பேயோன்

படித்ததில் பிடித்தவன்

$sஇல் பிழை

January 22nd, 2011

தொலைந்த கணங்களின்
அழியாச் சுவடுக-
பாதியில் நின்றன வார்த்தைகள்
தலையில் இருமுறை தட்டினான்
இரண்டு வார்த்தைகள் உதிர்ந்தன
இருக்கட்டும், பயன்படும் என்று
எடுத்துவைத்துவிட்டு மீண்டும்
தட்டினான் இருமுறை

தொலைந்த கணங்களின்
அழியாச் சுவடுக-
பாதியில் நின்றன வார்த்தைகள்
தலையில் இருமுறை தட்டினான்
இரண்டு வார்த்தைகள் உதிர்ந்தன
இருக்கட்டும், பயன்படும் என்று
எடுத்துவைத்துவிட்டு மீண்டும்
தட்டினான் இருமுறை
திருகாணி கழன்றிருக்குமா?
மென்கிருமித் தாக்குதலா?
அல்லது வன்தட்-
பிழையான உள்ளீட்டு முை

Comments

10 Comments

RSS
  • krpsenthilNo Gravatar says on: January 22, 2011 at 4:10 pm

     

    கணினியை அணைத்துவிட்டு மனதிற்குள் வார்த்தைகளை தேடிகொண்டிருக்கிறேன்..

  • விஜய்No Gravatar says on: January 22, 2011 at 9:44 pm

     

    தெய்வமே!!

  • Incredible MonkeyNo Gravatar says on: January 22, 2011 at 11:16 pm

     

    கணினி விதிவசத்தை கவிதையாக்கி கலக்கிவிட்டீர்கள்.

  • ஆயில்யன்No Gravatar says on: January 22, 2011 at 11:49 pm

     

    எனக்கு இந்த கவிதை பத்தியை படிச்சதும் 1னே 1ன்னுதான் தோணுச்சு !

    திரும்ப திரும்ப பேசுறீங்க நீங்க!

    பேசுறதெல்லாம் கவிதையாகுது தெய்வமே! பேசுறதெல்லாமே கவிதையாகுது!

    [வடிவேலு டோனில் யாரும் பேச முயற்சிக்கவேண்டாம் கமெண்ட் காமெடியாக பார்க்கப்பட்டு புனிதமான கமெண்ட் கேலிக்குள்ளாக்கப்படலாம்]

  • ஆயில்யன்No Gravatar says on: January 22, 2011 at 11:50 pm

     

    //
    $sஇல்//

    100த்துல 1

  • சுவாசிகாNo Gravatar says on: January 23, 2011 at 1:43 pm

     

    பேயோன் சார்..

    என்னதான் சொல்ல வரீங்க..எனக்கு சுத்தமா புரியல :(

    அன்புடன்,
    சுவாசிகா
    http://ksaw.me

  • பேயோன்No Gravatar says on: January 24, 2011 at 9:01 am

     

    சுவாசிகா: நீங்கள் தகவல் தொழில்நுட்ப துறையில் இருப்பது யாருக்கும் தெரியாதுதானே?

  • dagaltiNo Gravatar says on: February 2, 2011 at 6:27 pm

     

    //முை//

    பெண்ணியப் பிரதியாக பாவிக்கப்படும் சாத்தியக்கூறுகளை உள்ளடக்கிய நல்ல ĦÀ¡¨¾

  • athishaNo Gravatar says on: February 2, 2011 at 7:35 pm

     

    சாரெ நீங்க மட்டும் கேரளாவி.. இருந்தா கட் அவுட் வச்சி கொண்டாடிருப்பான்.. நிஜமாவே அசத்தலான கவித..

  • பேயோன்No Gravatar says on: February 3, 2011 at 11:23 pm

     

    டகால்டி: ஏதேது, இந்திரப்பிரதேசம் தூக்கலாக தென்படுகிறதே.

    அதிஷா: உங்கள் கருத்தில் இருக்கிற உண்மையை மதிக்கிறேன்.

பேயோன்

படித்ததில் பிடித்தவன்

பேயோன் is using WP-Gravatar