சிறார் கலை July 10th, 2011 தண்ணீர்ப் பாம்பு தலையை வெளியில் நீட்டித் தேடுவது போல் கடைவாயிலிருந்து நாக்கு வெளிப்பட வரைகிறான் படத்தைக் குழந்தை. சிரிக்கும் சூரியன் சிரிக்கும் ரயில் சிரிக்கும் நண்டு எல்லாம் சிரித்தாக வேண்டும் குழந்தைகளுக்கு.
சிறார் கலையும் அதன் சிரிப்பும் அதி அச்சமூட்டுவதாக இருக்கிறது.
பின் நவீனத்துவ கோட்டோவியமா ? இது ..,
பேயோன்
Reply:
July 12th, 2011 at 2:42 pm
“பின் நவீனத்துவம்” என்றால் என்ன என்று தெரிந்தால்தானே இந்தக் கேள்விக்கு நான் பதிலளிக்க முடியும்.
sankar
Reply:
July 12th, 2011 at 6:28 pm
////“பின் நவீனத்துவம்” என்றால் என்ன என்று தெரிந்தால்தானே இந்தக் கேள்விக்கு நான் பதிலளிக்க முடியும்.///
குருவே ,
பைய அப்பீட்டு ஆகிக்குரேன் :))))
நீங்க போன ஜென்மெத்துல பெரிய குழந்தையா இருந்திருப்பீங்க போலருக்கே
பேயோன்
Reply:
July 14th, 2011 at 10:24 pm
அது பற்றி தனி பத்தியே எழுதலாம்.
கபாலம் பல்புருவம் பூண்டு இருக்கிறது
பல்போ இருபுருவம் தரித்து இருக்கிறது
பலே!
எலும்புமுறிவு மட்டுமே அறிந்த தமிழோவிய சுவைஞர்களை
எலும்புமுறுவல் என்ற அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியிருக்கிறீர்கள்
பேயோன்
Reply:
July 15th, 2011 at 5:22 pm
இது படக்கவிதை என்கிற புதிய ஜென்ரி சார்.