காஃப்கா கதைகள்

in புனைவு

சிரித்துவிடுங்கள்

காலை நேரம் கன்னிமரா நூலகம் கூட்டமின்றிக் கிடந்தது. நான் புத்தகங்களிடையே கைவீசி அலைந்துகொண்டிருந்தேன். புனைவுகள் பிரிவிலிருந்து ஒரு வாசகர் வெளிப்பட்டார். புன்னகைத்துக்கொண்டிருந்தவர் என்னைப் பார்த்ததும் உறைந்துபோனார். “உங்கள் சிறுகதையான ‘பட்டாம்பூச்சி பொடிமாஸ்’ ஒரு பழைய இத்தாலிய நாடகத்தின் அப்பட்டமான நகல்” என்றார். “நான் எழுதியது காப்பியா?” என்றேன். “ஆமாம், இப்போதுதான் கண்டுபிடித்தேன்” என்றார். “சிரித்துவிடுங்கள்! சீக்கிரம், சீக்கிரம்!” என்றேன் நான், உடனே சிரிக்காவிட்டால் நகைச்சுவை மறைந்துவிடப்போவது போல.

இங்கிருந்து வெளியே

நெருங்கிய உறவினரிடம் நான் கூறினேன், “மனைவியே, எனக்காவது நீ இருக்கிறாய். உனக்கு யார் இருக்கிறார்கள், பாவம்?” நெருங்கிய உறவினர் ஆயுதம் தேட வெளியேறத் தொடங்கினேன். “எங்கே போகிறாய்?” கேட்டார் உறவினர். நான் சொன்னேன், “இங்கிருந்து வெளியே – அதுதான் என் இலக்கு.”

Tags: , , ,

6 Responses

 1. Incredible MonkeyNo Gravatar says:

  சிந்தனையையும் நகைச்சுவையையும் சேர்த்து தரமுடியும் என்பதை இப்போது நம்புகிறேன்.

 2. நல்லாருக்கு. காஃப்கா ஒன்றிரெண்டு படிச்சிருக்கேன். உங்க கதைகள் படிச்சதும் வேறு ஒரு அனுபவம் தெரிகிறது.

 3. வழக்கம் போல் புரிந்துக்கொள்ள முயற்சிக்கிறேன்.

 4. வழக்கம் போல் புரிந்துக்கொள்ளாமல் இருக்க முயற்சிக்கிறேன் ;)

  அன்புடன்,
  சுவாசிகா
  http://ksaw.me

 5. பேயோன்No Gravatar says:

  Incredible Monkey: சிந்திக்க இதில் எதுவும் இல்லை என்றாலும் நன்றி.

  ஸ்ரீதர் நாராயணன்: நன்றி.

  சரவண வடிவேல்: காஃப்காவின் கதைகளைப் படிக்கவும்.

  சுவாசிகா: முயற்சி எதற்கு? உங்களுக்குத்தான் அது இயல்பாகவே வருகிறதே.

 6. குருவே,

  பதிவைவிட நீங்கள் சுவாமிநாதனுக்கு சொன்ன பதில், ஆஹா. அபாரம். சூப்பர் பேயோன் டச்.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar