காரண காரியம்

in கவிதை

நான் படித்த கவிதைகள்
இன்னொருவன் எழுதியது

நான் வாசித்த கதைகள்
இன்னொருவன் யோசித்தது

நான் படித்த நாவல்கள்
இன்னொருவன் இயற்றியது

நான் படித்த கட்டுரைகள்
இன்னொருவன் பீறாய்ந்தது

இன்னொருவன் செய்தது
என் தலையில் விடிந்ததால்

என் தலைக்குப் பின்
சூர்யப் பிரகாசம்

Tags: ,

10 Responses

 1. வீ.புஷ்பராஜ்No Gravatar says:

  அருமை.

  >பீறாய்ந்தது<

  வேறு வார்த்தை பயன்படுத்தியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது.

  • பேயோன்No Gravatar says:

   வீ.புஷ்பராஜ்: உங்களுக்கு அப்படித் தோன்றுகிறது என்பதில் உடன்படுகிறேன்.

 2. அப்படியே

  நான் எழுதும் துண்டிலக்கியங்கள்….!

  அதையும் சொல்லுங்க:))

  • பேயோன்No Gravatar says:

   ஆயில்யன்: துண்டிலக்கியங்களை எழுதுவது நானல்லவா? கவிதைசொல்லி அல்ல.

 3. dagaltiNo Gravatar says:

  கவிதையின் மைய கதாப்பாத்திரமான சூரியபிரகாசத்தை கடைசி வரியில் அறுமுகப்படுத்தியது புதுமையான உத்தி.

 4. NSRNo Gravatar says:

  படித்ததும், பார்த்ததும் கண்டு ஏற்படும் கர்வத்தை, செய்யும் சுயத்தம்பட்டத்தை அழகாக சொல்லி இருக்கிறீர்கள். நன்றி!

 5. இந்த பதிவும் யாருக்கோ தோன்றி நீங்க எழுதியதோ #சந்தேகம் 1

  ஆமாம் யார் அந்த சூர்ய பிரகாசம் #சந்தேகம் 2

  ஆமாம் லார்டு லபத்தாஸின் மொழிப்பெயர்ப்பு கவிதைகள் இங்கு இடம்பெறுமா #சந்தேகம் 3

  இதற்க்கெல்லாம் பேயோன் சார் பதில் அளிப்பாரா #சந்தேகமோ சந்தேகம் 4

  அன்புடன்,
  சுவாசிகா
  http://ksaw.me

 6. பேயோன்No Gravatar says:

  டகால்டி: இப்படியும் ஒரு வாசிப்பு!

  NSR: இப்படியும் ஒரு வாசிப்பு!

  சுவாசிகா: லபக்குதாசின் படைப்புகளை என் வலைதளத்தில் எதற்கு சார் பதிப்பிக்க வேண்டும்?

 7. பெருந்தேவிNo Gravatar says:

  வாசிப்பவர் தலைக்குப் பின்
  சூரியன் பிரகாசித்து விடிவதால்
  எழுதுபவர்க்கு முன்
  எப்போதும் இருட்டு.

  :-) நல்ல கவிதை. பெருந்தேவி

 8. பேயோன்No Gravatar says:

  பெருந்தேவி: நீங்கள் கூறும் சூரியன் சட்டைப் பொத்தான் அளவிற்குத்தான் இருக்கும் போலுள்ளது. நன்றி.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar