மழை பற்றி இரண்டு

in கவிதை

1.

எனக்கும் மழையைப் பிடிக்கும்.

பக்கெட்டைக் கவிழ்த்ததுபோல்
ஒரேயடியாகக் கொட்டிவிடாமல்

கொஞ்சம் மெனக்கெட்டால்
இங்கு வர வேண்டிய
உவமை போல்

துளித்துளிகளாகப் பெய்யும்
மழையைப் பிடிக்கும் எனக்கு.

2.

மழையில் நனைந்த ராட்சத மரம் ஒன்றை
வானிலிருந்து உலுக்குவது போல்
உதிர்கிறது மழை.

Tags: , ,

11 Responses

 1. //கொஞ்சம் மெனக்கெட்டால்
  இங்கு வர வேண்டிய
  உவமை போல்//

  இங்கேதான் சிம்மாசனமிட்டு உட்கார்ந்திருக்கிறார் எங்கள் பேயோன்!

 2. //மழையில் நனைந்த ராட்சத மரம் ஒன்றை
  வானிலிருந்து உலுக்குவது போல்
  உதிர்கிறது மழை.//

  வார்த்தைகளுக்கு மழை புகுந்துகொண்டு ச்சோவென வெளுத்துகட்டுகிறது!

 3. //மழையில் நனைந்த ராட்சத மரம் ஒன்றை
  வானிலிருந்து உலுக்குவது போல்
  உதிர்கிறது மழை.//

  மழையிலிருந்தே மழையை உவமைபடுத்தியது நன்றாக இருக்கிறது

  அன்புடன்,
  சுவாசிகா
  http://ksaw.me

 4. GanpatNo Gravatar says:

  சென்னைவாசிகளுக்கு,சற்று அதிகமாகவே,மழையை பிடிக்கும்..
  அதன நீரை, ஒரு வாரத்திற்கு,சாலையிலேயே வைத்து,அழகு பார்க்கும்,
  சென்னைவாசிகளுக்கு,சற்று அதிகமாகவே,மழையை பிடிக்கும்.

 5. ChithranNo Gravatar says:

  இரண்டுமே சூப்பர். இரண்டாவது எக்ஸலெண்ட்.

 6. பேயோன்No Gravatar says:

  பரிசல்காரன்: நன்றி.

  ஆயில்யன்: நன்றி.

  சுவாசிகா: நன்றி.

  கண்பத்: முதல் கவிதையை விட இரண்டாவதில் சில சென்டிமீட்டர் அதிகம் பெய்ததை சொல்ல தவறிவிட்டீர்களே.

  சித்ரன்: நன்றி.

 7. sankarNo Gravatar says:

  ///கொஞ்சம் மெனக்கெட்டால்
  இங்கு வர வேண்டிய
  உவமை போல்////
  இதை படிக்கும் போது ஒன்றும் புரியவில்லை …,கொஞ்சம் ஆழ்ந்து படித்தேன் சுவையாக உள்ளது …..,

  ////மழையில் நனைந்த ராட்சத மரம் ஒன்றை
  வானிலிருந்து உலுக்குவது போல்
  உதிர்கிறது மழை./////
  இதை யோசித்து பார்க்கும் போது ….,ஒரு பிரம்மாண்டம் ….,பேயோன் rockssssss …….,

 8. DharshanNo Gravatar says:

  இரண்டும் அருமை
  முதலாவதில் உவமைக்காய் கொஞ்சம் மினக்கிட்டிருக்கலாம்தான் ஆனால் பேயோன் டச் தவறியிருக்கும். இரண்டாவது உண்மையில் அழகான கற்பனை

 9. பேயோன்No Gravatar says:

  சங்கர்: நன்றி.

  தர்ஷன்: நன்றி.

 10. salamNo Gravatar says:

  அந்த மெனக்கெடல் தான் 2 வது கவிதையோ ?

 11. ‘மழை தொடங்கறதுக்குள்ள போயிறணும்’
  ‘மழை நின்னவொடன திரும்பிறணும்’
  ‘சின்னதா தூறல் போடறப்பவே ஒதுங்கி நின்னுக்கணும்’
  ‘மழை விட்டவொடனே விறுவிறுன்னு நடையைக் கட்டணும்’
  ‘மழையில நனைஞ்சா காய்ச்சல் வந்திரும்’
  ‘மேகமூட்டமா இருக்குன்னு தெரிஞ்சா கையோட குடை
  எடுத்துக்கிட்டு தான் போகணும்’
  ஆமா..ஏன் மழை யாருக்குமே புடிக்கிறதில்ல ?

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar