ஒன்றே ஒன்று மட்டும் சொல்லிக்கொள்கிறேனே:

in கட்டுரை

நன்றி: XKCD

“உலகை பற்றிய குறுகிய பார்வையே பெண்ணின் தாழ்விற்கு காரணம் என்றார் வி.எஸ்.நைபால். இதை நான் சொன்னால் ஆணாதிக்கம், அவர் சொன்னால் வி.எஸ்.நைபால்.” என்கிற எனது நுன்பதிவை முண்வைத்து

கய் டெபோர்டின்0 சூழ்நிலைத்துவக் கோட்பாடு9 முன்வைக்கும் பொதுக்காட்சி (spectacle)8 என்கிற விசயத்தின் தனிநபர் சார்ந்த/கார்ட்டீஷிய4 ரக அகவயப்படுதலின்0 நீட்சியாகவே இதை நான் பார்க்கிறேன். பெண்ணின் குறுகிய பார்வை என்கிற நைபாலின் விமர்சனப் பார்வையே குறுகிய பார்வைதான். ஆகவே அதை வழிமொழியும் எனது பார்வையும் தர்க்கபூர்வத் தொடர்ச்சியாகவாவது குறுகியதாக இருப்பதால் எனது மொத்த ட்வீட்டிற்கும் ஒரு உள்ளக சுய இரட்டைமை (உள்+அக = meta-llic duality)7 கிடைக்கிறது.

இதில் இன்னொரு அரசியல் உள்ளது. நைபால் ‘பெண்’9 என்று ‘மரியாதை’ப் பன்மை மூலம் மொத்தத் தாய்க்குலத்தையும் குறுகிய உலகப் பார்வையுடையதாக அவமதிப்பது சுவாரசிய நகைமுரண். நானாக இருந்தால் ‘பெண்கள்’ என்று குறிப்பிட்டிருப்பேன். இந்த உரைபுலத்தில் ஆண்நிலையில் இருந்தாற்போல் பெண்நிலையைப் பிறன்மை (The Other) என்று பார்ப்பது தனிப்புத்தியின் வெளிப்பாடு (அர்த்தசாஸ்திரத்தில் யுத்தத்தின் இயங்கியல் பற்றிக் கதையாடும் ழான் ஃபிலியோஸா (Jean Filliozat)8 அதர்மம் என்கிற ஒன்கிறைக் குறித்துப் பேசுகிறார். பிறன்மை என்கிற பதம் தொன்மம், சேர்மம் என்னும் மரூஉதல் பாட்டைப்படி சமஸ்கிருதத்தில் அதர்மம் (Otherness)4 என்று மாறுவதை நாம் காணலாம்.).

நைபால் பெண்களை அவர் பிறப்பால் ஏற்ற பால்நிலையிலிருந்து வியூகித்து (பார்த்தல் = viewing + யூகித்தல் = presumptivitationalizingness)0 பிறன்மைப்படுத்துகிறார் (Othering). இக்கரைக்கு அக்கரை பச்சை என்கிற சொலவடை அறியத்தருவது போல நைபாலினால் விமர்சிக்கப்படும் பெண்களுக்கு நைபான்மைதான் பிறன்மையாக இருக்கும் அல்லவா? இப் பரஸ்பரப் பிறன்மை, சாசனப் பிறன்மையை (Constitutive Otherness) மறுக்கிறது. கார்ட்டீஷிய அகவயவாதியான டெகார்ட்டே இதை ஒத்துக்கொள்ள மாட்டார். ஆண்நிலைxபெண்நிலை ஆகிய இரு பால்நிலைகளிலிருந்து கருதுகோளார்ந்து விலகி பிறன்மையைப் பார்த்தால், ஒருமையின் குறுகிய பார்வை குறித்த இன்னொருமையின் குறுகிய பார்வை ஒன்றுக்கொன்று ஒத்தாசையாக (complementary) இருப்பது புலந்தெரியும். எனவே பூனை கண்ணை மூடிக்கொண்டாலும் அக்கரை பச்சைதானா என்று நம்மை நாம் கேட்டுக்கொள்ளலாமா?

0984079840 – எனது கைபேசி எண்

Tags: , ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar