22 Responses

 1. natbasNo Gravatar says:

  ஆஹா! ஒரு வழியா கண்டு பிடித்து விட்டேன்!

  சதுரங்க மேடையில்தானே இந்தப் பேராயர் பயணம் செய்திருக்கிறார்?

  ஆனால், அதிலும் அவர் வெண் கட்டங்களில் பயணிப்பதை இந்த அளவுக்கு நுண்மையாக உங்களைத் தவிர வேறு யாரும் புனைந்திருக்க முடியாது…

 2. கருப்பு பாதி, வெள்ளை பாதி, விளங்க முடியாது ஒவியம் இது :(

  அன்புடன்,
  சுவாசிகா
  http://ksaw.me

 3. பேராயர்ன்றவர் யாரு?.. பிரபல பதிவரா..

 4. வீ. புஷ்பராஜ்No Gravatar says:

  பேயோனின் ஓவியப் படைப்புகள் வர வர எம் சிற்றறிவுக்கு எட்டுவதாக இல்லை. நீங்கள் ஏதாவது ஓர் ஓவியத்தை தலைப்பிடாமல் வழங்கி பாருங்கள். பின்னூட்டப் புரிதல்களின் பரிமாணங்கள் மலைக்க வைக்கும்.

 5. சந்தோஷ்No Gravatar says:

  மேட்ரிக்ஸ் பேராயர் போல!

 6. ChithranNo Gravatar says:

  “Dangerous Dave” மாதிரி ஏதோ ஒரு கம்ப்யூட்டர் கேம். அதில்வரும் சாகச நாயகன் இப்படித்தான் தாவித் தாவி ஒரு கதவை அடைவான். சரிதானே என் புரிதல்..?

 7. பேயோன்No Gravatar says:

  natbas: இவ்வளவு குதூகலமா? பேராயர் பயணிப்பது கறுப்பு சதுரங்களில். அந்தப் பாதையை மட்டுமே வரைந்திருக்கிறேன்.

  சுவாசிகா, அதிஷா, வீ. புஷ்பராஜ், சந்தோஷ், சித்ரன்: பேராயர் என்பது செஸ் ஆட்டத்தின் பிஷப்பை குறிக்கிறது.

 8. incrediblemonkeNo Gravatar says:

  மனித பயணத்தால் எட்ட முடியாத நட்சத்திர மண்டலமோ என்று நினைத்தேன்.குறுக்காக நகரும் சதுரங்க ஆட்ட பிஷப்பை பற்றியதா இப்படம்.நன்று.
  மூலை தினறி விட்டது.

 9. //செஸ் ஆட்டத்தின் பிஷப்பை குறிக்கிறது.//

  :)) Google Mapsல் பேராயர் பயணம் செய்த இடங்களைக் காட்டுகிறதோ என்று கூட தோன்றியது.

  //நன்று. மூலை தினறி விட்டது//

  எழுத்து பிழைக்கெல்லாம் சென்சார் கிடையாதா?

 10. பேயோன்No Gravatar says:

  incrediblemonke: நன்றி.

  ஸ்ரீதர் நாராயணன்: திருத்தலாம் என சிந்தித்து கைவிட்டேன்.

 11. GanpatNo Gravatar says:

  //எழுத்து பிழைக்கெல்லாம் சென்சார் கிடையாதா?//

  ஏதோ,நெடில், குறில் ஆகாத மட்டும், தப்பித்தது!

 12. பேயோன் சார்..உங்க ஒவியத்துக்கு நீங்களே விளக்கம் கொடுக்கும் அளவிற்கு சிரமம் கொடுத்தற்கு மன்னிக்கவும்..

  நீங்கள் எவ்வளவுதான் எங்களுக்கு பல்ப் கொடுத்தாலும் என்னை போன்ற சிலர் இன்னும் ட்யூப் லைட்டாக இருப்பதுதான் இதற்கு காரணம் போலும் :(

  அன்புடன்,
  சுவாசிகா
  http://ksaw.me

 13. தேவ மைந்தன் போகின்றான் அப்படின்னு ஒரு ராகத்தோட பாடித்தான் பார்த்தேன் அப்பவும் புரிபடல! ஆமாம் ராஜாவையோ அல்லது ராணியையை அட்டாக் செய்யத்தானே அந்த பயபுள்ள போகுது அதுக்கு ஏன் இம்புட்டு ஆட்டம்/ஆர்ப்பாட்டம் சடக்குன்னு சைடு கட் பண்ணிப் போயி படக்குன்னு சப்ஜெக்ட் முடிக்கலாம்ல !

 14. //என்னை போன்ற சிலர் இன்னும் ட்யூப் லைட்டாக இருப்பதுதான் இதற்கு காரணம் போலும்/

  ஆமாம்!

  ஆமாம்!

  சிலருக்கு முன் – என் பெயரினையும் சேர்த்துக்கொள்ள சுவாமிக்கு அனுமதி தந்தேன் :)))

 15. FirefoxSuryaNo Gravatar says:

  Hmmm…It’s a nice work done by you sir. I like it very much. There’re many hidden meanings have revealed to me by the follow-up comments. I wanna know, with whom have you played Chess? Please tell me sir.
  ***My yester saying is too correct. You are a good Studier & Creator. Keep rocking!***

  With all rights,
  Firefox Surya

  http://twitter.com/FirefoxSurya

 16. natbasNo Gravatar says:

  @ButterflySurya

  //***My yester saying is too correct. You are a good Studier & Creator. Keep rocking!***//

  “எனது நேற்றைய பழமொழி சரியினும் மிகையே. நீங்கள் தேர்ந்த வீரியவாண் & ஆக்கர். ஆடிக் கொண்டே இரும் ஐயா!”

  தமிழை ஆங்கிலத்தில் மறைத்து வைத்தால் எங்களுக்கு மீட்டெடுக்கத் தெரியாமல் போய் விடுமா!

 17. @natbas

  //தமிழை ஆங்கிலத்தில் மறைத்து வைத்தால் எங்களுக்கு மீட்டெடுக்கத் தெரியாமல் போய் விடுமா!//
  Have I told you?
  Don’t waste precious Thamizh words by questioning me! It’s not a place to translate & prove your skill but a place to enjoy the creative works of Mr. Payon. You might think something different about me then. So I advice you to see http://FirefoxSurya.blogspot.com .
  You made a spelling mistake in your translation. That is not “வீரியவாண்” that isn’t triple curl, twice curl should be used. So you’re not trained well in the gender suffix. Read it first, question me later.

  With all rights,
  Firefox Surya

  http://twitter.com/FirefoxSurya

 18. natbasNo Gravatar says:

  @FirefoxSurya

  மன்னித்து விடுங்கள் சார். நீங்கள் விளையாட்டாய் எழுதினீர்கள் என்று நினைத்து நானும் விளையாட்டு செய்து விட்டேன்.

  உங்கள் உணர்வுகள் புண்பட்டமைக்கு வருந்துகிறேன். எனது முந்தைய பின்னூட்டத்தை நீக்கி விடுமாறு திரு பேயோன் அவர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.

  என்னை அறிவுறுத்தும் பொருட்டு இந்த மன்னிப்புப் பின்னூட்டம் சாட்சியாய் நிற்கட்டும்.

  நன்றி.

 19. GanpatNo Gravatar says:

  Firefox surya!

  Sorry to say…

  You lack sense of humour!

  This is evidenced by your taking natbas and veyilon seriously.!!

  Cheers,

 20. கல்லூரியில் எனக்கென்று தனிக் கணினி கிடையாது. என் விருப்பத்திருக்கு நான் மென்பொருட்களைத் தரவிறக்கி நிறுவுதல் கூடாது. எனவேதான் கருத்துகளை ஆங்கிலத்தில் கூறிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் என்னவென்றால் படைப்புகளைப் பாராமல் பின்னூட்டங்களைப் பிரித்து மேய்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

  @Ganpat நான் நகைச்சுவை உணர்வற்றவன் அன்று. ஆனால் தேவையே இல்லாமல் பின்னூட்டத்தை ஏன் பகுத்தாய்ந்துக் கொண்டிருக்கிறீர் என்றுதான் கேட்கிறேன்.

  உரிய உரிமையுடன்,
  ஞெலிநரி வெய்யோன்.

  http://twitter.com/FirefoxSurya

 21. சந்தோஷ்No Gravatar says:

  பேயோன், நீங்க பாட்டுக்கு புள்ளி வச்சிட்டு போயிட்டீங்க. மக்கள் எப்படி பின்னூட்டத்துல கோலம் போடுறாங்க பாருங்க. டயர்டாகீது நைனா!

  • பேயோன்No Gravatar says:

   இதுவும் கடந்து போகும் என்று இருந்துவிட வேண்டியதுதான்.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar