வெட்டு

“சார்!” கைக்கடிகாரத்தைப் பார்த்து மணி சொல்ல மனதைத் தயார்ப்படுத்திக்கொண்டு குடையுடன் திரும்பினார். “உங்களை ஒரு நல்ல காரியத்திற்குப் பயன்படுத்திக்கொள்கிறேன் சார்.” அலறக்கூட நேரமின்றி கழுத்தைப் பிடித்துக்கொண்டு இருளுக்குள் சரிந்தார்.

23 thoughts on “வெட்டு

  1. அருமை, நல்ல காரியம் எது , அவரின் உடல் உறுப்புக்கள் ஆ

  2. அச்சச்சோ! அதற்குள் வெட்டி விட்டீர்களே! கொஞ்சம் வளர விட்டிருக்கக் கூடாதா…

  3. களங்கம் இல்லாத தீமையை எப்படி புரிந்து கொள்ளமுடியும் முட்டால்களால்.

  4. பேயோன் சார்
    வர வர உங்கள் ஓவியம் போல சிறுகதையும் படித்தவுடனே புரியவில்லையே :(

    அன்புடன்,
    சுவாசிகா
    http://ksaw.me

  5. இது ஒரு அருமையான சரித்திரத் துப்பறியும் கதை என்பதைத் திரு ராம்ஜி யாஹூ தந்த துப்பைக் கண்டதும்தான் புரிந்தது.

    ““சார்!” கைக்கடிகாரத்தைப் பார்த்து மணி சொல்ல மனதைத் தயார்ப்படுத்திக்கொண்டு குடையுடன் திரும்பினார். “- இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. இல்லாவிட்டால் குரலைக் கேட்டதும் மணி சொல்லத் தயாராவானேன்? எதற்கு வேண்டுமானாலும் அழைக்கப்பட்டிருக்கலாமில்லையா?

    அடுத்து, இருவரும் இன்ன நேரத்தில் இன்ன இடத்தில் சந்திப்பது என்று முடிவு செய்துக் கொண்டுதான் அங்கு வந்திருக்கிறார்கள் என்பது தெளிவு. இருவரும் சரியான நேரத்தில்தான் சந்தித்துக் கொண்டிருக்கிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ளவே கதையின் நாயகன் தன் கடிகாரத்தில் மணி பார்க்கத் துணிகிறார்.

    ““உங்களை ஒரு நல்ல காரியத்திற்குப் பயன்படுத்திக்கொள்கிறேன் சார்.”- ஏதோ இப்போதுதான் முதன் முறையாக நம் கதாநாயகன் பயன்படுத்திக் கொள்ளப்படப் போவது போன்ற தோற்றம் இந்த வசனத்தைப் படித்ததும் வருகிறது. ஆனால் அப்படி அல்ல (இந்த உத்தியை ஷெர்லாக் ஹோம்ஸ் ரெட் ஹெர்ரிங் என்று சொல்வார். அவர் தமிழில் என்ன சொல்லியிருப்பார் என்று என்னால் யூகிக்க இயலவில்லை).

    நம் நாயகன் குடையுடன் திரும்பினான் என்று என் பேயோன் சார் சொல்ல வேண்டும்? ஒரு நாடகத்தில் துப்பாக்கி இருந்தால் அது எப்படியும் வெடித்தாக வேண்டும் என்று புஷ்கின் போட்ட சட்டம் ரஷ்ய இலக்கியம் படைத்த திரு பேயோனுக்குத் தெரியாததல்ல. அப்படியானால் இந்தக் கதையில் குடை என்ன வேலை செய்கிறது?

    இதற்கு பதில் சொல்லுமுன் இன்னொரு கேள்வி- திரு பேயோன், இக்கதையை “சார்” என்று ஏன் துவங்கியிருக்க வேண்டும்? இதற்கு பதில், அடுத்து எழுதப்படாமல் விட்டுப் போன வாக்கியத்தில் இருக்கிறது. நாமானால், “அந்தக் குரல் அவர் காதில் விழுந்தது/ அந்தக் குரலை அவர் காது கொடுத்துக் கேட்டார்,” என்றெல்லாம் எழுதுவோம், இல்லையா? ஆனால் திரு பேயோன் ஒரு தேர்ந்த உத்தியைக் கையாளும் பொருட்டு அந்த வரியை மறைத்து விட்டு, “கைக்கடிகாரத்தைப் பார்த்து மணி சொல்ல மனதைத் தயார்ப்படுத்திக்கொண்டு குடையுடன் திரும்பினார்.” என்று எழுதுகிறார். அவர் எக்காரணத்தின் பொருட்டு நாயகனின் காதுகள்/ செவிகளின் பால் நம் கவனம் செல்லாதவண்ணம் அந்த முக்கியமானத் தகவலைப் பாதுகாத்தார்?

    குடையில் இருக்கிறது துப்பு. குடை இந்தக் கதையில் என்ன செய்கிறது என்று கேட்டேன் இல்லையா? அது கோடையை நினைவுபடுத்தும் வேலையை செய்கிறது. இப்போது தெரிகிறது இல்லையா, ஏன் அவர், “அவன் காது கொடுத்துக் கேட்டான்.” என்று எழுதவில்லை என்பது?

    ஆமாம், இது பின் நவீனத்துவ உத்திகளைப் பயன்படுத்தி எழுதப்பட்ட கர்ணனின் வாழ்வின் கடைசி கணங்கள்.

    “…கழுத்தைப் பிடித்துக்கொண்டு இருளுக்குள் சரிந்தார்” என்ற வரிகள் எத்தனை நுண்ணுணர்வோடு, நம் நாயகன், கர்ணன், ஒரு நல்ல காரியத்துக்காக, கொடை உள்ளத்துடன், சரியான சமயத்தில் தன் தலையையே கொடுத்தான் என்ற உண்மையை சொல்கிறது!

    “அச்சச்சோ! அதற்குள் வெட்டி விட்டீர்களே! கொஞ்சம் வளர விட்டிருக்கக் கூடாதா…” என்று முதலில் பின்னூட்டம் இட்டபோது, “கதையைத் துவக்கியவனுக்கு எப்போது வெட்ட வேண்டும் என்று தெரியாதா ஐயா!” என்று பேயோன் சார் பதில் சொல்வார் என்று நினைத்தேன்.

    நம் அனைவரின் பின்னூட்டங்களுக்கும் அவர் இதுவரை பதில் சொல்லாததில் இருந்து இந்தக் கதை மௌனத்தால், மறைக்கப்பட்ட தகவல்களால், சொல்லப்படுகிற கதை என்று புரிகிறது.

    ஒரு நல்ல கதையைப் படித்த திருப்தி எனக்குக் கிடைத்தது என்று சொன்னால் மிகையல்ல. இந்தக் கதையை இதை விட சிறப்பாக, இதன் உட்கிடைகளை இதைவிட விவரமாக விரித்திருக்க முடியாது என்பது என் எண்ணம். நன்றி.

    (ஈவு இரக்கமின்றி வளவளவென்று நான் மொக்கை போட்டிருக்கிறேன் என்று நீங்கள் கருதினால் இந்தப் பின்னூட்டத்தை ஒரேயடியாக மட்டறுத்துவிடலாம்-)

  6. @natbas
    /*அது கோடையை நினைவுபடுத்தும் வேலையை செய்கிறது */

    அது கொடையா?

    உங்கள் விளக்கம் எனக்கு குடை வரை ஒத்து போகிறது. ஆனால் எந்தப் புள்ளியில் அது கர்ணனோடு இணைகிறது என்று குழப்பமாக இருக்கிறது.

  7. பிரபஞ்சன் சொன்னது மாதிரி இது “மணியார்டர் ஃபார்ம்” கதை.
    தகவல் அளிக்கும் பகுதியின் அளவே உள்ள கதை.

  8. ramji_yahoo, ஆயில்யன்: நன்றி.

    சரவண வடிவேல்: சிறுகதை என்றால் இவ்வளவு வார்த்தைகளுக்குக் குறையாமல் இருக்க வேண்டும் என்றில்லையே. அதில் இருக்கும் விஷயமே அவ்வளவுதான். கதையை வாசகர்தான் ஊகித்தோ உருவாக்கியோ கொள்ள வேண்டும்.

    சுவாசிகா: இந்த கருத்தை அலுப்பில்லாமல் சொல்லிவரும் உங்களுக்கு என் பாராட்டுக்கள்.

    natbas: பின்னூட்டம் நாகரீகமாக இருக்கும் வரை 10000 வார்த்தைகளுக்கு மிகாமல் கூட இருக்கலாம். மர்மங்களை வைத்துத்தான் எழுதினேன். இருந்தாலும் இவ்வளவு விளக்கமளிக்க அதில் எதுவும் இல்லை. இதை நான் பெருமையாகவே சொல்லிக்கொள்கிறேன்.

    சின்னப்பயல்: பிரபஞ்சன் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.

    சென்ஷி: விமர்சக வடிவ வாசகர்களிடமிருந்து எனவும் கூறலாம்.

  9. இந்த கதை கி.பி 3010ல் நடப்பதாக (எந்திரன் பட பாதிப்பு) ஒரு கற்பனை.
    இயந்திரமும் மனிதர்களும் இயல்பாக நேரிடையாக பேசிக் கொள்ளும் காலம்.
    மனிதன் பெயர் மணி.
    “சார்!” (என்று அழைத்த)
    கைக்கடிகாரத்தைப் பார்த்து
    மணி (பதில்) சொல்ல
    மனதைத் தயார்ப்படுத்திக்கொண்டு குடையுடன் திரும்பினார்.
    (குடை மனிதருக்கு உதவும் எந்திரன்)
    “உங்களை ஒரு நல்ல காரியத்திற்குப் பயன்படுத்திக்கொள்கிறேன் சார்.”
    என்றது கடிகார எந்திரன்.
    அலறக்கூட நேரமின்றி
    கழுத்தைப் பிடித்துக்கொண்டு இருளுக்குள் சரிந்தார்.
    (குடை ரிப்பேராகி விட்டதால் நீட்ட முடியவில்லை.)

  10. அலறக் கூட நேரமின்றி – இதில் கவிதை அழகு தெரிகிறதா? நேரம் இல்லை = ?
    கடிகாரம் இந்த கதையின் வில்லனா? கதா நாயகனா?

  11. //கழுத்தைப் பிடித்துக்கொண்டு இருளுக்குள் சரிந்தார்.//

    இந்த இடத்தில் டைட்டில் போடறோம். ‘டாங்… டடடங்..’னு பீஜிஎம்மோட…

  12. @வீரராகவன்

    மிக நல்ல முயற்சி!

    தொடர்ந்து ‘கழுத்தைப் பிடித்துக்கொண்டு இருளுக்குள் சரிந்தார்’ என்ற வரியை கட்டுடைச்சுப் பார்க்கலாம்.

    ‘கழுத்து’ ஒரு விண்கலம். ‘இருள்’ ப்ளாக்ஹோல்…

    இப்படியே நூல்பிடிச்சுட்டுப் போனா நிஜமாவே ஏதாவது ஒரு நல்ல அறிவியல் புனைவு கிடைக்கலாம் :)

    @பேயோன் தினமும் உங்க தளத்துக்கு வந்து படிக்கிறது ஒரு வழக்கமாப் போச்சு. I really enjoy it!

  13. இன்னொரு பார்வை.
    கதை ஆரம்பத்திலிருந்து இறுதி வரை கையைச் சுற்றித் தான் நடக்கிறது. இது சிறந்த சிறுகதைக்கான இலக்கணம்.
    கடிகாரம் கையில்தான் கட்டப்பட்டுள்ளது.
    குடை கையில்தான் பிடித்திருக்கப் பட வேண்டும்.
    கழுத்தை பிடிக்க கைதான் பயன்பட்டிருக்கப்பட முடியும்.
    கடிகாரம் கட்டப்பட்டவரின் நம்பிக்(கை) வேறு.
    அழைத்த குரலின் நம்பிக்(கை) வேறு.
    வாசிப்பவருக்கு ஆரம்பத்தில் இருந்த நம்பிக்(கை) வேறு.
    முடிவை வாசித்தபின் ஏற்பட்ட நம்பிக்(கை) வேறு.
    எழுத்தாளரின் நம்பிக்(கை)யோ வேறுதானே?

  14. ஸ்ரீதர் நாராயணன்: நானே இந்தப் பக்கம் வருவதில்லை.

    வீரராகவன்: இவ்வாறு உதிரி உதிரியாக எழுதுவதற்கு மாறாக கட்டுரையாக தொகுத்தால் உங்களுக்கு வசதி.

  15. ஓரெழுத்து:
    ————-

    அ.

    (முற்றும்.)

    பேயோன்No Gravatar Reply:

    Haranprasanna: நோட்டீஸ் ஒட்டாதீர்.

  16. //நானே இந்தப் பக்கம் வருவதில்லை.//

    ஹேய்ய்ய்ய்! பேயோன் மாடரேஷனை தூக்கிட்டாராம்யா… அதிரி புதிரி அனானி கமெண்ட் போட்டு வெளாடறதுக்கு ஒரு இடம் சிக்கிருச்சேய்ய்ய்…