ஒரு சின்ன பிரச்சினை

in கட்டுரை

ஒரு சின்ன பிரச்சினை (வெளியே சொல்ல முடியாது (விவகாரமாகிவிடும் (சொல்லப்போனால் அடிதடியே ஆகிவிடும் (ஆள் பலம் இருந்தால் பயப்பட மாட்டேன்; இல்லாததுதான் கவலை (கல்லூரியில் கூடப்படித்த நண்பர்கள் சிலர் போலீசில் இருக்கிறார்கள்; இருந்தாலும் சில்லறை விவகாரங்களில் (அவர்கள் பார்வையில்) உதவுவார்களா என்று தெரியாது (நண்பர்களுக்கு உதவுவது ஒரு கடமை என்றாலும் நம் அன்றாடப் பிழைப்புக்கு பங்கம் வராமலும் பார்த்துக்கொள்ள வேண்டும் (அவர்களுக்கும் குடும்பம் குட்டி இருக்காதா? (மானசீக ஒண்டிக்கட்டையான எனக்கே மனைவியும் மகனும் இருக்கிறார்கள் (தற்போது இங்கே இல்லை; ஊருக்குப் போயிருக்கிறார்கள் (திரும்பி வர ஒரு வாரம் ஆகும் (அதற்குள் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் (இல்லையென்றால் பிரச்சினையே திரும்பி வந்தது போல் ஆகிவிடும், ஹஹ்ஹஹ்ஹா! (சுய இடுக்கண் வருங்காலும் நகலாம் (வள்ளுவரின் நோக்கமே அதுதான் (“நீங்கள் ஏன் எப்போதும் மனதைப் பிழிகிற பிரச்சினைகளைப் பற்றியே எழுதுகிறீர்கள்?” என்று அமெரிக்க நாடகவாதி எட்வர்டு ஆல்பியிடம் ஒருமுறை கேட்கப்பட்டபோது, “வேறென்ன எழுத வேண்டும் என்கிறீர்கள்? மகிழ்ச்சியான பிரச்சினைகளைப் பற்றியா?” என்று அவர் கேட்டாராம் (அவரின் நாடகங்களில் ‘ஹூ இஸ் அஃப்ரைடு ஆப் வர்ஜினியா வுல்ப்?’, ‘ஜூ ஸ்டோரி’, ‘தி பர்த்டே பார்ட்டி’ ஆகிய மூன்றை மட்டும் படித்திருக்கிறேன் (இதில் ‘ஹூ இஸ்’ மட்டும் ஹெரால்டு பின்டருடையதோ என்று சந்தேகம் (அல்லது பிரெண்டன் பெஹனுடையதா என்றும் (ஆனால் இணையத்தில் எழுதும்போது படிப்பவர்களுக்கு இந்தப் பெயர்களில் சிலதேகூட யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை என்பதால் பிழை சுட்டிக்காட்டப்படுவது பற்றிக் கவலைப்படத் தேவையில்லை (நான் எழுதுவது இணையத்தில் என்பது எப்படியோ இங்கே நிறுவப்பட்டுவிட்டது (இணையத்தில் எழுதுவது ஒன்றும் கேவலமில்லை; ‘பிரவுன் இஸ் த நியூ பிளாக்’ என்கிற ரீதியில் சொல்லப்படுவது போல இணையம்தான் புதிய அச்சு; அச்சில் வந்த புத்தகங்களில் மட்டும் நல்லவை எவ்வளவு தேறுமாம்? (இப்படி ஒப்பிட்டால் அச்சின் கை கொஞ்சம் தூக்கலாகத் தெரிவது இயற்கை; ஏனென்றால் இணையம் ஒரு புதிய ஊடகம்; ஆனால் (“)தரமான(“) எழுத்து நேரடியாக பிடிஎஃப்-பில் எழுதப்படும் காலம் நம் அருகிலேயே இருக்கிறது (இருந்தாலும் இங்கே யாருக்கும் நிறுத்தக்குறிகளைப் பயன்படுத்தத் தெரியவில்லை; தொப்பி கீழே விழுந்தால் ஆச்சரியக்குறி போட்டுவிடுகிறார்கள் (அவர்களுக்குத் தெரிந்த ஒரே நிறுத்தக்குறி அவர்கள் “ஸ்மைலி”யில் பயன்படுத்தும் கோலன் என்கிற இந்த ஒன்றுதான்: :)))))))))))))))))))))))).

Tags: , , ,

29 Responses

 1. நல்ல சிந்தனை!
  நல்ல format!
  no of ( = no of ). எண்ணியே பார்த்துட்டேன்!

 2. SrikanthNo Gravatar says:

  அடுத்த கட்டுரையை தர்க்க ரீதியான மொழியில் எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

 3. இது என்னது ?

  • பேயோன்No Gravatar says:

   நீங்கள்தான் போன் செய்தீர்கள். நீங்கள்தான் உங்கள் பெயரை சொல்லி உங்களுக்கு யார் வேண்டும் என சொல்ல வேண்டும்.

 4. அதிஷாNo Gravatar says:

  ஸ்ஸ்ஸ்ப்பா..

 5. இந்தக் கட்டுரையை (தானே) நான் பாராட்டுவது சாலப்பொருந்தும்.

  கற்றாரை கற்றாரே காமுறுவர்.

 6. andalmaganNo Gravatar says:

  ரசிக்கிறேன் சிறைபட்ட என் சிந்தனையை சிறகடித்து சிந்திக்கவைத்துவிட்டீர்கள்..

 7. மேலே போட்ட பின்னூட்டத்தில் அடைப்புக்குறிகளுக்குள் இருக்கும் தானேவுக்குப் பிறகு ஒரு கேள்விக்குறி இருப்பதாய் கற்பனை செய்து கொள்ளவும். விடுபட்டுவிட்டது.

  கட்டுரைதானே என்கிற தொனியில் எழுதப்பட்டது அந்த ’தானே’..

  ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்…….

 8. dagaltiNo Gravatar says:

  இது எழுத்தாளர்களெல்லாம் பிராக்கெட் போடும் சீஸன் போல இருக்கிறது.

  ஒரே மூச்சில் விவாதத்தின் நூலை தவறவிடாமல் படிக்க முடிந்த என்னை நினைத்தால் எனக்குப் பெருமையாக இருக்கிறது.

  இலக்கியத்தில் எல்லாமே open and shut case என்றாலும் ஒரு திறப்பு தொக்கி நிற்பது தான் எழுத்தின் அழகு என்றும் இவ்விடுகை உணர்த்துவதாக சொல்லத் தோன்றாமலில்லை.

  ‘ஹூ இஸ்’ சார்ந்த நகை மட்டும் புரியவில்லை. நண்பர் மிசுலெகுசிகுவைக் கேட்டுக்கொள்கிறேன்.

  • பேயோன்No Gravatar says:

   ஏதாவதொன்று தொக்கி நிற்காவிட்டால் படைப்பு செல்லாக்காசாகிவிடும்.

 9. Incredible MonkeyNo Gravatar says:

  உங்கள் கட்டுரையில் லாஜிக் இல்லை. ஓப்பனிங் பிராக்கெட் எண்ணிக்கையும், குளோசிங் பிராக்கெட் எண்ணிக்கையும் தவறாக இருக்கிறது.

 10. குரு: இப்படி ஒரு கண அறிவிப்பில் ப்ரா) (கெட்டுப் போட்டுக் கலக்குவார்ன்னு; எதிர்பார்க்கலை!!!!

  • பேயோன்No Gravatar says:

   உங்கள் பின்னூட்டம் இந்த வலைதளத்தில் 1050வது பின்னூட்டம். பெருமையாக இருக்கிறதா?

   • ஐயா, தாங்கள் என் பின்னூட்டத்தை(யும்) பிரசுரிப்பதே பெருமையாக இருக்கிறது.

 11. kggouthamanNo Gravatar says:

  ஓ! அடைப்புக் குறிகள் வைத்துக் கொண்டு இப்படி கூட சொல் விளையாடலாமா!
  ()->—-< (நன்றி மானஸ்தன்)

 12. YetanothervenkatNo Gravatar says:

  I am a bit disappointed that you took the easy way out by closing all the brackets at the same place. It would have been more challenging (படிக்கவும்தான்) if you had progressively closed them.

  • பேயோன்No Gravatar says:

   நான் திட்டமிட்டபடி எழுதி முடித்துவிட்டேன். அதற்கு மேல் எனக்கு வேறென்ன வேண்டும்? அவரவர் விரும்பியதை அவரவர் எழுதிக்கொள்ள வேண்டியதுதான்.

  • Venkat: Did you consider that the satire would have been lost if குரு பேயோன் had progressively closed the brackets?

 13. இதுபோலெல்லாம் (யாருக்கும் புரியாத மாதிரி(புரியாத என்றால் புரியாதது மட்டுமே அல்ல (அதற்காக புரிந்தது என்றும் சொல்லிவிட முடியாது(இப்படி நான் சொல்வதால் எல்லோருக்கும் புரிந்தது என்றும் நீங்கள் கொள்ள வேண்டாம்(இதைக் கொல்ல என நீங்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பது நலம் (இங்கே கடைசியில் சொன்ன கொள்ள கொல்ல எனப் புரிந்து கொள்ளப்பட்டாலும் சரியே என சொல்லிக் கொண்டு போட்டுக் கொள்கிறேன் ஒரு :)))))

  • பேயோன்No Gravatar says:

   காப்பியை ஒழுங்காக அடிக்க வேண்டும்.

   • இன்னமும் தமிழ் கூறும் நல்லுலகில் என்னை மட்டும்தான் யாரும் பேயோன் என சந்தேகிக்கவில்லை. நான் அப்படி சரிவர எழுதி, சந்தேகவலை என் மீதும் விழும் அபாயம் தவிர்க்கவே அவ்வாறு தப்புந்தவறுமாய் எழுதினேன்.

    (என்ன ஒரு சமாளிப்பு…)

 14. jaganNo Gravatar says:

  அட! இது என்ன இன்செப்ஷன் கட்டுரையா? முதல்ல ஒரு ப்ரா., அதுக்குள்ள இன்னொரு ப்ரா., அந்த ப்ரா.க்குள்ள – வேறொண்ணுமில்லை – கதைதான்…
  ப்ரா.கதை அபாரம்.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar