ஈதும் ஊரா?

in கவிதை

மாதம் கிட்டத்தட்ட நவம்பர் ஆகிறது
ஊரில் கால்வைத்த இடமெல்லாம் நனைக்கிறது
தெருநீர்க் குட்டைகளில் நீர்மட்டம் குறைவதற்குள்
மஞ்சள் வெப்பம் நாயாய்ப் பாய்கிறது
நீரும் நிறமும் சரமாறித் தாக்கும் இவ்வூரில்
இன்னுமொரு நூற்றாண்டிற்குப் பனியாவது கினியாவது.

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar