19 Responses

 1. கணினியிலேயே வரைந்ததா.. மிக அருமை! கிண்ணத்தில் என்ன ரத்தமா?

  • பேயோன்No Gravatar says:

   நன்றி. எம்.எஸ். பெயின்டை பிரயோகித்து வரைந்தது. கூடுதலாக, அது ரத்தம்தான்.

 2. மரத்தின் வேரில் கால் பெருவிரல் நகம் தெரிகிறது. அதை மனதில் வைத்துக் கொண்டு பார்த்தால் இந்தப் படத்திற்கு ஃபிராய்டிய உளவியல் ரீதியாக வேறு அர்த்தம் தோன்றுகிறது, குருவே!!

 3. பேயோன்No Gravatar says:

  அப்படியொரு வாசிப்புக்கும் இடமுள்ளது. உங்களுடைய வாசிப்பில் ஓவியத்திலுள்ள எல்லாமே – பூனை, கிண்ணம், பாம்பு – இரண்டிரண்டாக உள்ளதாகக் கொள்ளலாம்.

 4. ஒரு வேண்டுகோள் ஐயா.
  பின்னூட்டங்களை தணிக்கை செய்ய ஆரம்பித்திருப்பதால் எப்பொழுது பிரசுரமாகும் என்று தெரிவதில்லை. மின்னஞ்சல் சந்தாதாரராக ஒரு பொத்தான் இருந்தால் உபயோகமாக இருக்கும்.

 5. MullaiNo Gravatar says:

  தமிழ்நாடு வரைபடமும் , அதில் கொள்ளிட ஆறும் , கொள்ளிட ஆற்றை சுழன்றபடி, இருதலை கொல்லி பாம்பும்

  —இது என் வாசிப்பு

 6. sankarNo Gravatar says:

  குரு ,
  என்னுடைய பின்னோட்டம் மட்டுறுபடுதுவது ஏனோ ???????

 7. பேயோன்No Gravatar says:

  விஜய்: எப்படி என்று தெரிந்துகொண்ட பின் செயல்படுத்துகிறேன்.

  முல்லை: தமிழ்நாடு வரைபடம் என்பதைவிட ரோர்ஷாக் வரைபடம் என்றால் பொருத்தமாக இருக்கும். ஒவ்வொரு படைப்பும் அப்படித்தானே?

  சங்கர்: புதியவர்களின் பின்னூட்டங்களை மட்டும் தானாக அனுமதிக்கும் வசதி கிடைக்கும் வரை மட்டுறுத்தலை சகித்துக்கொண்டுதான் ஆக வேண்டும். என்ன செய்ய, சிலர் இடும் பின்னூட்டங்களின் தரம் அல்லது தரக்குறைவு அப்படி.

 8. பேயோன் சார்,

  இரு தலைக் கொல்லி பாம்பை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்..உங்கள் தயவால்தான் அது எப்படி இருக்கும் என்று தெரிந்துக் கொண்டேன் :)

  மிக்க நன்றி !!

  அன்புடன்,
  சுவாசிகா
  http://ksaw.me

 9. பேயோன்No Gravatar says:

  சுவாசிகா: இரு தலைகளானவை பூனைக்குத்தாம் சார் உள்ளன!

 10. என்ன கொடுமை இது சார்… என்னை இந்த 31 வருடமாக இருதலைக் கொல்லி பாம்பு என்று சொல்லி ஏமாற்றியிருக்கிறார்கள் :(

  அன்புடன்,
  சுவாசிகா
  http://ksaw.me

  • பேயோன்No Gravatar says:

   அப்படி ஒன்று இருக்கலாம், ஆனால் நான் வரைந்திருப்பது பூனை படம்.

 11. வீ.புஷ்பராஜ்No Gravatar says:

  //எல்லாமே – பூனை, கிண்ணம், பாம்பு – இரண்டிரண்டாக உள்ளதாகக் கொள்ளலாம்//

  பாம்பு ஒன்றுதானே உள்ளது?!

  • பேயோன்No Gravatar says:

   வீ. புஷ்பராஜ்: மேலே பின்னூட்டமிட்டுள்ள விஜயின் ஃப்ராய்டிய பொருளாக்கத்தின்படி இரண்டு.

 12. dagaltiNo Gravatar says:

  “வாதிற்கிடமுண்டாம் ஞானம் வந்தால்
  ஏதுஞ்செய்யாமல் இன்புறுவென்று”
  ஏதேன் நகரமைத்த கடவுள் சொன்னான்

  நாதன் சொல்கேளா மடமூதாதை
  ஆதாம் ஏவாளை குறுகுறுப்புந்த
  சேதம் நமைச்சேர ஆப்பிள் கடித்தார்

  தீதைச் அவரிடையே தோற்றிய அரவம்
  நாதன் கால்கிளையில் முழிக்கிது – இங்கே
  ஏதும் கண்பிழையா, இதுஎன் காட்சி?

  சாதா விலங்கிலையே இருதலைப்பூசை
  காதோ நாலுண்டாம் விழியும் நாலு
  ஆதாம் தம்பதியர் இணைந்தார்போலே

  ஈதென்ன (அ)தன்முன்னே கிண்ணக்குருதி?
  பாதாம் கீர்போலே குருதிப்பருகத்
  தோதாய் வாயிலையே! நொந்ததுபாம்பு

  க்ரோதம் புகுந்திடவொரு வழியிலாத
  போது பயமிலையே பகைவர்கண்டு
  நீதிக்கதையுண்டே புத்தோவியத்தில்

 13. பேயோன்No Gravatar says:

  டகால்டி: ஒருவருக்கு ஃப்ராய்டியம் என்றால் இன்னொருவருக்கு விவிலியம். இதற்குத்தான் அர்த்தமே இல்லாத படைப்புகளை உருவாக்குவது. அர்த்தம் மற்றவர்களிடமிருந்து வரட்டுமே.

 14. ChithranNo Gravatar says:

  கொள்ளி என்பதை கொல்லி என மாற்றியதிலிருந்தே இது தனித்துவம் பெற்ற படைப்பாகிவிட்டது. :-) மஞ்சள் பாம்பைக் கொன்று சிவப்பு ரத்தத்தை கிண்ணங்களில் ஊற்றிப் பருகும் நாகரீகமிக்க பூனைகள். அது தவிர அடிமரம் கால் கட்டைவிரலாக உருவகப்படுத்தப்பட்டிருப்பதை யாருமே கவனிக்கவில்லையா? நல்ல பின்மாந்திரீகநவீனயதார்த்தவாத ஓவியம்.

 15. பேயோன்No Gravatar says:

  சித்ரன்: நன்றி. ஒருவர் கவனித்து அயாம்பிக் பென்டமீட்டரில் கவிதையே எழுதியிருக்கிறார் மேலே.

 16. incrediblemonkeNo Gravatar says:

  இந்த ஓவியத்தை பார்த்தால் பாம்பின் வாய் அகப்பட்ட தவளை போல பல பல எண்ணங்கள் வந்து மறைகின்றன.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar