திசை காட்டிப் பறவை – 15

in புனைவு

அத்தியாயம் 15 – ரிசப்ஷனிஸ்ட் எழுதிய கடிதம்

என் அன்புள்ள தங்களுக்கு,

தங்கள் ‘ரிசப்ஷனிஸ்ட்’ எழுதிக்கொள்வது…..

இப்பவும் நான் இல்லாதபோது நீங்கள் என் handbag -கை குடைவது எனக்கு தெரியும். அதனால்தான் இந்தக் கடிதத்தை இங்கே வைக்கின்றேன். நிற்க…..

உங்களை போல் ஒரு ஆனானப்பட்ட எழுத்தாளரிடம் ஏன் இவ்வளவு ஓளிவுமறைவுகள்?? என்னைப் பற்றி உங்கள் மனதில் இருப்பதை என்னிடம் open -னாக சொல்லிவிடலாமே?? உங்களை என் தந்தைக்கு நிகராக மதிக்கின்றேன். நீங்களே என் வாழ்க்கைத்துணையாக அமைய வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன். ஆனால்…. கைநிறைய  சம்பாதிக்கும் வரன் என்ற பெயரில் சம்மந்தமில்லாத மூன்றாவது மனுஷனை என்னிடமே சிபாரிசு செய்து என் மனசை காயப்படுத்திவிட்டீர்கள்.

கதாபாத்திரங்களின் மனசுக்குள் ஆழமாக பார்த்து எழுதும் இலக்கியகாரராகிய நீங்கள், என்னை மட்டும் புரிந்துகொள்ளாதது ஏன்???

நீங்கள் கேட்ட கேள்வியைத்தான் நானும் கேட்கின்றேன்…… உங்களுக்கு என்னை பிடிக்கவில்லையா??? என்னிடம் என்ன இல்லை??? என்னை பிடிக்காத நபர் என்றால் என் handbag -கை ஏன் திருட்டுத்தனமாக குடைய வேண்டும்? என்னுடைய handbag -கில் நீங்கள் எதை தேடினீர்கள்? Hairpin -னா? கைக்குட்டையா? “compact” டப்பாவா? sticker பொட்டா? எதுவும் காணாமல் போகவில்லையே??

At any cost இனி நீங்கள் அடுத்த அத்தியாயத்தை எழுதலாம்….

இவள் என்றென்றைக்குமாய் உங்களுடைய….
♥ கோதை ♥

Tags: ,

3 Responses

  1. இது எதிர்பாராத கடும் திருப்பமால்ல இருக்கு! ஐயோ திசை காட்டிய பறவையா டைட்டில் மாறி திசை மாறி பயணமாகுமோ?!

  2. யாருங்க அந்த ஆனானப்பட்ட எழுத்தாளர்,….???

    உங்கள் புனைவுகள் அனைத்தும் சூப்பர்…..

  3. பேயோன்No Gravatar says:

    @சரவண வடிவேல்: நன்றி.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar