gravatar says:

  மானஸ்தன்: வெங்காயம் ஐந்து என்றால் நறுக்காதது என்றுதான் பொருள். அதே போலத்தான் ஆணி என்றால் சாதாரண ஆணி. துருப்பிடித்தது என்றால் அதை அடைப்புக்குறிக்குள் குறிப்பிட கவிதைசொல்லிக்கு தெரியாதா?

 6. மானஸ்தன்No Gravatar says:

  கவிஞருக்குத் தெரியாதது இவ்வுலகில் ஒன்றுமில்லை என்பதை நானறிவேன்.

  இருந்தாலும், “கவிதையை முடிக்கும் அவசரத்தில்” ஆணி விஷயத்தை அடைப்புக் குறிக்குள் சொல்ல மறந்து விட்டீர்களோ என்ற சந்தேகத்தில் கேட்டேன்.

  கேள்வி கேட்டதுக்குத் தவறாக எண்ண வேண்டாம்.

 7. பேயோன்No Gravatar says:

  சார், அது வெறும் ஆணிதான் சார். வேண்டுமானால் துருப்பிடிக்கும் வரை காத்திருங்கள். பிறகு அடைப்புக்குறியில் துருவை சேர்த்துக்கொள்ளலாம். மார்க்குவேஸ்வரா!

 8. கவிதையில் கவிதை நடையை விட சமூகத்திற்கு ஊட்டச்சத்து அளிக்க வேண்டும் என்ற எண்ணமே பெரிதாக தோன்றுகிறது. எந்த கவிஞனும் செய்யாதது! உங்கள் சமூக அக்கறை மெய்சிலிர்க்க வைக்கிறது.

  • பேயோன்No Gravatar says:

   சமூக அக்கறை மட்டும் இல்லை என்றால் எழுத்தாளர்கள் எங்கிருப்பார்கள்? அவரவர் வீட்டிலா?

 9. பாளை ராஜாNo Gravatar says:

  வணக்கம் குருவே !..

  நல்ல கவிதை !!!

  ஒரு சந்தேகம்..

  தமிழ் நாட்டில் தக்காளி இருக்கும் போது பெங்களூர் தக்காளி – 2
  ஏன் குருவே ?

  கேள்வி தவறாக இருப்பின் மன்னிக்கவும்..

  • பேயோன்No Gravatar says:

   இதென்ன அபத்தமான கேள்வி? தமிழ்நாடு தக்காளி என்று ஏதாவது இருக்கிறதா?

 10. பாளை ராஜாNo Gravatar says:

  மீண்டும் மன்னிக்கவும்..

  அப்படியெனில் தக்காளி என்று குறிப்பிட்டால் போதாதா ?

  • பேயோன்No Gravatar says:

   பெங்களூர் தக்காளியை தக்காளி என்று குறிப்பிட்டால் போதாது. ஓட்டலில் எலுமிச்சை சாதம் கேட்டு வெறும் சாதம் கிடைத்தால் ஒப்புக்கொள்வீர்களா? கவிதையை காய்கறி பட்டியல் போல் படிக்காதீர்கள். கவிதையாக படியுங்கள்.

 11. சமூக அக்கறை மட்டும் இல்லை என்றால் எழுத்தாளர்கள் எங்கிருப்பார்கள்? அவரவர் வீட்டிலா?///

  வீட்டிலிருந்து கவிதை எழுதும் பேயோனுகுத் தான் சமூக அக்கறை இருக்கும். வீட்டில் இருக்கும் பேயோனுக்கு அல்ல.

  நான் என்ன சொல்லா வர்றேன்னா – சொல்லிறேன். எப்படி இவானுக்கு குயூங் சமூகமோ அப்படி தான் கவிஞர்களுக்கு சமூக அக்கறையும்.

 12. பிரேம்குமார்No Gravatar says:

  சீரகமே இல்லாமல் கவிதையா. சோபிக்கவே இல்லை. ஜீரணிக்க முடியவில்லை. சமுதாயம் இதை படித்தால் பேதி புடிங்கித் திரியும்.

 13. பாளை ராஜாNo Gravatar says:

  கவிதையை காய்கறி பட்டியல் போல் படிக்காதீர்கள்

  //

  குருவே !..

  இவான் வசீலியெவிச்சின் போராட்டம் நிறைவுபெற்றதாக நினைக்கின்றேன்..

  அதுபோல போல்ஷெவிக்குகளுக்கு சமூக அக்கறை மீண்டும் வரக்கூடாது..

  ஹெய்டி டிபென் ..

 14. பாளை ராஜாNo Gravatar says:

  எனது வலைதளத்தில் பின்னூட்டம் என்கிற பெயரில் அபத்தங்கள் வந்து குவிந்துள்ளன.

  //

  வருந்துகிறேன்..
  கேள்விகள் தவறாக இருப்பின் மன்னிக்கவும்..

 15. பேயோன்No Gravatar says:

  உங்களை யார் சார் சொன்னார்கள். என் நெருங்கிய உறவினர் ஒருவர் வந்து பின்னூட்டமிட்டார். அவருக்கு தெரியாமல் நான் அதை நீக்க வேண்டியதாயிற்று.

 16. “கவிதையை காய்கறி பட்டியல் போல் படிக்காதீர்கள்”
  வி.வி. சிரித்தேன். நன்றி தெய்வமே! :D

 17. Senthil NathanNo Gravatar says:

  லிஸ்ட் சரி, ரெசிபி எங்க? மண்டபத்துல எவனாவது எழுதி வச்சிருக்கானா? மற்றபடி ஆணி வரை பொன்னிறமா வறுத்து வச்சிருக்கேன்.

 18. பேயோன்No Gravatar says:

  செந்தில் நாதன்: முழு பட்டியலுமே ஆணி என்கிற கவித் திருப்பத்திற்காக எழுதப்பட்டது. தொகுக்கத்தக்க perl கவிதைகள் போலில்லையிது.

 19. NaveenNo Gravatar says:

  பெங்களூர் தக்காளி ,உப்பு – தேவைக்கேற்ப ,நான்கு இன்ச் ஆணி . இவை மூன்றும் ரசிக்க வைத்தன ..!

 20. GanpatNo Gravatar says:

  முக்கியமானது missing
  அரை மூடி எலுமிச்சம்பழம்!
  தலையில் தேய்த்துக்கொள்ள!!
  நவீன்,
  இது(பேயோன் எழுதியிருப்பது) என்ன என்றும்
  அதன் பொருள் என்ன என்றும்
  புரியவைத்தால்
  கோடி புண்ணியம் உங்களுக்கு..

 21. //பெங்களூர் தக்காளியை தக்காளி என்று குறிப்பிட்டால் போதாது. ஓட்டலில் எலுமிச்சை சாதம் கேட்டு வெறும் சாதம் கிடைத்தால் ஒப்புக்கொள்வீர்களா? கவிதையை காய்கறி பட்டியல் போல் படிக்காதீர்கள். கவிதையாக படியுங்கள்.//

  விவிசி :))))))

 22. இனிமேல் சமயல் குறிப்பு படிக்கும் போதும் சமயல் புரோகிராமும் பார்த்தால் கண்டிப்பாக 4 இன்ச் ஆனியும் நினைவுக்கு வரும் கண்டிப்பாக கடியும் படும்.

  • பேயோன்No Gravatar says:

   4 இன்ச் ஆனி, 5 இன்ச் ஆவடி, 6 இன்ச் பெரம்பூர் எல்லாம் வரட்டும்.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar