இன்னும் சில மாக்கள்

in கவிதை

சகமிதிலே அமைதியுந்தான் ஓங்கிடுமா?
அகமுடையார்க் கதிலொருதுண் டுரித்திடுமா?
மன்பதையென் நூல்கள்தமை வாங்கிடுமா?
தின்பதைமுத லாளியினம் பகிர்ந்திடுமா?
கமலின்பட வசனமுங்கை எழுதிடுமா?
சமணமதம் மீண்டுமிங்கே தழைத்திடுமா?
தட்டிவிட்டாற் கதவுகளுந் திறந்திடுமா?
இட்டதுபட் டாயினது வாட்டிடுமா?

Tags: , ,

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar