பதினைந்து காதல் கவிதைகள்

in கவிதை

1

நீ காதலிக்கும் ஆட்கள்
ஒரு தினுசாகவும்
உன்னைக் காதலிக்கும் ஆட்கள்
ஒரு தினுசாகவும்
தெரிகிறார்கள்.

2

ஆளில்லாத சிறு அறை
அங்கு நம்மைப் போல் இருவர்
என்னவெல்லாம் செய்யலாம்?
புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.

3

அழகாயிருக்கின்றன
புகைப்படத்தில் நிலைகுத்திய
உன்னிரு கண்கள்

4

ஓரக் கண்ணாலும் ஏறிட்டுப் பார்க்கும்
மாய வித்தையைக் கற்றது யாரிடம்?
அறிமுகப்படுத்திவை.

5

உன்னைப் பார்த்து
ஓடோடி வரும் கடல்
என்னையும் பார்த்துவிட்டு
வெறுத்துத் திரும்பிச் செல்கிறது
நப்பாசையில் மீண்டும் வந்து பார்க்கிறது
மீண்டும் ஏமாந்து செல்கிறது
இப்படியே ஒரு மணிநேரம்

6

வெளியூர்ப் பயண இரவிருட்டில்
பேருந்தின் ஆட்டத்தில்
அறிந்தும் அறியாமலும்
நானுனக்குக் கொடுத்த
முத்தங்கள் எத்தனை?
அதற்கே சரியாகப் போனது
டிக்கெட்டுக் காசு.

7

உன்னைப் பார்க்கும்போது
வரும் ஆச்சரியம்
உன் அப்பாவைப் பார்க்கும்போதும்
வருகிறது

8

உன் அப்பா ஒரு
சிற்பியாகவோ
ஓவியராகவோ
கவிஞராகவோ
இல்லை என்றால்
உன் அம்மா
எதையோ மறைக்கிறார்

9

பூக்களுக்கு நடுவில்
இன்னொரு பூவாய்
தலை நீட்டுகிறாய்
பயமாயிருக்கிறதெனக்கு
உன்னைக் கொய்துவிடுவேனோ என்று

10

நாம் மட்டுமா நல்ல ஜோடி?
நம் சம்பளங்களும்தான்

11

உன் உள்ளாடைகளைக்
காணோம் என்றாயே,
கிடைத்ததா?

12

உன்னிடம் வேறெதுவும்
பேசத் தேவையில்லையெனக்கு
உன் பெயரைச் சொல்லிக்
கொண்டிருந்தாலே போதும்
வெறுமனே

13

தெருவில் உன் பெயர் கொண்ட
கடைகள் இருந்தால்
உடனே போய் எதாவது
வாங்கிவிடுகிறேன்

14

கண் திறந்தாலும் மூடினாலும்
நீதான் தெரிகிறாய்
இமைகள் எதற்கு வெட்டியாய்?

15

ஏதோ கிறுக்கு ஓவியன் வரைந்த
இரு ஜோடி வானவில்களை
ஒட்டவைத்தது போல்
உன் கண்கள்

Tags: , , , ,

32 Responses

 1. writerparaNo Gravatar says:

  வேறு வழியில்லை. நான் 115 கவிதைகள் எழுதுவதென்று முடிவு செய்துவிட்டேன்.

 2. DeepuNo Gravatar says:

  அழகு….! :)

  • பேயோன்No Gravatar says:

   நன்றி. வடபழனி இந்திரா ஸ்டுடியோவில் எடுத்தது.

 3. NatarajanNo Gravatar says:

  5th s my fav! I ve seen many no of poems with sea and love!! But this is awesome :)

 4. காட்டுவாசிNo Gravatar says:

  7th… Super thaliva…

 5. HariNo Gravatar says:

  “நாம் மட்டுமா நல்ல ஜோடி?
  நம் சம்பளங்களும்தான்”

  LOL

 6. பேயோன்No Gravatar says:

  நடராஜன், காட்டுவாசி: முறையே நன்றி, நன்றி.

 7. Incredible MonkeyNo Gravatar says:

  – உங்கள் சாவியும், இதயப்பூட்டு உங்கள் பல்பை விட பிரசன்னமாக இருக்கின்றன்.

  – பதினைந்து வாழ்த்துகள்.

 8. karthiNo Gravatar says:

  :))))))))))))))))) ROFL… GuruG, you are rocking!!!

 9. writerparaNo Gravatar says:

  சரி உமக்காச்சு எனக்காச்சு. நாளை முதல் தினமும் சில காதல் கழுதைகள்.

  • பேயோன்No Gravatar says:

   முதலில் கவிதையை கவிதை என எழுதி பழகுங்கள் சார்.

 10. kdillibabuNo Gravatar says:

  Excellent-o-phobia….
  ippadiyum oru payonaa?

  • பேயோன்No Gravatar says:

   நன்றி. ஒரு திருத்தம்:- அது எக்சலன்டோபீடியா.

 11. kdillibabuNo Gravatar says:

  Atheetha Excellent’aana vishayathai paarthu yerpadum oruvitha “bayam” (phobia=fear)enbathal apadi koorinaen…

 12. மைதீஸ்No Gravatar says:

  கவிதைகளை இரவலாகவோ, இனாமாகவோ வாங்க முடிமா …..

 13. dagaltiNo Gravatar says:

  இக்கவிதைகளின் ஆழம் வரை வாசகர்கள் சென்றனுபவிக்கவேண்டும் என்பதற்காக கருதி நீட்டி முழக்குகிறேன்.

  புகைப்படங்களி லிருக்கும் நமது நிழலுருவுகளுடனான நமதுறவை வெகு சிறப்பாக எடுத்துக்காட்டும் இரண்டாங்கவிதை அருமை.

  அவ்வுருவுகள் நம்மை ஒத்த உருவங்கொண்டவை. அவை நாமல்ல. நமது கடந்தால கணங்களில் ஒன்றை உறைய வைக்கும் வீண் முயற்சி தான் புகைப்படம்.
  புகைப்படம் எடுக்கும்போது என்ன செய்து கொண்டிருக்கிறோம். வாழ்வதை சற்றுநேரம் நிறுத்திவிட்டு, புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கிறோம் அவ்வளவுதான்.
  ஆனால் காலங்கடந்தபின் அவற்றின்மேல் மீள்பார்வை செலுத்தும்போது கடந்தகால வாழ்க்கையே பார்க்கக்கிடைத்துவிட்டதாக நினைக்கிறோம்.
  அப்படி நம்மளை பிற்காலத்தில் ஏமாற்றுவதற்காக நாமே செய்யும் மோசடி இது.

  வாழ்வு சாத்தியங்கள் நிரம்பிவழியும் கணங்களில், அவற்றை கையிலெடுக்காமல், ‘ஆவணப்படுத்துதல் கலாசாரத்தால்’ வெகுவாக சீரழிந்துகொண்டிருக்கும் சமூகத்தை அழகியல் குன்றாமல் படம் பிடித்துள்ளார் கவிஞர்.

  ‘இங்கே நெக்குருகுக’ என்று அம்புக்குறி போடாத குறை தான்.

  • பேயோன்No Gravatar says:

   நான் எழுதிய பதினைந்து கவிதைகளுள் ஒரு கவிதையைத்தான் எழுதியதான ஒரு சித்திரத்தை உருவாக்க முயலுகிறீர்கள். இருந்தாலும் உங்கள் விளக்கம் அருமை! எனக்கே தெரியாமல் நானொரு சாட்டையடி கவிதையை எழுதியிருக்கிறேன்.

 14. வாய்ப்பே இல்லைங்க :-) திரும்ப திரும்ப படிக்கிறேன்! நானும் இது மாதிரி எழுதிப் பழகணும் :-)

  • பேயோன்No Gravatar says:

   ஒரு விளம்பர நிறுவனத்திடம் ரூ. 2000 பெற்றுக்கொண்டு “காதல் ஜமாய்” என்ற வாசகத்தை உருவாக்கிக்கொடுத்தேன். அதையே உங்களுக்கும் கூற விரும்புகிறேன்.

 15. ChandraNo Gravatar says:

  அருமை

 16. ஒவ்வொன்றும் பேய்த்தனமான காதல் நிரம்பிய கவிதைகள். ;-))

 17. GiriNo Gravatar says:

  உன்னைப் பார்க்கும்போது
  வரும் ஆச்சரியம்
  உன் அப்பாவைப் பார்க்கும்போதும்
  வருகிறது

  -PUNCH…..

 18. Sir (முதன்முறையாக ஆங்கிலத்தில் விளிக்கிறேன்)

  உங்களைப் பெற்றார்களா? இல்லை செய்தார்களா?

  இப்படியொரு இலக்கியவாதியை என் அனுபவத்தில் பார்த்ததில்லை. உங்களுக்கு வாழ்த்துகள் பல. :)

  ஒவ்வொரு கவிதையையும் ஓராயிரம் முறை வாசித்து இரசிக்கலாம் போலிருக்கிறது. அவ்வளவு பொருட்பொதிவு, கருத்தாழம், புனைவு.

  உங்களுக்கு நிகர் யாருமே இல்லை. உங்களைத் தூற்றுவாரையும் பிறர் ஏளனமாகப் பார்க்க வைக்கும் உங்கள் திறமையே திறமை ஐயா.

  (If my name in your spam list, please remove it sir.)


  உரிய உரிமையுடன்,
  வெய்யோன் (http://goo.gl/RoMyo)

  • பேயோன்No Gravatar says:

   என்னை முதல் முறையாக ஆங்கிலத்தில் விளித்தமைக்கு வாழ்த்துக்கள்.

 19. செந்தில் நாதன்No Gravatar says:

  நான் லவ் பண்றதையே வுட்டுடலாம்னு நினைச்சுக்கிட்டிருந்தேன். அதுக்கு ஒரே வழி உங்க கவிதைகள் பிரின்ட் எடுத்து அவ கிட்டக் கொடுத்திடறதுதான்.

 20. karNo Gravatar says:

  பேயோன் ஜி,

  உங்கள் கவிதையை என் காதலியிடம் காட்டினேன், என்னை விட்டு பிரிந்துவிட்டாள். இப்ப நான் என்ன செய்வது?

  • பேயோன்No Gravatar says:

   பிறரை அழவைத்து சேர்த்த சொத்து நிலைக்காது என்று கேள்விப்பட்டதில்லையா?

 21. நித்திலன்No Gravatar says:

  2வதும் 8ட்டாவதும் என்னால் அதிகமாக ரஸிக்கபட்டது

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar