கண்ணாடிப் பூக்கள்

in கவிதை

வாடா மலர்கள். ஆனால்
உடைபடு புஷ்பங்கள்

நிஜப் பூக்கள் போல் மென்மை வராது
உடைந்து காலைக் குத்தினாலோ
பூமாதேவிக்கு அநாவசிய ரத்ததானம்

கண்ணைக் கூசும் அழகு.
சூட முடியுமோ? முடியாது

1. மருந்துப் புட்டி
2. பெனாயில்
3. குக்கி ஜாடி
யுடன்
குழந்தைகளுக்கெட்டாத இடத்தில்
அலமாரியின் மேல் தட்டில்
வைத்துக் காப்பாற்ற வேண்டும்

கடையில் கையால் எடுத்துப் பார்க்கையில்
கீழே விழுந்தால் கடைக்காரனுக்கு
அழ வேண்டும் தண்டம்.

வேண்டாமெனக்கு
இந்தக் கண்ணாடிப் பூக்கள்
தினமும் காசு கொடுத்து வாங்கினாலும்
இயற்கைப் பூக்களை அன்றன்றைக்கு
தூக்கியாவது எறியலாம்.

Tags:

4 Responses

 1. dagaltiNo Gravatar says:

  முதல் வரியில் ஒரு இலக்கண விகாரம்: மலர்கள் பன்மை. வித்தகக் கவிஞர் போல அவற்றை ஒருமையில், அதுவும் ஏகவசனத்தில் விளித்திருப்பது கவிதையைத் துவக்கியிருப்பது மொழிக்கு பழையது.

  கெட்டாத, மெனக்கு என்று அசைகளை மிச்சம்பிடிப்பானேன்? போகும்போது கொண்டா போகப் போகிறோம்?

  கடைக்காரர் பற்றிய மூன்று அடிகள் தனிக்கவிதையாகவே மிளிர்கிறது. என்னைக் கேட்டால் அதைத் தனியாகவே பிரசுரிக்கலாம்.
  மீதமுள்ளதை சானட் வகையைச் சார்ந்துவிட்டுவிடலாம்.

  வழக்கம்போலவே அநாயாச வடிவநேர்த்தி. தத்துவ விசாரங்களை உள்ளடக்கிய அடக்கமான குறியீடுகள்.
  இலக்கியத்தில் உங்களுக்கு பிரகாசமான சமகாலம் இருக்கிறது.

 2. பேயோன்No Gravatar says:

  டகால்டி: நீங்கள் வேறு சார்! ‘உடைபடு புஷ்பங்கள்’ என்ற சொல்லாக்கத்தின் சப்த அழகில் மயங்கித்தான் மொத்தத்தையும் எழுதி்யதே!

 3. ஆயில்யன்No Gravatar says:

  //இலக்கியத்தில் உங்களுக்கு பிரகாசமான சமகாலம் இருக்கிறது.//

  இந்த சமகாலத்திலேயே, கவிதை கட்டுரைகளை உடனுக்குடன் படித்து சுவைத்திட, கிட்டிய வாய்ப்பும் எங்களை மனமுருகி மகிழச் செய்கிறது

 4. பார்த்தசாரதி ஜெயபாலன்No Gravatar says:

  உலகத்தின் தலைசிறந்த செவ்விலக்கியமாகக் கருதப்படும் மைக்ரோனேஷிய இலக்கியத்தில் கூட
  கண்ணாடிப் பூக்களைப் பற்றி யாரும் எழுதவில்லை என்று இதன் மூலம் தெரிய வருகிறது.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar