புனைவு

in குறும்படம், சிறுகதை, புனைவு

புனைவு from பேயோன் on Vimeo.

எனது முதல் குறும்பட முயற்சி. படத்தை Vimeo வலைதளத்தில் பார்க்க இங்கு கிளிக் செய்யவும். திரைக்கதையை தரவிறக்க இங்கு கிளிக் (PDF) செய்யவும்.

Tags: , ,

20 Responses

 1. தெய்வமே!
  ஓவியன் ஓவியம் வரைவதையும்,
  சிற்பி சிலை செதுக்குவதையும்,
  இசைக்கலைஞன் இசைக்கருவி வாசித்து இசையமைப்பதையும்
  படமாகப்பார்த்து பழகிய என்னைப்போன்ற ரசிகனுக்கு,
  ஒரு மாபெரும் எழுத்தாளன் எப்படி இலக்கியக்காவியம் படைக்கின்றான் என்று
  இந்தக்குறும்படத்தின் மூலம் விளக்கியதற்கு நன்றி.

 2. //தெய்வமே!
  ஓவியன் ஓவியம் வரைவதையும்,
  சிற்பி சிலை செதுக்குவதையும்,
  இசைக்கலைஞன் இசைக்கருவி வாசித்து இசையமைப்பதையும்
  படமாகப்பார்த்து பழகிய என்னைப்போன்ற ரசிகனுக்கு,
  ஒரு மாபெரும் எழுத்தாளன் எப்படி இலக்கியக்காவியம் படைக்கின்றான் என்று
  இந்தக்குறும்படத்தின் மூலம் விளக்கியதற்கு நன்றி.///

  நான் சொல்றதுக்குள்ள அப்படி என்ன அவசரம் டாக்டர் :)

 3. //நான் சொல்றதுக்குள்ள அப்படி என்ன அவசரம் டாக்டர் //

  ஆமாம் ஆமாம்…எப்பொழுதும் முதல் பல்பு ஆயில்யன் சாருக்குதான் :)

  சே…இப்படி நோட்பேட்ல கூட படம் எடுக்கலாம்னு தெரியாம போச்சே..

  பேயோன் சார்..இது லோ பட்ஜெட் படமா, ஹை பட்ஜெட் படமா?

  ஒரு வேளை microsoft wordல அடிச்சிருந்தா சே எழுதியிருந்தா சே படம் எடுத்திருந்தா ஹை பட்ஜெட் படமாக இருந்திருக்குமோ??!!

  அன்புடன்,
  சுவாசிகா
  http://ksaw.me

 4. பேயோன்No Gravatar says:

  விஜய்: நன்றி. நீங்கள் இதை ஆவணப் படமாக பார்ப்பது புரிகிறது. அப்படியும் பார்க்கலாம்.

  சுவாசிகா: மைக்ரோசாப்ட் வேர்டு இதற்கு உகந்ததல்ல. எழுத்துகளுக்கு bold, italics, alignment போன்றவை கொடுத்தால் படத்தின் நீளம் அதிகரித்துவிடும். தேவையில்லாத நகாசுகளை தவிர்க்கவே நோட்பேட்.

 5. //நோட்பேட்ல கூட படம் எடுக்கலாம்னு தெரியாம போச்சே//

  வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், சுவாமி.

 6. இசை அருமையாக இருந்தது.

  இன்னமும் கொஞ்சம் நீளத்தை குறைத்திருக்கலாம். //தேவையில்லாத நகாசுகளை தவிர்க்கவே நோட்பேட்// நல்ல தேர்வு.

 7. சொல்ல விட்டுபோனவை

  எடிட்டிங்க் செஷன் சூப்பரா இருந்துச்சு கர்சர் வார்த்தைக்கு பக்கத்தில், எழுத்தின் கிட்ட போகும்போதே எனக்குள் ரெண்டு 3 ஆப்ஷன் வந்துடுது. இத்தினி நாளும் இங்க உழன்றதுக்கு ஏதோ கொஞ்சமா திருப்தி [நமக்கும் நாலு வார்த்தை தெரியுதேன்னு] சமகால கணினி வழி __________ எழுத்தாளர்களுக்கு நல்லதொரு வழிகாட்டி!

 8. //Please help improve this article by adding citations to reliable sources///

  என்ன ஹெல்ப்பு வேணும்ன்னாலும் கூச்சப்படாம கேளுங்க! டாக்டர்கிட்ட சொல்லி செய்ய சொல்லிடுறோம் ! :))

 9. cleverboyNo Gravatar says:

  டியர் பேயோன், உங்களுடைய பரமார்த்த சீடர்களுக்கு கமெண்ட் மோட்சம் கொடுக்க ஒரு யோசனை. தனியே ஒரு தளம் தொடங்கி நீங்கள் பிரசுரிக்கும் அனைத்துக்கும் அவர்கள் அங்கே கமெண்ட் அளிக்கலாம் என்று சொல்லிவிடவும். குழுவுக்கு டாக்டரைத் தலைவராகவும் ஆயில்யன், கேசாமி இருவரையும் செயலாளர்களாகவும் நியமித்துவிட்டால் நல்லது. இங்கே உங்களுடைய ஒவ்வொரு எழுத்துக்குக் கீழேயும் அவர்கள் கமெண்ட் இடுவதில் ஒரு பிரச்னை. உமது படைப்பைக் காட்டிலும் அவை சிறந்ததாகச் சிலருக்குத் தோன்றிவிடுகிறது. பரிசீலிக்கவும்.

 10. incrediblemonkeNo Gravatar says:

  எழுத்துக்கள் வார்த்தைகளாகவும், வார்த்தைகள் வரிகளாகவும் மாறி கதையாக வளர்வதும் இடையே ஏற்படும் தவறுகளை எளிதாக திருத்திக்கொண்டு முன்னேறும் தத்துவப் பாங்கும் திரையில் அழகாக வந்துள்ளது சார்.

  உங்கள் முதல் குறும்படம் புனைவுக்கு வாழ்த்துக்கள்.
  அதோடு Making of புனைவு இருந்தால் அதையும்
  பார்க்க ஆசைபடுகிறேன்.

 11. sankarNo Gravatar says:

  தெய்வமே ,

  சான்ஸ்லெஸ் சான்ஸ்லெஸ் சான்ஸ்லெஸ் சான்ஸ்லெஸ் சான்ஸ்லெஸ் சான்ஸ்லெஸ் சான்ஸ்லெஸ் சான்ஸ்லெஸ் சான்ஸ்லெஸ் சான்ஸ் லெஸ் சான்ஸ்லெஸ் சான்ஸ்லெஸ் சான்ஸ்லெஸ் சான்ஸ்லெஸ் சான்ஸ்லெஸ் சான்ஸ்லெஸ் சான்ஸ்லெஸ் சான்ஸ்லெஸ் சான்ஸ்லெஸ் சான்ஸ்லெஸ் சான்ஸ்லெஸ்

 12. அருமை..

  பின்புலம் வெள்ளையாக இருந்தாலும், படம் கொஞ்சம் நீளமாக இருப்பதாக உணர்கிறேன்.

 13. பேயோன்No Gravatar says:

  ஸ்ரீதர்: நீளத்தை குறைப்பதென்றால் pregnant pauseகளில் கைவைக்க வேண்டியிருக்கும் என்பதால்தான் விட்டுவிட்டேன். Real time என்பதன் சாயலாவது வேண்டும் அல்லவா?

  ஆயில்யன்: நன்றி.

  cleverboy: இன்னொரு தளம் என்றால் தரையிறங்கிவிடும்.

  incrediblemonke: பல நாளாக வளராமல் கிடந்த ஒரு கதையை இதில் பயன்படுத்தியிருக்கிறேனே தவிர தொழிற்படுத்தவில்லை. இங்கு உரையை விட உரையின் மீது செய்யப்படும் செயல்களே முக்கியம். வீடியோவை பார்த்து திரைக்கதையில் மாற்றங்கள் செய்த பின் இங்கு ஏற்றுகிறேன்.

  சங்கர்: நன்றி.

  சரவண வடிவேல்: வெள்ளைக்கும் நீளத்திற்கும் என்ன தொடர்பு?

 14. MytheesNo Gravatar says:

  வித்தியாசமாய் இருக்கு சார்

 15. சிறந்த ’எடிட்டிங்’ விருதுக்கு இக்குறும்படத்தை சிபாரிசு செய்கிறேன்.

  அடுத்தது நீங்கள் பெயிண்டரில் படம் வரைவது கு.ப ஆக வருமா?

 16. இதை உலகப்பட வரிசையில் சேர்க்கலாமா?

  இந்த படத்திற்கு சுரேஷ் கண்ணன் விமர்சனம் எழுதுவாரா?

 17. எப்போதும் இந்த முறையும் பேயோன் தனித்த கலக்கல் ;))

 18. பேயோன்No Gravatar says:

  சித்ரன்: நொடிகளில் கோட்டோவியம் வரைவது வேறு, இது வேறு என்பதை படத்தை பார்த்தால் புரிந்துகொள்வீர்கள்.

  அதிஷா: அவர் என் ரகமானவர். தனக்கு பிடிக்காத தரமான திரைப்படங்களை ஒழித்துக்கட்டுவதற்காக அவற்றை பாராட்டி எழுதுகிறார். நானும் அவரைப் போலத்தான். எனக்கு பிடிக்காத நல்ல படங்களை ஒழிக்க அவற்றை பாராட்டி எழுதுவேன். என் படம் அவருக்கு பிடிக்கும். எழுத மாட்டார்.

  சென்ஷி: நன்றி.

 19. ஜெ.பாலாNo Gravatar says:

  அன்றாடம் பார்க்கும் நோடபேடில் ஒரு குறும்படம. வாழ்த்துக்கள்..

 20. கல்யாண்No Gravatar says:

  அருமை வாழ்த்துகள் பாராட்டுகள். கல்யாண்குமார் http://www.kalyanje.blogspot.com
  kalyangii@gmail.com

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar