சுயநானூறு 1: மழை

in கவிதை

வெகுமழை போற்றுதும்! நல்மழை ஊற்றுதும்!
தகத்தகாயன் முகிலிற்பிந்தி யொளிபட
அகம்பிரி மகள்நீ ருகுவுமிவிழி
நிகரணி யுடைமேற் காண்வான் போற்றுதும்!

உரை:

நிரம்ப அளவிலான மழை போற்றுதற்குரியது. நல்லபூர்வமான மழை ஊற்றுதற்குரியது. பளபளத்து ஒளிரும் கதிரவன் மேகங்களுக்குப் பின்னே சென்று ஒளிந்துகொள்ள, திருமணம் செய்துகொண்டு பெற்றோரைப் பிரிந்து செல்லும்போது கண்ணீர் சிந்திக்கொள்ளும் பெண்ணின் உமி போன்ற கண்களைப் போல் நீரைக் கொட்டுகிற, மேலே இருந்தபடி நம்மைப் பார்க்கக்கூடிய வானம் போற்றுதற்குரியது.

Tags: , , ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar