புகைப்படங்களில்

in கவிதை

திரும்பிப் பார்த்தபடி சிரிக்கிறார்கள்
கையில் முகம் ஊன்றிச் சிரிக்கிறார்கள்
மேலே பார்த்துச் சிரிக்கிறார்கள்
தலை குனிந்தபடி சிரிக்கிறார்கள்

காமிராவைப் பார்த்துச் சிரிக்கிறார்கள்
கும்பலில் சிரிக்கிறார்கள்
கண்ணை மூடிச் சிரிக்கிறார்கள்

எவ்வளவு நல்லவர்கள்
எவ்வளவு புத்திசாலிகள்

Tags:

8 Responses

 1. மானஸ்தன்No Gravatar says:

  இந்தக் கவிதைக்குப் பக்கத்தில் வலது பக்கத்தில் இருக்கும் போட்டோவில் இருப்பவர் மட்டும் என்ன விதிவிலக்கா?:>

 2. Incredible MonkeyNo Gravatar says:

  நானும் புகைப்படம் என்றால் இப்படி எல்லாம் சிரிப்பேன்.

 3. பேயோன்No Gravatar says:

  மானஸ்தன், IM: முக்கியமான கருத்து.

 4. நல்ல வேளை மரத்தில் சாஞ்சபடி நின்னு சிரிப்பவர்கள் உங்க நினைப்புல வர்ல :)

  இதில் கண்ணை மூடி சிரிச்சது கவிதையிலிருந்து மட்டுமல்ல காமிராவிலுருந்தும் கழட்டி விடணும் என்ன சொல்றீங்க பாஸ்? :)

 5. பேயோன் சார்,
  எப்படி இந்த தடவ எனக்கு(ம்) புரியற மாதிரி எழுதினீங்கன்னு எனக்கு புரியவேயில்லை :)

  அன்புடன்,
  சுவாசிகா
  http://ksaw.me

 6. அதிஷாNo Gravatar says:

  எவ்வளவுதான் நாம காமராவை பார்த்து சிரித்தாலும் காமரா நம்மைப்பார்த்து சிரிப்பதேயில்லை!

 7. பேயோனின் தத்துவத்தை விட உங்களது தத்துவம் அருமையாக உள்ளது அதிஷா அண்ணா.

  • பேயோன்No Gravatar says:

   தம்பி, அது தத்துவம் அல்ல, கவிதை. இரண்டும் வெவ்வேறு.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar