நகையும் சுவையும்

in புனைவு

ஒரு விமானத்தில் ஒரு இந்தியர், பாகிஸ்தானியர், அமெரிக்கர், சீனர், ஜப்பானியர் உட்பட பலர் இருந்தார்கள். விமானத்தில் பழுது ஏற்பட்டு நான்கு பேர் குதித்து உயிர்த் தியாகம் செய்ய வேண்டிய நிலை. முதலில் அமெரிக்கர், அமெரிக்கா வாழ்க என்று கத்திவிட்டு குதிக்கிறார். அடுத்து சீனர், சீனா வாழ்க என்று குதிக்கிறார். பிறகு ஜப்பானியர், ஜப்பான் வாழ்க என குதிக்கிறார். கடைசியில் இந்தியர், இந்தியா வாழ்க எனக் கத்திவிட்டு பாகிஸ்தானியரைத் தள்ளிவிட்டுவிடுகிறார். அருகிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒருவர், “பாகிஸ்தானியரை தள்ளிவிட்டால் பாகிஸ்தான் வாழ்க என்றுதானே சொல்ல வேண்டும்? இந்தியா வாழ்க என்று எப்படி வரும்?” என போட்டாரே ஒரு போடு!

Tags: ,

7 Responses

 1. நல்ல அரசியல் நையாண்டி

  • பேயோன்No Gravatar says:

   பல சமயங்களில் நம் கதையை பிறர்தான் எழுதுகிறார்கள்.

 2. siddhan555No Gravatar says:

  வித்தியாசமான கோணம்.மெய்மறந்து விட்டேன்.

 3. கார்மேகராஜாNo Gravatar says:

  ஒரே பத்தியில் இரு நாட்டு பிரச்சனையை தீர்த்துவிட்டீர்கள்!

 4. காட்டான் ஆடுNo Gravatar says:

  நல்ல பிரச்சனை கதை

 5. இந்த பதிவு பேயோன் சார் எழுதின மாதிரியே இல்லையே?! உங்க டச்/நச் இல்லையே??!!

  பி.கு: பல்ப் வாங்க போகிறேன் :( என்று (நன்றாகவே) தெரிந்தே இந்த கேள்வியை கேட்கிறேன்

  அன்புடன்,
  சுவாசிகா
  http://ksaw.me

 6. பேயோன்No Gravatar says:

  இக்கதை எனது ட்விட்டர் அனுபவத்தைப் பற்றியது. நீதிக் கதையாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar