சிறார் கலை

in ஓவியம், கவிதை

தண்ணீர்ப் பாம்பு தலையை
வெளியில் நீட்டித் தேடுவது போல்
கடைவாயிலிருந்து நாக்கு வெளிப்பட
வரைகிறான் படத்தைக் குழந்தை.

சிரிக்கும் சூரியன்
சிரிக்கும் ரயில்
சிரிக்கும் நண்டு

எல்லாம் சிரித்தாக வேண்டும்
குழந்தைகளுக்கு.

Tags: , , ,

8 Responses

 1. Incredible MonkeyNo Gravatar says:

  சிறார் கலையும் அதன் சிரிப்பும் அதி அச்சமூட்டுவதாக இருக்கிறது.

 2. sankarNo Gravatar says:

  பின் நவீனத்துவ கோட்டோவியமா ? இது ..,

  • பேயோன்No Gravatar says:

   “பின் நவீனத்துவம்” என்றால் என்ன என்று தெரிந்தால்தானே இந்தக் கேள்விக்கு நான் பதிலளிக்க முடியும்.

   • sankarNo Gravatar says:

    ////“பின் நவீனத்துவம்” என்றால் என்ன என்று தெரிந்தால்தானே இந்தக் கேள்விக்கு நான் பதிலளிக்க முடியும்.///

    குருவே ,

    பைய அப்பீட்டு ஆகிக்குரேன் :))))

 3. அதிஷாNo Gravatar says:

  நீங்க போன ஜென்மெத்துல பெரிய குழந்தையா இருந்திருப்பீங்க போலருக்கே

  • பேயோன்No Gravatar says:

   அது பற்றி தனி பத்தியே எழுதலாம்.

 4. dagaltiNo Gravatar says:

  கபாலம் பல்புருவம் பூண்டு இருக்கிறது
  பல்போ இருபுருவம் தரித்து இருக்கிறது
  பலே!

  எலும்புமுறிவு மட்டுமே அறிந்த தமிழோவிய சுவைஞர்களை
  எலும்புமுறுவல் என்ற அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியிருக்கிறீர்கள்

  • பேயோன்No Gravatar says:

   இது படக்கவிதை என்கிற புதிய ஜென்ரி சார்.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar