இரு கவிதைகள்

in கவிதை

மணி

காலை பத்தரை மணிக்கு
வரச் சொல்லியிருந்
தார்களென பத்து மணிக்கே
சென்றிருந்தேன்
தெரிந்திருக்கவில்லை
யெனக்கு அவர்கள் வரப்
பன்னிரு மணிகள்
ஆகுமென்று.

கணக்கு வாழ்க்கை

முன்பெல்லாம் மழை பெய்தால்
காணும் இடமெல்லாம் அழகழகாய்
நாய்க்குடைகள் முளைக்கும்
ஆலிஸ் போல் மருந்து குடித்துச் சிறிதாகி
அதன் அடியில் இளைப்பாற மாட்டோமா
என்று ஆசைப்பட்ட நாட்கள் உண்டு
இன்று மழை பெய்தால் ரெயின் கோட்டு
நனையுமே எனக் கவலைப்படச் செய்கிறது
அன்றாட லௌகீக லாபநஷ்டக் கணக்கு வாழ்க்கை.

Tags: ,

3 Responses

 1. dagaltiNo Gravatar says:

  முக்கிய மானக் கவிதைகள்.

  முதற்கவிதையில்..

  //யெனக்கு அவர்கள் //
  ‘யெனக் கவர்கள்’ என்றிருந்தால் மேலும் கவிந்திருக்கு மல்லவா?

  இரண்டாங் கவிதையில் மறுபடியும் மனநிலை அளவில் குழப்புகிறீர்கள். வேறொரு புனைப்பெயரில் எழுதியிருந்தால் என்னைப் போன்ற இளகிய மனதுக் காரர்கள் சிலாகித்திருக்கக் கூடிய அபாய சாத்தியங்கள் உள்ளடக்கியப் பிரதி.

  வந்ததுதான் வந்தேன் ஒரு பெயருதிர்த்துவிட்டுப் போகிறேன்: பாசு என்ற வங்காளக்கவி அக்காலத்திலேயே உங்களுக்கு எதிர்க்கவிதை பாடிவிட்டார்:

  அ க்கோல்ட் ரெய்ன் ஸ்டார்டிங்
  அண்ட் நோ ஹாட்
  ஸொ?

 2. Incredible MonkeyNo Gravatar says:

  உங்களை மீண்டும் மீண்டும் காத்திருப்பு கவிதைகள் எழுதவைப்பது யார்.

 3. பேயோன்No Gravatar says:

  dagalti: கவியாது. ஒரு கவிஞன் யெனக்கு என்பதன் ஈற்று பகுதியை தொடாமல் எழுதப் பழக வேண்டும். யெனக் கவர்கள் என்று எழுதினால் நீர்த்து போய்விடும். பிறகு அவன் அந்த கவிதையை மீண்டும் ஒருமுறை எழுத வேண்டி நேரும்.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar