விட்டில்காரி

in கவிதை

உன் ஒவ்வொரு வார்த்தையின்
ஒவ்வொரு எழுத்தும்
என் மனதினுள் மழைத்துளியாய்…!

உன் ஒவ்வொரு பார்வையின்
ஒவ்வொரு வீச்சும்
என் இதயத்தில் நிலவொளிக் கதிராய்…!

உனை மறக்க
வழியேது…?

காணும் பெண்களுள் குடிபுகுந்தாய்
மாற்றாள் சேலையில் மெல்லசைந்தாய்

காற்றில் கலந்து எனை அசைத்தாய்
மழையில் நுழைந்து எனை நனைத்தாய்

என்னை எரித்து எரித்து ஒளிரும் நீ
அட விட்டில்காரி…!

Tags: , , ,

14 Responses

 1. வணக்கம். நல்லா இருக்கு.

  ஆனா, பேயோன் டச் மிஸ்ஸிங்.

 2. நீ
  அட விட்டில்காரி’டி ன்னு படிச்சு பார்த்தேன் காதல் பொங்கி வழிவதை போல ஒரு ஃபீலிங்க் !

  ஏன் பாஸ் உங்களுக்கு காதல் மொழியில் ‘டி’போட்டு கூப்பிட புடிக்காதோ? #டவுட்டு

 3. paraNo Gravatar says:

  நாராசம்.

 4. பேயோன்No Gravatar says:

  விஜய்வீரப்பன் சுவாமிநாதன்: நன்றி. இந்த பேயோன் டச் விவகாரம் என்னை விடுவதாக இல்லை போலிருக்கிறதே.

  ஆயில்யன்: அது கவிதையின் வேறு உட்பிரிவு. இதில் எடுபடாது.

  பா.ரா: கசப்பும் ஒரு சுவைதான்.

 5. sarav NNo Gravatar says:

  //காற்றில் கலந்து எனை அசைத்தாய்
  மழையில் நுழைந்து எனை நனைத்தாய்

  இந்த வரிகளை விட என்ன வேணும் பேயோன் டச்க்கு Mr.விஜய்வீரப்பன் சுவாமிநாதன்

 6. Incredible MonkeyNo Gravatar says:

  விட்டில்காரி கவிதையின் ஒவ்வொரு வார்த்தையின்
  ஒவ்வொரு எழுத்தும் என் மனதினுள் மழைத்துளியாய்…!
  சிலிர்க்க வைக்கிறது.

 7. பேயோன்No Gravatar says:

  sarav N: நன்றி. மார்க்குவேஸ்வரா, “சூப்பர் தல”யை நான் பார்த்துக்கொள்கிறேன், “பேயோன் டச்”சிலிருந்து என்னை காப்பாற்று.

  Incredible Monkey: நன்றி. நம்பிக்கை வாழ்க்கைக்கு அவசியம்.

 8. sarav NNo Gravatar says:

  //மார்க்குவேஸ்வரா, “சூப்பர் தல”யை நான் பார்த்துக்கொள்கிறேன், “பேயோன் டச்”சிலிருந்து என்னை காப்பாற்று.

  great Touch

 9. இது பேயோன் சார் எழுதின கவிதை மாதிரி இல்லை..

  அவர் நண்பர் லார்டு லபக்குதாஸ் எழுதினது மாதிரி இருக்கு #குழப்பம்

  அன்புடன்,
  சுவாசிகா
  http://ksaw.me

 10. @ பேயோன்:
  “பேயோன் டச்” வார்த்தை பிரயோகம் உங்கள் எழுத்து மேல் உள்ள எதிர்பார்ப்பினால் வந்தது. இந்த டச் என்பது உங்களை விடும் என்று எனக்கு தோன்றவில்லை. எதிர்பார்ப்பு ஏறிக் கொண்டு தான் போகிறது.

  @ Sarav:
  இதெல்லாம் அவர் எழுதுகிற மாதிரி இல்லை. அவருக்கு இதெல்லாம் சாதாரணம். மிகவும் வழமையான வரிகள் சார்.

 11. வீட்டுக்காரியைப் பற்றி இப்படி ஒரு கவிதை எழுத யாருக்கு தைரியம் வரும்?

  ”சூப்பர் தல”

 12. //காணும் பெண்களுள் குடிபுகுந்தாய்
  மாற்றாள் சேலையில் மெல்லசைந்தாய்//

  உங்களுக்கும் இதே உணர்வுதானா? ;)

  காதலில் விழுந்த எனக்கும் எனைப் போன்ற சிலர்க்குமே இது போன்ற கவிகள் தோன்றிக் கொண்டிருந்த காலம் கடந்து சீரிய சிந்தனையாளரான உமக்குமா?

  *காதல் யாரையும் விட்டுவைத்த பாடில்லை.*

  உரிய உரிமையுடன்,

  ஞெலிநரி வெய்யோன்

  http://FirefoxSurya.blogspot.com

 13. மத்தவங்களுக்கெல்லாம் தெரிஞ்சிருக்கும் போல, யாரும் கேக்கலை.
  எனக்கு புரியல, கேக்குறேன்.
  விட்டில்காரி என்றால் என்ன குருவே.

 14. ChandruNo Gravatar says:

  கடைசி வரி ‘அடி விட்டில்காரி…!’ என்று முடிந்திருந்தால் இன்னும் விசேஷமாக இருந்திருக்கும்

  ஒவ்வொரு மூன்று வரிக்கும் கடைசி வார்த்தைக்கு சோத்துக் கை பக்கம் ‘…!’ சேர்த்திருப்பது கவித்துவ ‘effect ‘ஐ கூட்டுகிறது

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar