திசை காட்டிப் பறவை – 12

in புனைவு

அத்தியாயம் 12 – இது எழுதும் கை ஸ்வாமி!

இந்தப் பத்தியின் ஆறாம் சொல்லில் தோன்றும் குமார், தானேதான் இந்த நாவலை எழுதிக்கொண்டிருப்பதான மயக்கத்தில் அடிக்கடி ஆழ்கிறான். ஹ! இந்த சப்பட்டைத் தாளில் பேனா உமிழ்ந்த மைக் கோட்டுப் புழுக்களாக ஊர்ந்துகொண்டிருப்பவனுக்கே இவ்வளவு என்றால் வருங்கால நோபல் பரிசுக்காரனான எனக்கு எவ்வளவு இருக்கும்.

ஆசிரியருடன் கதாபாத்திரங்கள் ஊடாடுவதெல்லாம் கதைப் புத்தகங்களுக்கு நன்றாயிருக்கும் சாமி, ஆனால் யதார்த்த நிலை அதுவா? இந்தப் புத்தகத்தின் முதன்மைக் கதாபாத்திரத்தையே எடுத்துக்கொள்ளுங்கள். அவன் வாழ்க்கையில் எது நடந்தாலும் அது வெள்ளைத் தாள்களின் மேல் மைக் கோடுகளின் நெளிசல்களாகத்தான் இருக்கின்றன. தாள் முழுக்கக் கிடைமட்டமாக சுளித்து சுளித்துப் பல மைக் கோடுகள். என்னவென்றால் குமார் காதலிக்கிறானாம். வேறொரு பக்கத்திலும் இதே மாதிரி ஜிலேபிக் கோடுகள். அப்போது என்னவாம்? அவன் ரஷ்ய சீமானாக வருகிறானாம். அரை மீட்டர் தூரத்திலிருந்து பார்த்தால் எல்லா கருமமும் ஒரே மாதிரித்தான் தெரிகிறது.

நான் தப்பாக ஒன்றும் சொல்லவில்லை ஸ்வாமி; என்ன இருந்தாலும் குமார் என் கதாபாத்திரம்தானே, அவனை நான் விட்டுக்கொடுத்துப் பேசுவதாவது? எழுத்தாளர்கள் கதாபாத்திரங்களுடன் அதிகம் வைத்துக்கொள்ளக் கூடாது என்று விமர்சகர்கள் குதிக்கிறார்கள் (பாட்டுக்கொரு புலவன் போன பிறகு இவர்கள் வைத்ததுதான் சட்டம்). அதை அனுசரித்து அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சம் இப்படி. கிறுக்குகிற கைதானே ஐயா எழுதும்?

Tags: , ,

6 Responses

 1. பாராNo Gravatar says:

  அத்தியாயங்கள் மிக மிக நீளமாக உள்ளன. வாசித்து முடிக்க மிகவும் ஆயாசமாக உள்ளது. சற்று சிறிய அத்தியாயங்களாகக் கதையைப் பிரிக்கலாமே?

 2. பேயோன்No Gravatar says:

  அடுத்த அத்தியாயம் இன்னும் பெரிதாக இருக்கும்.

 3. பாளை ராஜாNo Gravatar says:

  இந்தப் பத்தியின் ஆறாம் சொல்லில் தோன்றும் குமார்

  ///

  வணக்கம் குருவே !..

 4. “இந்தப் பத்தியின் ஆறாம் சொல்லில் தோன்றும் குமார்”
  “கிறுக்குகிற கைதானே ஐயா எழுதும்?”

  சூப்பர்.

 5. குருவே,
  உங்களைப் போன்ற பெரிய எழுத்தாளரின் எழுத்தில் கருத்தை விமர்சிக்காமல் சம்பந்தமேயில்லாமல் நீளம் அகலம் என்று விமர்சிக்கும் மதிப்பிற்குரிய பா.ரா. ஐயாவை கண்டிக்க எனக்கு வயதில்லை. நீங்களே அவரிடம் சொல்லுங்கள்.

 6. பேயோன்No Gravatar says:

  விஜய்: அவருடைய நோக்கம் எனக்கு புரிந்துவிட்டது. உங்களுக்கு புரியவில்லையா?

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar