வாய்க் குழந்தை

in கவிதை

டம்ளரில் மீதமிருக்கும்
ஒரு சொட்டு பாலைக் குடிக்க
பெரிதாகத் திறக்கிறான்
வாயைக் குட்டிப் பையன்
அவன் ஸ்கூல் பேகையே
உள்ளே போடலாம் போல.

Tags: , ,

7 Responses

 1. Incredible MonkeyNo Gravatar says:

  நகைச்சுவை,கிண்டல்,அழகுணர்ச்சி,தத்துவம்,கவித்துவம் என எல்லாமே இருக்கிறதே இந்த கவிதையில்.

  • பேயோன்No Gravatar says:

   உங்கள் பின்னூட்டத்தில் ஒரு புகார் தொனி இருக்கிறது.

   • Incredible MonkeyNo Gravatar says:

    அப்படி இருந்தால் பொருத்தருள்க.

 2. கவிதையைவிட உங்களின் ஒரு ஓவியத்திற்கே இந்த தலைப்பு பொருந்தும் என்பது போலத் தோன்றுகிறது.

  • பேயோன்No Gravatar says:

   புரிகிறாற்போல் தெரியவில்லையே.

 3. karNo Gravatar says:

  தமிழ் கவிதையில் ஆங்கில கலப்பை வன்மையாக கண்டிக்கிறேன்.

  இப்படிக்கு
  பேயோன் கொலைவெறி கழகம்
  அமீரகம்.

 4. அதிஷாNo Gravatar says:

  சமச்சீர் கல்வி குறித்த நல்ல கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி. நல்ல கருத்து நன்றி பேயோன்

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar