திசை காட்டிப் பறவை – 14

in புனைவு

அத்தியாயம் 14 – இந்துஸ்தான் லீவர்

இந்தாம்மா ரிசப்ஷனிஸ்ட் – ஆமாம், உன்னைத்தான். உன்னைத் தொலைபேசியில் அழைத்தால் பிடிக்க முடியாது. நீ எப்படியும் இந்த நாவலைப் படிப்பாய் என்று எனக்குத் தெரியும். அதனால்தான் இந்தக் குறுக்குவழி.

அந்த இந்துஸ்தான் லீவர் பையனிடம் என்ன இல்லை? அவனை ஏன் வேண்டாம் என்று சொல்கிறாய்? உன் அப்பா எனக்கு ஃபோன் செய்து அழாத குறையாகப் புலம்பித் தீர்த்துவிட்டார். இந்துஸ்தான் லீவரில் வேலை பார்க்கிறான், கை நிறைய சம்பளம், நல்ல உயரம், ஒரு கெட்ட பழக்கம் இல்லை. வரதட்சிணையே வேண்டாம், அதற்கு பதிலாக ஒண்ணேகால் லட்சம் ரொக்கமாய்த் தந்துவிடுங்கள் என்கிறான். இவனை விட்டால் வேறு நல்ல வரன் அவ்வளவு சுலபமாய்க் கிடைப்பானா?

யோசித்துப் பார். நான் அடுத்த அத்தியாயத்தை எழுத வேண்டும்.

Tags: ,

4 Responses

  1. கமெண்ட்ல அந்த ரிசப்ஷனிஸ்ட் அம்மா வந்து ஒ.கே சொல்வார்கள் என்ற நாற்காலி விளிம்பு நிலை ஆவலுடன் அடுத்த அத்தியாயத்திற்காக காத்திருக்கிறேன் :)

  2. “இந்துஸ்தான் லீவரில் வேலை பார்க்கிறான்”

    ஐயா, இது உவமையா என்று சின்ன சந்தேகம்…

  3. பேயோன்No Gravatar says:

    ஆயில்யன்: அடுத்த அத்தியாயத்தை தவிர்க்க முடியாது.

    விஜய்: இல்லை. இந்துஸ்தான் லீவரை உவமையாக்கிவிட்டால் படித்த மத்தியதர வர்க்கத்தினரின் ஏற்றத்தை நேரடியாக பதிவு செய்யத் தவறியதாகிவிடும்.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar