காதல் கவிதை

in கவிதை

என்னங்க
என்னங்க
என அழைத்துக்கொண்டே
யிருக்கிறாய் விஷயத்தைச்
சொல்லாமல்.

Tags: , , ,

15 Responses

 1. kenNo Gravatar says:

  அருமை குருவே :)

 2. காதல் ரசம் கொட்டுகிறது…. :-)

 3. Incredible MonkeyNo Gravatar says:

  என்னங்க என்னங்க என்று போட்டு விட்டு காதல் கவிதை என்று சொன்னால் எப்படி சார்.

 4. அவர், “என்னங்க என்ன இங்க” என்று கேட்டிருக்கிறார். நீங்கள் அதை ங்கங்க என ரொமேன்ஸாக நினைத்து விட்டீர் போலும். இதையே தொடர வேண்டாம், உங்கள் மாரசிகன் என்ற முறையில் எச்சரிக்கிறேன்…. மன்னிக்கவும், கேட்டுக்கொள்கிறேன். தலை தலை தப்பணும்.

  • பேயோன்No Gravatar says:

   எழுதும்போதுதான் எழுத்துப் பிழை வரும். படிப்பதிலுமா? மார்க்குவேஸ்வரா!

 5. பர்வையாலயே ஆயிரம் அர்த்தம் சொல்லவும்
  பேசாமல் நம்மை புரிந்துக் கொள்ள வைக்கும் திறமை

  பெண்மைக்கே உரிய திறமை

 6. writerparaNo Gravatar says:

  இன்னும் அழைப்பு எல்லைக்கு அப்பால் செல்லாமலிருக்கிறீர் என்பதுதான் விஷயம்.

  • பேயோன்No Gravatar says:

   சார், நான் எழுதியது கவிதை. சுயசரிதை அல்ல.

 7. யதுபாலாNo Gravatar says:

  இது தான் நடைமுறை கவிதையோ….? அனுபவந்தான் கவிதையோ….!! யதார்த்தம்..யதார்த்தம்….!!! (-_-)……

 8. விஷயத்தைச் சொல்லாமல் இழுக்கிற வித்தையை எழுத்தாளர்கள்தானே செய்வார்கள்? அவரும் எழுத்தாளரா?

 9. அதிஷாNo Gravatar says:

  முதல்வரிக்கும் இரண்டாவது வரிக்குமான இடைவெளியை ஆர்தரே உருவாக்கியிருப்பாரா அல்லது கவிதையே உண்டாக்கியிருக்குமாவென வியக்கிறேன்.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar