படித்துறை

in கவிதை

குளத்தின் நடுவில் போட்டேன்
இன்னொரு கல்லைப் புள்ளி

(முற்றுப்) பாப்கார்னாய் விழுங்கிக் குளம்
வேடிக்கை பார்க்கிற தெள்ளி.

Tags:

10 Responses

 1. நல்லாருக்கு ஆனா புரியல!

 2. அப்ப அதுக்கு முன்னாடிபோட்ட கல்லு எங்கே போச்சுன்னு யோசிக்கிற வேலையை நான் எடுத்துக்கிட்டு தெள்ளி அப்படின்னா என்னன்னு விளக்குற வேலையை கொடுக்கிறேன் சொல்லுங்க..?
  :) #தெரியல தெரிஞ்சுக்க டிரையிங்க்

 3. அருமையான கற்பனை! குளத்தில் போட்ட கல்லையே உங்கள் கவிதை வரிக்கு முற்றுப் புள்ளியாய்ப் பயன்படுத்தியுள்ள விதம் நன்று.

  @ஆயில்யன் அது “தெள்ளி” இல்லை! “வேடிக்கை பார்க்கிறது எள்ளி” (குற்றியலுகரப் புணர்ச்சி)

 4. பேயோன் சார்!

  எனக்கும் ஒண்ணும் புரியல..சரி எனக்குதான் இப்படின்னு பாத்தா அதிஷாக்கும், ஆயில்ஸ்க்கும் புரியல போல.. சோ.. நான் தனி ஆள் இல்லை :)

  ஓ…ஒரு வேளை இந்த கவிதையை புரிந்து கொள்ளும் நேரம் இப்பொழுது இல்லையோ ?!

  அன்புடன்,
  சுவாசிகா
  http://ksaw.me

 5. SANKARNo Gravatar says:

  புரியல! ஆனா நல்லாருக்கு!!!!!

 6. பேயோன்No Gravatar says:

  அதிஷா, ஆயில்யன், சங்கர்: நன்றி. எதுகைக்காக முற்றுப்புள்ளி எழுத்துக்களில் எழுதி பிரிக்கப்பட்டுள்ளது.

  வெய்யோன்: நன்றி.

 7. வெய்யோன் விளக்காமலிருந்தால் எனக்கும் புரிந்திருக்காது.
  அருமை ஐயா.

 8. GanpatNo Gravatar says:

  உங்கள் பதிவுக்கு பின்னூட்டம் வரும் வேகத்தை பார்த்தால் கமா முதலில் பின்னூட்டமும் பிறகு பதிவும் வருவது போல தோன்றுகிறது ஆச்சரியக்குறி
  பி புள்ளி கு கோலன் கீ போர்டில் சில கீக்கள் வேலை செய்யவில்லை புள்ளி சிரமத்திற்கு மன்னிக்கவும் புள்ளி.

 9. பேயோன்No Gravatar says:

  விஜய்: நன்றி.

  Ganpat: அர்த்த ராத்திரி குடைபிடிப்பது போலுள்ளது நீங்கள் செய்வது.

 10. குளம் எதையும் எதிர்க்காமல் ஏற்றுக்கொள்ளும் மனத்தின் குறியிடு.

  முதல் கல்லை எரிந்தீர்கள்.குளம் எதிர்த்து
  அது ஒரு கல்லை வீசாமல் ஏற்றுக்கொண்டது.

  இரண்டாவது கல் எரிந்த போது குளம்
  பாப்கார்ன் சாப்பிடுவது போல் உணர்கிறீர்கள்.

  கடைசியில் குளம் உங்களின் பொறுமையை
  வேடிக்கை பார்பதாக உணர்கிறீர்கள்.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar