ஆறு காதல் கவிதைகள்

in கவிதை

உனைப் பிரிந்தும்
இருப்பேன் உன்
காதலைப் பிரிந்திரேன்

* * *

என் எடைக்கு எடை
நீ கிடையேன்.

* * *

மழை பெய்கையில்
உன் ரம்மிய நினைவு.
மழை நின்றுவிட்டால்
யாரம்மா நீ?

* * *

உன் கையில் உறவினர் குழந்தை
உன் ஜாடையா என் ஜாடையா
எனக் கேட்டால் வெட்கத்தில் குழந்தையை
என் மேல் எறிந்துவிட்டு ஓடுகிறாய்

* * *

முத்தமிடாத காதலியை
மறப்பது எளிது

* * *

நினைத்த பொழுதில்
சட்டைப் பையிலிருந்தெடுத்து
சுவைக்கக்கூடியதாக
இருக்க வேண்டும் உன் முத்தம்

Tags: , , ,

16 Responses

 1. //நீ கிடையேன்//

  எனி டபுள் மீனிங்? ;)

 2. //No Comments //

  கவிதைகள் பற்றிய பதிவில் இப்படியான வரிகள் இருக்கப்பிடாது அப்படிங்கற ஒரே காரணத்துக்காக!

  ஆறு (கா)தல் கவிதைகள்ன்னு டைட்டிலிட்டிருந்தாலும் டக்கராக இருந்திருக்கும் :)

 3. பேயோன்No Gravatar says:

  லதாமகன்: ஒரு அர்த்தத்தையே உங்களால் புரிந்துகொள்ள முடியும் என தோன்றவில்லை. கும்மி வேறு, இலக்கியம் வேறு.

  ஆயில்யன்: நான் பிராக்கெட் விளையாட்டு விளையாடுவதில்லை.

 4. ஜாரி! ராங் நம்பர்! இது கும்மினு நினைச்சுட்டேன்! :(

 5. paraNo Gravatar says:

  அடக்கடவுளே. என்ன ஆச்சு உங்களுக்கு? பாவிஜய் நடிக்கப் போய்விட்டதால் அந்த இடத்தைப் பிடித்துவிடுகிற உத்தேசமா?

 6. ஆறுக் கவிதைகள் இன்னும் அழுத்தமாக இருந்திருக்குமே!

 7. Incredible MonkeyNo Gravatar says:

  கவித்துவமாக காதலைத் தோலுரிக்கும் கவிதைகளை முதல் முறையாக படிக்கிறேன்.

 8. அதிஷாNo Gravatar says:

  ஸில்வியா ப்ளாத்தின் கவிதைகளில் கிடைக்காத இலக்கிய பேரின்பம் உங்களுடைய நாலுகவிதைகளில் கிடைக்கிறது.

 9. //நினைத்த பொழுதில்
  சட்டைப் பையிலிருந்தெடுத்து
  சுவைக்கக்கூடியதாக
  இருக்க வேண்டும் உன் முத்தம்//

  :))

  சுவை…

 10. vidhooshNo Gravatar says:

  கவிதைகளும் கமெண்டுகளும் :D
  அதும்.. ஸில்வியா ப்ளாத்தை நினைவு கூறும் அளவுக்கு கவிதை வரிகள் இருக்கிறது என்பதை என்னும் போது அப்படியே கண் கலங்கி நிற்கிறேன். :D

 11. பேயோன்No Gravatar says:

  பாரா: தபூ சங்கரை அவமதிக்கிறீர்கள்.

  ராம்சுரேஷ்: பொருந்தா ஒற்று உத்தியை முன்னமேயே பயன்படுத்திவிட்டேன்.

  haranprasanna: மரம் வேறு, கார்பன்டையாக்சைடு வேறு சார்.

  அதிஷா: ஸில்வியா மொத்தம் ஆறு.

  சென்ஷி: நன்றி.

  விதூஷ்: உட்கார்ந்து கண் கலங்கிக்கொள்ளலாமே? நம்மை வருத்திக்கொண்டு அழக் கூடாது.

 12. ஏதேது நெகிழவைத்துவிடுவீர் போல இருக்கிறதே.

  இவற்றையெல்லாம் வேறொருவர் எழுதியிருந்தால் கிடைத்திருக்ககூடிய வாசக அனுபவமே வேறு.

  உங்களை வகைப்படுத்த விடாமல் முரண்டு பிடித்தால் எப்படி ?

 13. பேயோன்No Gravatar says:

  டகால்டி: எனது படைப்புகள் அனைத்தும் அடிப்படையில் ஒரே வகைதாம். காதல் கவிதைகளை ஒழிக்க ஒரே வழி அவற்றை நான் எழுதுவதே.

 14. என் எடைக்கு எடை ஒருத்தி கிடைத்தால் கட்டில் தாங்காது.

 15. Arun KumarNo Gravatar says:

  அருமை.
  உங்கள் கவிதைகளின் ரசிகனாகிவிட்டேன்.
  தயவு செய்து தொடர்ந்து இதுபோன்ற காதல் கவிதைகள் எழுதவும்.

 16. பேயோன்No Gravatar says:

  அருண் குமார்: காதல் இருக்கும் வரை எழுதிக்கொண்டுதான் இருப்பேன்.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar