பேயோன்

படித்ததில் பிடித்தவன்

செய்தித்தாள் பற்றி 2 கவிதைகள்

November 1st, 2011

1

மற்றவர்கள் செய்தித்தாள்களை
இருக்கைகளில் குந்தி
இரு கைகளில் ஏந்திப்
படிக்கிறார்கள்.
நானோ அதை
மேஜை மேல் வைத்துக்
கூர்ந்து கவனிக்கிறேன்.

2

செய்தித்தாளை
இடது மேலோரம் தொடங்கி
வலது கீழோரம் வரை
படிப்பதைவிடவும்
மின்விசிறிக் காற்றில் படபடக்க விட்டு
வேடிக்கை பார்ப்பது கவிதை.

பேயோன்

படித்ததில் பிடித்தவன்

பேயோன் is using WP-Gravatar