கவிஞர் வள்ளுவர்

in கட்டுரை

அந்தக் காலத்தில் வள்ளுவருக்கும் பெண் ரசிகைகள் இருந்திருப்பார்கள். ஏனென்றால் பிற்காலச் சோழர்கள்தான் அவருக்கு தாடி மீசை வைத்துத் தாகூர்மயமாக்கி அசிங்கப்படுத்தியிருப்பதாக ஆய்வாளர்கள் அபிப்பிராயப்படுகிறார்கள்1. எனக்கு என்னை எப்படி தாடி மீசையுடன் கற்பனை செய்து பார்க்க முடியாதோ அதே போல வள்ளுவரை தாடி மீசை இல்லாமல் கற்பனை செய்து பார்க்க முடியாது. ஆனால் நிச்சயமற்ற வரலாற்று உண்மைகளில் ஒன்று மட்டும் நிச்சயம். அவர் எழுத்தாணியால் எழுதிய காரணத்தாலேயே அவரிடம் எந்த ரசிகையும் மார்பில் ஆட்டோகிராப் போடும்படி கேட்டிருக்க முடியாது. மற்றொன்று, “தொட்டணைத்தூறும் மனக்கேணி ஆங்கே இடுக்கண் கலைவதாம் கற்பு” என்றெல்லாம் எழுதினால் எந்தப் பெண்ணுக்குப் புரிந்திருக்கும்? பெண்களுக்குப் பொதுவாக காதல், பாசம், தனிமை, குழந்தை, நதி, வனம் எல்லாம் எழுதினால்தான் பிடிக்கும். இவரோ புள்ளி கூட வைக்காமல் 2660 வரிகள் எழுதியிருக்கிறார். திருக்குறளுக்கு இருக்கிற உரை எதுவுமே வள்ளுவர் காலத்தில் எழுதப்பட்டதல்ல. ஏனப்படி என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.

Tags: , ,

12 Responses

 1. AkshayNo Gravatar says:

  தங்களின் இந்த கட்டுரை மிகவும் அழகாக இருந்தது, எனினும் தாங்கள் கூறுவது போல் பெண்களின் சிந்தனைகளை குறுக்கி சொல்வது எனக்கு சரியாக படவில்லை . வள்ளுவனின் குரலை தமிழ் சங்கம் ஏற்க வைத்து அவ்வை பாட்டி மற்றும் சுந்தர கடவுளானா சொக்கனதாரும் தானே . ஆனால் தங்கள் கட்டுரை மூலம் புதிதாக வள்ளுவனின் தோற்றத்தின் காரணம் மற்றும் அதன் கதையை/வரலாற்றை தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. அக்ஷய்

  • பேயோன்No Gravatar says:

   பெண்களின் சிந்தனைப் போக்கிற்கான நிரூபணம் அவர்களது சமகால கவிதை உற்பத்தியிலும் நுகர்விலுமே வியாபகம் பெற்றிருக்கிறது. சில வரலாற்று உண்மைகளை போகிற போக்கில் தொட்டுச் சென்றிருக்கிறேன். இவை பேராசிரியர் வகையறாக்களால் விரிவாக எழுதப்பட வேண்டியவை.

 2. அதிஷாNo Gravatar says:

  அருமையான கட்டுரை போல இருக்கிறது.

  • பேயோன்No Gravatar says:

   போல இருக்காதா பின்னே? குறள் சிறுசாக இருப்பது போலவே கட்டுரையும் இருக்க வேண்டும் என்று நினைத்து எழுதிய மெத்தட் ரைட்டிங் முயற்சி இது.

 3. யதுபாலாNo Gravatar says:

  வாசுகி எப்படி அவரை மணந்தாரோ….!? பொதுவாக புத்திசாலிகளை பெண்கள் அவ்வளவாக விரும்புவதில்லை..! என்பது எனது தாழ்மையான அபிப்ராயம்..?

 4. “வள்ளுவரே ஒரு பெண்ணாக இருந்திருக்கக்கூடும்.” என வராலாற்று ஆய்வில் ஒரு குழப்பம் ஏற்கனவே இருக்கிறதே?!

  • பேயோன்No Gravatar says:

   அப்படி எதுவும் இல்லை. நீங்கள்தான் பின்னூட்டத்திற்காக ஏதோ தட்டச்சு செய்கிறீர்கள். வள்ளுவர் பெண் அல்ல, அவர் மனைவிதான் பெண்.

   • யதுபாலாNo Gravatar says:

    ஐய…என் கருத்துக்கு எதுவும் விமர்ச்சனம் இல்லையா..???

    • பேயோன்No Gravatar says:

     உங்கள் நிறுத்தக்குறி பயன்பாடு என்னை திக்குமுக்காட வைத்துவிட்டது.

 5. GanpatNo Gravatar says:

  எனக்கு ஒரு சிறிய சந்தேகம்!
  இது வாழும் வள்ளுவரைப்பற்றிய கட்டுரையா (அ) வாழ்ந்த வள்ளுவரைப்பற்றிய கட்டுரையா?

 6. GanpatNo Gravatar says:

  ம்ம்ம் சொல்ல மறந்துட்டேனே!
  இந்த வள்ளுவர் கோட்டோவியத்தை முடிந்தால் patent
  செய்து விடுங்கள்.நன்றாக உள்ளது.(ஒரு கேள்வி குறியும் மூக்கு கண்ணாடியும் சேர்ந்து “காந்தி” வரைவதைப்போல)

 7. கோட்டோவியம் அருமை. எதையும் மினிமலிஸ்ட்டிக் ஆக வரைகிற உங்கள் பாங்கும் அருமை.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar