உருப்பெருக்கம்

in கவிதை

குருவி இறகு ஒட்டிய புழுக்கையாய்
தொலைவில் யார் செவிக்கோ சரசரக்கும் தாவணியில்
வருவது நீதான் என மகிழ் தெளிந்தேன்
காத்திருப்பின் கிளையிற்குந்தி நான் கண்ணோக்கிப் பார்க்கையிலே
அருகில் வர வர அழகி நீ பெரிதாகிறாய்
அடியில் நீரோடா வாராவதி கால் தீண்ட
உன் இயல்புயரம் சேர்கிறாய், இன்னும் வருகிறாய், வருகிறாய் நெருங்கி
கண் ஜாடைத் தூரம் கிடைக்கையில் மேலும்
வளர்ந்து வளர்ந்து விசுவரூபமாகிறாய்
ஒரு எட்டில் என்னைத் தாண்டிச் சென்றுவிடுகிறாய்
உச்சாணிக் கொம்பைத் தாவணியால் உரசிக்கொண்டு.

Tags: , ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar