28 Responses

 1. உய்… உய்…. உய்ய்ய்ய்

  கட்டம் மிக அருமை.

  பக்கவாத்திய கோஷ்டி (விஜய், சுவாமி, ஆயில்யன்) வந்து மீதி வாசிக்கவும் :))

 2. பேயோன்No Gravatar says:

  ஸ்ரீதர் நாராயணன்: எனது வாசகர்களை இப்படி சிறுமைப்படுத்துகிறீர்களே. நன்றி.

 3. //எனது வாசகர்களை இப்படி சிறுமைப்படுத்துகிறீர்களே. நன்றி//

  மன்னிக்கவும். கட்டத்தை புகழ்ந்தது அதிகப்படிதான்.

  பிள்ளையார் சுழி அருமை. அந்த வயலட் நிறத்தின் மூலம் நீங்கள் சொல்லவரும் செய்தியை சுவாசிகா விளக்குவாரா? :)

 4. புஷ்பராஜ்No Gravatar says:

  கடல் நீரில் தெரியும் நிலாவின் பிம்பம் என்பதாக ஒருமாதிரி புரிந்து கொள்கிறேன். நீங்கள் தலைப்பிட்டிருக்கா விட்டால் குளத்தில் நீந்தும் வாத்து என்பதாக புரிந்து கொண்டிருக்கக் கூடும்.

  • பேயோன்No Gravatar says:

   புஷ்பராஜ்: அந்த பட்சத்தில் நிறைய பிளாஸ்டிக் சர்ஜரி தேவைப்படும் வாத்தாக இருந்திருக்கும்.

 5. //கடல் நீரில் தெரியும் நிலாவின் பிம்பம்//

  @புஷ்பராஜ்… அவர்தான் ‘நிலாக்கடல்’ என்று பெயர் வைத்திருக்கிறாரே. ஒருவேளை நிலாவில் தெரியும் கடல் பிம்பமாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.

 6. நவீன ஓவியங்களை (கதைகளையுமா?) அதன் தலைப்பை வைத்து(தான்) ஒரு முடிவுக்கு வர முடியும் என்று தெரிந்து கொண்டேன்.. நன்றி..

 7. எனக்கென்னமோ உலகம் ஒரு புள்ளியில் ஆரம்பிக்கிறாதுன்னு எதோ பெரிசா சொல்லறாதுக்கு முண்டிக்கிட்டிருக்கீங்களோன்னு தோணுது சரியா? :)

 8. மேலே புஷ்பராஜ் சொன்னது போல், நீங்கள் தலைப்பிட்டிருக்காவிட்டால் இதை abstract அன்னப்பட்சி என்று நினைத்திருப்பேன்.

  பி.கு. வாதத்துக்கு பிளாஸ்டிக் சர்ஜரி அல்ல, வெடிணறி சர்ஜரிதான் செய்யவேண்டும்.

 9. //ஸ்ரீதர் நாராயணன்: எனது வாசகர்களை இப்படி சிறுமைப்படுத்துகிறீர்களே. நன்றி./

  பரவாயில்ல விடுங்க பாஸ் ! யாரு பாஸ் அவுரு இங்கிட்டு அங்கிட்டு பார்க்கப்போனா நம்ம வரிக்குருதை தானே !

  சுகான்மேன் & சுவாசிகா சார்பாக,
  ஆயில்யன்
  :)))))))))))))))))

 10. //ஒரு முடிவுக்கு வர முடியும்//

  ஒரு முடிவுக்கு வரக்கூடாதுங்கிறதுக்காகத்தான் அப்படி…. :))

 11. //பி.கு. வாதத்துக்கு பிளாஸ்டிக் சர்ஜரி அல்ல, வெடிணறி சர்ஜரிதான் செய்யவேண்டும்.//

  பிகுவாதமோ, பிடிவாதமோ… பிளாஸ்டிக் சர்ஜரி என்பதே சரி. பேயோன் ப்ளாஸ்டிக் பிடியுள்ள கலர் பென்சிலால் படம் வரைந்தார் என்றே தெரிகிறது.

 12. பேயோன்No Gravatar says:

  ஸ்ரீதர் நாராயணன்: தலைகீழ் பார்வை படிக்கும்போது உதவலாம், பார்க்கும்போது அல்ல.

  பிரசன்னா: யதார்த்தவாத சித்தரிப்பிலிருந்து சற்று விலகியிருந்தாலே புரிதல் பிரச்சனையாக இருப்பது ஏன் என யோசித்திருக்கிறீர்களா?

  ஆயில்யன்: பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லப்பட்ட ஒரு விஷயத்தை சொல்ல நான் மெனக்கெடுவதில்லை.

  விஜய்: ஓ! அது பக்கவாதமா? ஊளைச் சிறகு என்று நினைத்தேன்.

  ஸ்ரீதர் நாராயணன்: ↑

 13. ஒரு பதிவு எழுத நாமெல்லாம் எவ்ளோ தவிடு திங்கிறோம், இங்க பாருங்க ஒருத்தர் கோடு போட்டு பின்னூட்டம் வாங்குறார்!

 14. பேயோன் சார்,

  சில பல கோடுகளை வைத்தே நிலாவையும் கடலையும் காட்டிய உங்க நுகபிநி!!

  >>>
  //ஸ்ரீதர் நாராயணன்: எனது வாசகர்களை இப்படி சிறுமைப்படுத்துகிறீர்களே. நன்றி./

  பரவாயில்ல விடுங்க பாஸ் ! யாரு பாஸ் அவுரு இங்கிட்டு அங்கிட்டு பார்க்கப்போனா நம்ம வரிக்குருதை தானே !

  சுகான்மேன் & சுவாசிகா சார்பாக,
  ஆயில்யன்

  >>

  :) :) :) ஆமாம் ஆயில்ஸ் அவருக்கு பொறாமை!

  அன்புடன்,
  சுவாசிகா
  http://ksaw.me

 15. :)

  நவீன ஓவியங்களை ரசிப்பது என்பது ஒரு கலை. ரசிப்பிற்குட்படுத்திக் கொள்வதென்பது நல்ல முயற்சி. சிறுபிள்ளையின் வண்ணக் கிறுக்கலையும் புகழ்பெற்ற நவீன ஓவியரின் சித்திரங்களையும் ஒப்பிட்டு நகல் கருத்துகள் முயல்வது அறிவீனமென்று கருதுவேன். சிறுபிள்ளைகளின் வரைதல் கலை உச்சமாக போகாததன் காரணம் எனக்குத் தெரிந்து ஒன்றுதான். தகுந்த அல்லது தகுதியான தலைப்பு வைக்காதிருத்தல். சிறந்த தலைப்பு கொண்ட மொக்கை ஓவியமென்றாலும் அது பார்வையாளர்களை தலைப்பின் கண் கொண்டு பார்வையிடச் செய்யும் விந்தை கொண்டதென புரிந்து கொண்டிருக்கிறேன்.

  ஓவியத் தலைப்பில் பிம்பம், பிரதிபலிப்பு மற்றைய இசம் சார்ந்த கோட்பாடு குறித்த பெயர்கள் வைக்கும் சூழல் பெரிதும் அச்சமுண்டாக்குவதாக அமைகிறது. ஏனெனில் நாம் ஓவியத்தை புரிந்து கொள்வதென்பது நமது கண்ணோட்டத்தின் படி அமையாது மனவோட்டத்தின் படி விரிகிறது. ஓவியம் குறித்த பார்வையாளர்களின் தகுந்த விமர்சனக்குறிப்பு வாசித்தபின்பும் ஓவியத்தின் இடைவெளிகளுக்குட்பட்ட இடங்களில் விரவிய நிறங்களில் உருவங்கள் தேடும் மன சஞ்சலங்கள் புதிய ஓவிய விமர்சகர்களை உண்டாக்கி விடும் அபாயத்தை உள்ளடக்கிய ஒன்றாகும். எனவே பொருந்த தலைப்பு சமைத்தலென்பது ஓவியனின் அர்ப்பணிப்பின் சார்புகளில் ஒன்று.

  உங்கள் ஓவியம் குறித்த தலைப்பு கொண்ட ”நிலாக்கடல்” என்ற சொல்லின் ஊடாய் ஓவியம் ரசிக்க வாசகர்களைத் தூண்டியும் ஓவியத்தை அன்னபட்சியாகவும், வாத்தாகவும் மாற்றி யோசித்து வைத்தல் ஓவியத்தை பின்நவீனமாக மாற்றும் முயற்சியாக காண்பவர் கருதலாமேயொழிய ஓவியனின் திறமையை சற்றும் மதிக்காமை என்பதே என் கருத்தாகிறது.

  கவிதை எழுதி வைத்துள்ளேன்.. படித்துப்பார் என்று படைப்பாளி வாசகனை அணுகுஞ்சமயம் வாசகன் அது வெற்றுத்தாளாவேயிருப்பினும் கவிதையென்ற நோக்கில் மாத்திரமே காகிதம் அணுகுதல் நலம். அன்றி எங்கே கவிதை என்று படைப்பாளியை வினவுதல் படைப்பின் மீதிழைக்கப்படும் துரோகமென்று ஏன் கூறவியலாது?

  நிலாக்கடல் என்ற சொல்லை ஓவியத்தின் ஊடாக வாக்கியப்பொருத்தம் காண முயலும் மற்றும் ஓவியம் பற்றி கருத்துக்கூறும் நோக்கில் எழுத ஆரம்பித்து நீட்டி முழக்குதல் விமர்சகனை அலுப்பூட்டும் செயலென்று கருதுவதால் இது நிலாக்கடல் என்ற சொல்லின் கீழ் வரையப்பட்ட ஓவியமாக மாத்திரம் கருத தலைப்பட்டுக்கொள்கின்றேன்.

  ரோஜாவை எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் ரோஜாவாகவே இருப்பது போலவே ஓவியத்தை எப்படிப் பார்த்தாலும் ஓவியமாகவே இருக்க வேண்டியதன் அவசியத்தை இதை விட சுருக்கமாய் எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை.

  மிக முக்கியமாய் படைப்பாளியிடம் ஓவியம் குறித்த கருத்து கூற வேண்டுமென்று கருதினால் இந்த ஓவியம் குறித்த என் விமர்சனம்…

  ஒரு அனுபவம் தந்தமைக்கு மிக்க நன்றி பேயோன்!

 16. ஸ்ரீதர் நாராயணன் :
  //பிள்ளையார் சுழி அருமை. அந்த வயலட் நிறத்தின் மூலம் நீங்கள் சொல்லவரும் செய்தியை சுவாசிகா விளக்குவாரா? //

  அடடா! என் (மொக்கை) விளக்கத்திற்கு இப்படி ஒரு வரவேற்பா ;)

  பேயோன் சார் தன் புது பேனா எழுதுகிறதா என்ற பரிசோதிக்கையில் உருவானதுதான் இந்த நிலாக் கடல் படைப்பு. இதை பேயோன் சார் இல்லை என்று மறுக்கக்கூடும். அதற்கு அந்த பேனா பொறுப்பாகாது..சொல்லிவிட்டேன்!

  அன்புடன்,
  சுவாசிகா
  http://ksaw.me

 17. incrediblemonkeNo Gravatar says:

  அத்தனை அழகிய நிலவையும் இவ்வளவு பெரிய கடலையும் ஒரே கோட்டில் சொல்லிவிட்டீர்களே
  விட்டீர்களே.உலகின் பார்வைக்கு கடலும் நிலவும்
  வேறு வேறு ஆனால் உங்கள ஒவியத்தில் அது இரண்டும் ஒரே கோடுதான்.அற்புதம் சார்.

 18. சென்ஷி, ம்ஹும்ம்.. நீங்க அவுட். நடுவில் 2-3 தடவ மூச்சு போயிடுச்சு.

  எல்லாமே புரிஞ்சிருச்சு. ரசம் சோறு கோட் போட்டு சாப்பிடாதே மாதிரி ஏதோ சொன்னீங்க் பாருங்க. மிகச் சரி. கோட் மேல ரசம் சிந்தி டிரைக்ளீனிங், பெட்ரோல் வாஷ்னு செஞ்சு ஏகபட்ட செலவு.

  இதுதான் வாத்து இல்லைன்னு சொல்லிட்டாரே. அப்புறமா ஏன் சமைத்து பார்க்கனும்னு ஆசைப்படறீங்க? நிலாவுல ஆயா இட்லி சுடறை சொல்றீங்களோ?

  கவிதை எழுதறது டார்ச்சர்ன்னா அதைப் படிச்சுப்பார்னு சொல்லிக் கேக்கறது சீனப் போலிஸ் செய்யற டார்ச்சர். நீங்க என்னடான்னா வெத்து பேப்பரை கொடுத்து படிக்க சொல்வீங்களா? இது சென்ஷி ப்ராண்ட் டார்ச்சரய்யா…

  ரோஜாவை நீங்களா பேரு மாத்திட்டு ஏன் ரோஜான்னு சொல்லனும்? அதுக்கு பதிலா செல்வமணியை பேரு மாத்தி கூப்பிட்டு பாருங்களேன். இதெல்லாம் ஆணாதிக்கம் இல்லீங்களா…

  //மிக முக்கியமாய் படைப்பாளியிடம் ஓவியம் குறித்த கருத்து கூற வேண்டுமென்று//

  ஓ…உங்களுக்கும் இந்த வியாதி தொத்திருச்சா… Get well soon dear!

 19. sabarinathanNo Gravatar says:

  1. நிலா நெகிழ்ந்து கடலாகி நம் அருகில் சிற்றோடையாகிறது.
  2. 2 எனும் எண்
  3. வாத்து
  4. புயல் (கீழிருந்து பார்த்தால்)
  5. நீ படைப்பாளி நான் துடைப்பாளி என்று கமல் நவீன ஓவியத்திற்கு கொடுக்கும் விளக்கமும் ஞாபகம் வந்து தொலைக்கிறது :))

 20. பேயோன்No Gravatar says:

  வால்பையன்: நன்றாக நாக்கை பிடுங்கிக்கொள்கிறபடியாக கேளுங்கள் சார்!

  சென்ஷி: நன்றி. முக்கியமான சில கருத்துகளை கூறியிருக்கிறீர்கள். காட்சிக்கு அர்த்தம் கூறத் தேவையில்லை. பாக்யா பத்திரிகை அட்டைப்படங்களுக்கு என்ன அர்த்தம் இருக்க முடியும்? இந்த அளவுகோல் எந்த ஓவியத்திற்கும் பொருந்தும். வண்ணங்களை பயன்படுத்தி புகைப்படத்தை போலி செய்தால் சிலர் திருப்தியடையலாம். பழகியதை பார்த்ததும் ஏற்படும் அழகியல் ஆசுவாசும் அது.

  கிறுக்குவதில் தெரிந்து ‘கிறுக்கு’வது, தெரியாமல் கிறுக்குவது என உண்டு. பிகாசோ போன்ற ஓவியர்கள் பொதுப்புத்தி சார்ந்த கலை முயக்கங்களை குறித்து கவலைப்படாமல் தங்களது படைப்பூக்க வெளிப்பாட்டிற்கு சுதந்திரம் அளித்துக்கொண்டு செயல்பட்டதால்தான் அவர்களது படைப்புகள் இன்றளவிலும் புதிதாகவே உள்ளன. அவரது புகழ்பெற்ற படைப்புகளை விட்டுவிட்டு அவர் வரைந்த சின்னச் சின்ன கோட்டோவியங்களை இணையத்தில் தேடிப் பாருங்கள். இது கிறுக்கல் என்று யாராவது கூற முடியுமா? கூறினால் அது நேர்மையாகுமா? இந்த வகை கோட்டோவியங்களை பிகாசோ ‘ஒரு கோட்டை வாக்கிங்கிற்கு அழைத்துப் போதல்’ என விவரிக்கிறார். கிறுக்கல் என்பவர்களுக்கு இதன் பொருள் புரியுமா? இவர்கள் எத்தனை கலைப் படைப்புகளை பார்த்திருப்பார்கள்?

  Paul Klee, George Grosz, Jean Dubuffet போன்றோரும் எக்ஸ்பிரஷனிச, ஃபாவிச இயக்க ஓவியர்களும் குழந்தைகளின் ஓவிய பாணியை வரித்துக்கொண்டார்கள். அவர்களது ஓவிய பாணி தனித்துவமாக இருப்பதற்கு அதுவும் ஒரு காரணம். ஓவியர் வான்கா வண்ணங்களை வாரியிறைத்து, கோணல்மாணலான வடிவங்களை வரைந்தார். ஏனென்றால் அவரது பார்வை அப்படி. அவை இப்போது காவியங்கள். ஆனால் அவரது வாழ்நாள் காலத்தில் பெரும்பாலானோரால் புறக்கணிக்கப்பட்டவை. அப்படியென்றால் நமது ரசனை இன்னும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கிடக்கிறதா? கலைஞனை அப்படி பார்க்காதே, இப்படி பார் என முகவாயைப் பிடித்து திருப்பும் உரிமை தங்களது பார்வையை விசாலப்படுத்த விரும்பாமல் புரியாமை என்கிற அரதப்பழசான குற்றச்சாட்டையே இந்த பின்நவீன யுகத்திலும் வைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு இருக்க முடியாது.

  நிலாக் கடல் என தலைப்பு வைத்திருப்பதற்கு காரணம் நிலாவையும் அதன் பிரதிபலிப்பை முக்கோண வடிவில் காட்டும் கடலையும் எளிமையாக சித்தரிப்பதுதான். வேறு விதங்களிலும் எளிமைப்படுத்தலாம். ஆனால், ஜியோமித வடிவங்களை பயன்படுத்தி காட்சியை நீர்க்கச் செய்ய நேரும். வேறு அர்த்தங்களுக்கு நான் பொறுப்பல்ல. வாத்தாக வரைந்திருந்தால் இது மிக மோசமான ஓவியம்.

  குறிப்பு: இது Art Rage என்ற மென்பொருளை கொண்டு வரையப்பட்டது.

  சபரிநாதன்: இவ்வளவு மெனக்கெட வேண்டாம் என்றுதான் தலைப்பை தெளிவாக வைத்திருக்கிறேன்.

 21. ABCNo Gravatar says:

  இது தாந்த்ரீகத்தில் பயன் படுத்தும் ஒரு குறியிடு என்று நினைகிரீன். இதை போன்று சற்று வித்தயாசமான வடிவில் என்னுடைய நண்பரிடம் பார்த்டிருக்கிரீன்.
  உகாரத்தில் ஆரம்பித்து அதன் கோடானது டீப்பாக ஒரு இடத்தில் முடிகின்றது. முடிகின்ற இடமே ஆரம்பாகவும் கொள்ளலாம்.

 22. நண்பரே,

  நவீன ஓவியத்தை ஒரே சிந்தணையுடன் பார்த்தல் 20ம் நூற்றாண்டின் ஏகாதிபத்திய கால சிந்தணை ஆகாதா ;) #டவுட்டு

 23. பதிவுக்கு சம்பந்தம் இல்லாத ஒரு கேள்வி: பின்நவீனம் என்று சொல்லப்படும் படைப்புகளில், ஆசிரியர் சொல்ல விழையாத/சிந்தித்திராத விஷயங்களை, அவர் இப்படி சொல்ல வருகிறார் என்று சொல்லப்படும்போது.., அந்த ஆசிரியருக்கு அது Undue credit என்று சொல்லலாமா?
  (நான் பெரிய வாசகன் இல்லை, உங்களின் விசிறி அவ்வளவே.., அதனால் இதில் தவறு இருக்கலாம்..
  )

  //இது Art Rage என்ற மென்பொருளை//
  என்ன பொருத்தமான பெயர் :)

 24. பேயோன்No Gravatar says:

  ABC: அவ்வளவுதானா? மெனக்கெட்டு முடித்துவிட்டீர்களா, அல்லது இன்னும் இருக்கிறதா?

  சபரிநாதன்: மொட்டைத் தலையை வழுக்கைத் தலை என்று கூடப் பார்க்கலாம், முழங்கால் என்றால் பொருந்தாது.

  பிரசன்னா: படைப்பாளி சொல்லாத விஷயங்களை ரசிகன் பார்த்துப் புரிந்துகொள்வது அந்தப் படைப்பின் பன்முகத்தன்மையை அல்லது நெகிழ்திறனை காட்டுகிறது. Undue credit என்பது சில சமயங்களில் சாத்தியம். தெளிவான பார்வையும் அறிவும் உள்ள தேர்ந்த ரசிகர்கள் தேவையில்லாத interpretation-களை நம்ப மாட்டார்கள்.

 25. “The notion that the public accepts or rejects anything in modern art is merely romantic fiction. The game is completed and the trophies distributed long before the public knows what has happened.”
  Thomas Wolfe quotes (American short story writer and novelist, 1900-1938)

 26. karthikNo Gravatar says:

  உங்கள் படைப்புகளிலேயே (உண்மையிலேயே) ஆகச்சிறந்தது இதுதான் பேயோன்சார்

 27. பேயோன்No Gravatar says:

  சபரிநாதன்: ஆங்கிலம் படித்தவர்கள் அப்படித்தான் பேசுவார்கள்.

  கார்த்திக்: உங்கள் சொந்தக் கருத்துக்கு நன்றி.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar