இட்டுக்கட்டி எழுதிடும்…

in கவிதை

இந்த கவிதைக்கு பதிலாக தனி இடுகையாக ஒரு முறை….

இட்டுக்கட்டி எழுதிடும்
எட்டுப்பட்டி இலக்கியன்
கட்டப்பட்டு உருட்டிய
லிட்டரேச்ச எழுத்தினை

நட்டகல்லு என்றிடும்
திட்டமிட்ட உள்ளுறை
பட்டவர்த்த னத்தைகை
தட்டிமெச்சும் போதிலே

அட்டதிக்கு முழுவதை
அட்டுபீசு ஆள்கையில்
தொட்டதைத் துலக்குமிக்
கட்டமைப் புடைப்பவன்

கட்டுவித்த பனுவலும்
நட்டகல்லென் றாகினால்
எட்டிநிற்கும் வாசகன்
நாதனாவ தெப்படி?

Tags: ,

6 Responses

 1. கென்No Gravatar says:

  நட்டக்கல்லும் தெய்வமோ;)))))))))))))

  செம்மொழிக்கொண்ட நீவிர் நாலாயிரம் யுகங்கள் வாழ்வீராக

 2. //அட்டதிக்கு முழுவதை
  அட்டுபீசு ஆள்கையில்//

  :))))))))))

 3. KirubasankarNo Gravatar says:

  Hello Mr.Payon,
  I read that kavidhai “Ittukatti Ezhudhidum”. While reading its giving me a feel of reading some sidhar paadalgal. Especially Sidhar Sivavaakiyar”. !!
  Have you familiar with Sidhar padalgal.?

 4. பேயோன்No Gravatar says:

  கிருதாசங்கர்: முதலில் கவிதை எழுதிய டகால்டி என்பவர் அந்த சந்தத்தில் ஒரு கவிதை எழுதியிருந்தார். நான் அதை பின்பற்றினேன், அவ்வளவுதான். ‘நட்டகல்லும் பேசுமோ’வை படிக்காத அல்லது கேள்விப்படாத தமிழ் வாசகர்கள் இருப்பார்களா?

 5. sankarNo Gravatar says:

  அபாரம் !!!!!!!குருவே நீங்கள் யார் !!

 6. பேயோன்No Gravatar says:

  சங்கர்: பிரபல எழுத்தாளன்.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar